மேலும் அறிய

Dhanush: டபுள் டமாக்கா! இட்லி கடை ரிலீஸ் தேதி, அமரன் பட இயக்குனர் இயக்கத்தில் தனுஷ் - குஷியில் ரசிகர்கள்

பிரபல நடிகர் தனுஷ் இயக்கும் இட்லி கடை படத்தின் ரிலீஸ் தேதியும், அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அவர் நடிக்கும் D55 பட அறிவிப்பும் இன்று வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். நடிகர், இயக்குனர். தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்ட தனுஷ் தமிழ், இந்தி படங்கள் மட்டுமின்றி ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். இவரது இயக்கத்தில் தற்போது இட்லி கடை, நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கி வருகிறார். 

இட்லி கடை ரிலீஸ் தேதி:

இந்த நிலையில், இன்று தனுஷ் ரசிகர்களுக்கு இன்ப விருந்தாக இரண்டு அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. அவரது இட்லி கடை படம் வரும் ஏப்ரல் 10ம் தேதி தமிழ் புத்தாண்டு கொண்டாட்டமாக வெளியாக இருக்கிறது. அதேபோல, அமரன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ளார் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது. 

ராயன் படத்திற்கு பிறகு தனுஷ் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை இயக்கி வருவதுடன் குபேரா படத்தில் நடித்து வருகிறார். மறுமுனையில் இட்லி கடை என்ற படத்தையும் தீவிரமாக இயக்கி வருகிறார். இட்லி கடை படத்தில் நடிகர் தனுஷ் சிவனேசன் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

மிகவும் எளிய கிராமத்து பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் தனுஷூடன் நித்யா மேனன் நடிக்கிறார். திருச்சிற்றம்பலம் படத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் இணைந்து நடிப்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இட்லி கடை படம் அடுத்தாண்டு ஏப்ரல் 10ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அமரன் பட இயக்குனர் இயக்கத்தில் தனுஷ்:

சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத்தந்துள்ள அமரன் படத்தை இயக்கியவர் ராஜ்குமார் பெரியசாமி. இவருடைய அடுத்த படத்தின் நாயகனாக தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. தனுஷ் நடிக்கும் 55வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு இன்று பூஜை நடைபெற்றுள்ளது.

இப்போது, கோபுரம் ஃபிலிம்ஸ் ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சுஷ்மிதா அன்புச்செழியன் இந்த படத்தை தயாரிக்கின்றார். படத்தின் பூஜையில் வெற்றிமாறன் பங்கேற்றார். படத்தின் மற்ற நடிகர்கள், நடிகைகள் விவரம் இதுவரை அறிவிக்கப்படவில்லை. மேலும், படத்தின் டெக்னிசீயன்கள் குறித்த விவரங்களும் வெளியாகவில்லை.

தனுஷின் இயக்கி நடிக்கும் இட்லி கடை, நாயகனாக நடிக்கும் குபேரா உருவாகி வரும் நிலையில், தனுஷ் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் இயக்கி வருகிறார். இந்த படங்களின் பணிகளை முழுவதும் முடித்த பிறகு D55 படத்தின் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தனுஷ் ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

தலைப்பு செய்திகள்

த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
51 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. தர்மன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட்டம்!
51 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. தர்மன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட்டம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget