மேலும் அறிய

Dhanush - Aishwarya: பரஸ்பர விவாகரத்து கோரி வழக்கு.. நிரந்தரமாக பிரிய முடிவெடுத்த தனுஷ் - ஐஸ்வர்யா!

ஐஸ்வர்யா - தனுஷ் தம்பதியினர் கோலிவுட்டின் நட்சத்திர தம்பதிகளில் ஒருவராக திகழ்ந்தனர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ள நிலையில் ஐஸ்வர்யாவும் இயக்குநராக களம் கண்டார்.

பரஸ்பர விவாகரத்து கோரி நடிகர் தனுஷ், இயக்குநர் ஐஸ்வர்யா இருவரும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

பிரிந்த நட்சத்திர ஜோடி 

தமிழ் சினிமாவின் பன்முக கலைஞர்களில் ஒருவராக தனுஷ் திகழ்கிறார். இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகன் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் நுழைந்த அவர், இன்று நடிப்பின் அசுரனாக திகழ்கிறார். நடிகர்,பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என அடுத்தடுத்து ஒவ்வொரு துறையாக தனது திறமைகளை நிரூபித்து வருகிறார். இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளாக ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். 

சூப்பர் ஸ்டார் வீட்டு மருமகன் என்ற பெருமையைப் பெற்ற தனுஷை அன்றைய கோலிவுட் திரையுலகமே வியந்து பார்த்தது. இவ்வளவு ஏன் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் ஆச்சரியப்பட்டனர். என்றைக்கும் மாமனாரிடம் நடந்து கொள்வது மாதிரி ரஜினியிடம் தனது அன்பை வெளிப்படுத்தாமல் ஒரு தலைவர் - ரசிகர் என்ற பாணியிலேயே அனைத்து இடங்களிலும் அவருடன் உறவை பேணி வந்தார். 

ஐஸ்வர்யா - தனுஷ் தம்பதியினர் கோலிவுட்டின் நட்சத்திர தம்பதிகளில் ஒருவராக திகழ்ந்தனர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ள நிலையில் ஐஸ்வர்யாவும் இயக்குநராக களம் கண்டார். தனுஷை வைத்து “3” படத்தை எடுத்தார். பின்னர் வை ராஜா வை, லால் சலாம் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். 

விவாகரத்து கோரி மனுதாக்கல் 

இப்படியான நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதியினர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிவதாக சமூக வலைத்தளப் பக்கங்களில் அறிவித்தனர். 18 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்ததை அறிக்கை ஒன்றின் மூலம் அனைவருக்கும் தெரிவித்தனர். மற்ற நடிகைகளுடன் தனுஷ் நெருங்கி பழகுகிறார், பலரின் குடும்பங்களில் பிரச்சினைக்கு காரணமாக இருக்கிறார் என்றெல்லாம் அவரைப் பற்றி வதந்திகள் காட்டுத்தீயாய் பரவியது. கொரோனா ஊரடங்கு தொடங்கியதில் இருந்தே ஐஸ்வர்யா தனது மகன்களுடன் ரஜினி வீட்டில் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் 2022 ஆம் ஆண்டு பிரிவதாக அறிவிப்பு வெளியானது. 

சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பதற்குள் இருவருக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என பலரும் முயற்சித்தனர். ஆனால் 2 ஆண்டுகாலம் அதற்கு பலன் கிடைக்காமல் போய் விட்டது. தனுஷ், ஐஸ்வர்யா தத்தமது பாதையில் பயணிப்பதில் உறுதியாக இருந்ததால் கடைசி வரை தீர்வு கிடைக்கவே இல்லை. இந்நிலையில் இருவரும் குடும்ப நல நீதிமன்றத்தில் பரஸ்பர விவாகரத்து கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளனர். அதில் 2004 ஆம் ஆண்டு தங்களுக்கு நடந்த திருமணம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. 

தலைப்பு செய்திகள்

Jailer 2: ஆட்டம் போட வைக்கும் அல்ல போலேலோ.. ரிலீசானது ரஜினியின் ஜெயிலர் 2 பாடல்! வைப்தான் இனி
Jailer 2: ஆட்டம் போட வைக்கும் அல்ல போலேலோ.. ரிலீசானது ரஜினியின் ஜெயிலர் 2 பாடல்! வைப்தான் இனி
Karthigai Deepam Serial: மகளுக்கு சாதகமாக பஞ்சாயத்து தீர்ப்பு.. சவால் விட்டு கிளம்பிய அம்மா - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam Serial: மகளுக்கு சாதகமாக பஞ்சாயத்து தீர்ப்பு.. சவால் விட்டு கிளம்பிய அம்மா - கார்த்திகை தீபத்தில் இன்று
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
Embed widget