மேலும் அறிய

Arya Birthday: ‘சாக்லேட் பாய்’ முதல் ‘சார்பட்டா பரம்பரை’ ஆக்‌ஷன் நாயகன் வரை பயணம்.. பிறந்தநாள் வாழ்த்துகள் ஆர்யா!

​Arya Birthday: நடிகர் ஆர்யா இன்று தனது 43வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். 2005ம் ஆண்டு வெளிவந்த அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

​Arya Birthday: பெண்கள் விரும்பும் சாக்லேட் பாயான இருந்து ஆக்‌ஷன் ஹீரோவாக மிரட்டும் ஆர்யாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.

Arya Birthday: ‘சாக்லேட் பாய்’ முதல் ‘சார்பட்டா பரம்பரை’ ஆக்‌ஷன் நாயகன் வரை பயணம்.. பிறந்தநாள் வாழ்த்துகள் ஆர்யா!
 
நடிகர் ஆர்யா இன்று தனது 43 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். 2005ம் ஆண்டு வெளிவந்த அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆர்யா. முதல் படத்திலேயே பிரகாஷ் ராஜின் ரவுடி மகனாக நடித்த ஆர்யா, தனக்கான கரியரை வளர்க்கத் தொடங்கினார். 
 
அடுத்ததாக ஒரு கல்லூரியின் கதை, உள்ளம் கேட்குமே போன்ற படங்களின் மூலம் உருகி உருகி காதலிக்கும் காலேஜ் பாயாக வலம் வந்த ஆர்யா, பட்டியல், வட்டாரம், ஓரம் போ உள்ளிட்ட படங்களில் கேங்ஸ்டராக நடித்து அசத்தி இருப்பார். இப்படி ஆர்யாவின் கெரியர் கிராஃப் வளர்ந்து வரும் நிலையில், அவருக்கு ஒரு டர்னிங் பாயிண்டாக அமைந்தது தான் நான் கடவுள் படம். பாலா இயக்கத்தில் அகோரியாக நடித்த ஆர்யா தான் ஒரு சிறந்த நடிகன் என்பதை நிரூபித்தார். காதலில் விழுந்த டீனேஜ் பாயாகவும், கேங்ஸ்டராகவும் நடித்த ஆர்யா காமெடி ஜானரிலும் அசத்த தொடங்கினார். 

Arya Birthday: ‘சாக்லேட் பாய்’ முதல் ‘சார்பட்டா பரம்பரை’ ஆக்‌ஷன் நாயகன் வரை பயணம்.. பிறந்தநாள் வாழ்த்துகள் ஆர்யா!
 
சந்தானத்துடன் இணைந்து சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க படங்களில் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்தார். இதற்கிடையே ஏ.எல். விஜய் இயக்கத்தில் எமி ஜாக்சனுடன் ஆர்யா நடித்த மதராசப்பட்டினம் படம், அவரின் கரியரின் திருப்புமுனை படமாக அமைந்தது. நான் கடவுள் படத்திற்கு பிறகு மீண்டும் பாலாவுடன் இணைந்த அவன் இவன் படத்தில் நடித்து ஸ்கோர் செய்தார்.
மாதவனுடன் இணைந்து வேட்டை படத்தில் நடித்து ஆக்‌ஷனில் அசத்தி இருப்பார். அஜித்துடன் இணைந்து  ஆரம்பம் படத்தில் நடித்த ஆர்யா நயன்தாரா உடன் இணைந்து ராஜா ராணி படத்தில் நடித்து ரசிகர்களை கொண்டாட வைத்தார். 

Arya Birthday: ‘சாக்லேட் பாய்’ முதல் ‘சார்பட்டா பரம்பரை’ ஆக்‌ஷன் நாயகன் வரை பயணம்.. பிறந்தநாள் வாழ்த்துகள் ஆர்யா!
 
தொடர்ந்து கஜினிகாந்த், காப்பான், மகாமுனி, எனிமி படங்களில் நடித்த ஆர்யாவுக்கு பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த ‘சார்பட்டா பரம்பரை’ படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. அண்மையில் வெளிவந்த காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் படமும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து ஆர்யாவின் நடிப்பில் அடுத்த ஆண்டு சார்பட்டா 2, மிஸ்டர் எக்ஸ், சங்கமித்ரா உள்ளிட்ட படங்கள் வெளிவர உள்ளன.
 
இப்படி தமிழ் சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் ஹீரோவாக வலம் வரும் ஆர்யா இன்று தனது 43வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்களும், திரைப் பிரபலங்களும் வாழ்த்து கூறி வருகின்றனர். நடிகை சாயிஷாவை திருமணம் செய்த ஆர்யாவுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
BYD Flex Fuel Hybrid SUV: பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Embed widget