மேலும் அறிய

Vidamuyarchi : மீண்டும் தொடங்கியது விடாமுயற்சி... அப்டேட் கொடுத்த ஆக்‌ஷன் கிங் அர்ஜூன்

அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடங்கியுள்ளதாக நடிகர் அர்ஜூன் தெரிவித்துள்ளார்.

அர்ஜூன் மகள் திருமணம்

ஆக்‌ஷன் மிங் அர்ஜூனின் மூத்த மகளான ஐஸ்வர்யாவுக்கு நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் கடந்த ஜூன் 10 ஆம் தேதி திருமணம் நடந்தது. அர்ஜூன் தொகுத்து வழங்கிய சர்வைவல் தொடரில் பழக்கம் ஏற்பட்டு ஐஸ்வர்யா மற்றும் உமாபதிக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இருவீட்டாரின் சம்மதத்துடன் இந்த திருமணம் நடைபெற்றது. திருமணத்தைத் தொடர்ந்து ஜூன் 14 ஆம் தேதி வரவேற்பு நிகழ்ச்சியும் நடந்து முடிந்தது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் , நயந்தாரா, விக்னேஷ் சிவன் உள்ளிட்ட தமிழ் சினிமாவின்  பிரபலங்கள் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். நிகழ்வைத் தொடர்ந்து நடிகர் அர்ஜூன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். இதில் அவர் தனது மகள் திருமணம் குறித்த எல்லா கேள்விகளுக்கும் பதிலளித்தார். அதே நேரத்தில் தற்போது தான் நடித்து வரும் விடாமுயற்சி படத்தைப் பற்றிய தகவல்களையும் பகிர்ந்துகொண்டார்.

மீண்டும் தொடங்கியது விடாமுயற்சி படப்பிடிப்பு

பாதியில் நிறுத்தபட்ட விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடங்கியுள்ளதாகவும் இன்னும் 30 சதவீதம் படப்பிடிப்பு மட்டுமே மீதமிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். விடாமுயற்சி வித்தியாசமான ஒரு படமாக இருக்கும் என்றும் இந்த ஆண்டு தீபாவளிக்கு படம் நிச்சயம் வெளியாகும் என்றும் அர்ஜூன் தெரிவித்துள்ளார். 

 விடாமுயற்சி

மகிழ் திருமேணி இயக்கும் விடாமுயற்சி படத்தை லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. அஜித் , அர்ஜூன் , த்ரிஷா, ஆரவ் , ரெஜினா கஸாண்ட்ரா உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

கடந்த ஆண்டு இப்படத்தின் அறிவிப்பு வெளியாகி அஜித் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியது. கடந்த ஆண்டு முழுவதும் அஜர்பைஜானில் படப்பிடிப்பு நடந்து வந்தது. ஆனால் படக்குழு தரப்பில் இருந்து படம் குறித்த அடுத்தகட்ட பெரிய அப்டேட் எதுவும் வரவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் விடாமுயற்சி படத்தில் ஆர்வமிழந்துள்ளார்கள். அந்த சமயத்தில் தான் அஜித் கார் ஓட்டி விபத்திற்குள்ளான வீடியோக்களை படக்குழு வெளியிட்டது. இந்த வீடியோ அஜித் ரசிகர்களிடையே பேசுபொருளாகவும் மற்ற தரப்பினர்களிடையே மீம்களாகவும் மாறி வைரலாகியுள்ளது. 

படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் ஒரே நேரத்தில் ரஜினியின் வேட்டையன் , கமலின் இந்தியன் 2 என் பெரிய படங்களை தயாரித்து வருவதால் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்புக்கு ஒரு சிறு இடைவெளி தேவைப்பட்டது. ஆனால் சமூக வலைதளங்களில் படம் கைவிடப் பட்டதாக தவறான தகவல்கள் காட்டுத்தீயாக பரவியது.

இந்த இடைப்பட்ட காலத்தில் அஜித் தனது 63 ஆவது படமான குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பை தொடங்கினார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் இப்படத்தின் முதற்கட்டமாக ஆக்‌ஷன் காட்சி ஒன்று படப்பிடிப்பு முடிந்துள்ளது.

 

 

 

தலைப்பு செய்திகள்

DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!
‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்
‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Wagon R CNG Real Milage: ஒரு கிலோ எரிபொருளில் மாருதி வேகன் ஆர் CNG எவ்வளவு மைலேஜ் தரும்.? சோதனை முடிவுகள் இதோ
ஒரு கிலோ எரிபொருளில் மாருதி வேகன் ஆர் CNG எவ்வளவு மைலேஜ் தரும்.? சோதனை முடிவுகள் இதோ
Scorpio N Facelift on EMI: ரூ.1 லட்சம் முன்பணம் செலுத்தி மஹிந்திரா ஸ்கார்பியோ N ஃபேஸ்லிஃப்ட் வாங்கினால் மாத EMI எவ்வளவு.? முழு விவரம்
ரூ.1 லட்சம் முன்பணம் செலுத்தி மஹிந்திரா ஸ்கார்பியோ N ஃபேஸ்லிஃப்ட் வாங்கினால் மாத EMI எவ்வளவு.? முழு விவரம்
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
Embed widget