மேலும் அறிய

Anupama | ஆசிரியர் தகுதி தேர்வு எழுதினாரா அனுபமா ? - வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

புகைப்படத்தில் கண்ணாடி அணிந்து , ஒரு ஆசிரியை போலவே உள்ளார் அனுபமா. இதனை புகைப்படம் எடுத்து இணையதளத்தில் பகிர்ந்துள்ளார் சம்மந்தப்பட்ட நபர்.

மலையாளத்தில் பிரேமம் படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். “அது எந்தா எனக்கு மாத்ரம் ஹார்ட் ஷேப்” என ஒரு கட்லட் வசனம் மூலம் தமிழ் இளைஞர்கள் இதயங்களில் குடியேறியவர் அனுபமா. தனுஷ் நடிப்பில் வெளியான கொடி படம் மூலமாக தமிழ் சினிமாவில் தடம் பதித்தார்.தற்போது “தள்ளிப்போகாதே” என்ற திரைப்படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக நடித்து வருகிறார்.  தமிழ், மலையாளம் மட்டுமல்லாது தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார் அனுபமா. சமூக வலைத்தளங்களில் செம ஆக்டிவாக இருக்கும் அனுபமா அவ்வபோது தனது கெட்டப்புகளை மாற்றியமைத்து ஃபோட்டோ ஷூட் எடுத்து அதனை இன்ஸ்டாகிராம் போன்ற வலைத்தள பக்கங்களில் பதிவிடுவார். இந்நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட ஒரு பதிவு பயங்கர தற்பொழுது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

Anupama | ஆசிரியர் தகுதி தேர்வு எழுதினாரா அனுபமா ? - வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

பீகார் மாநிலத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதி தேர்வு(STET)  முடிவுகள் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. சில தொழில்நுட்ப பிரச்சனையின் விளைவாக சமஸ்கிருதம், உருது மற்றும் அறிவியல் ஆகிய பாடங்களின் மதிப்பெண்கள் மட்டும் வெளியிட முடியாமல் இருந்தன. விடுப்பட்டிருந்த அந்த   மூன்று பாடங்களின் மதிப்பெண்களை அரசு இணையத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு எழுதிய ரிஷிகேஷ் குமார் என்பவர் தனது தேர்வு முடிவுகள் குறித்து தெரிந்துக்கொள்ள ஆர்வமாக  இணையதளத்தை நாடியுள்ளார். சென்றவருக்கு காத்திருந்தது பேரதிர்ச்சி , தேர்வு முடிவு பக்கத்தில் ரிஷிகேஷ் குமார் புகைப்படம் இருக்க வேண்டிய இடத்தில் தென்னிந்திய நடிகை அனுபமா பரமேஸ்வரன் புகைப்படம் இருந்திருக்கிறது. புகைப்படத்தில் கண்ணாடி அணிந்து , ஒரு ஆசிரியை போலவே உள்ளார் அனுபமா. இதனை புகைப்படம் எடுத்து இணையதளத்தில் பகிர்ந்துள்ளார் சம்மந்தப்பட்ட நபர். இது வைரலாக பரவி வருகிறது. 

Anupama | ஆசிரியர் தகுதி தேர்வு எழுதினாரா அனுபமா ? - வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்


மேலும் நெட்டிசன்கள் பீகாரில் டீச்சராக தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்துக்கள் என கிண்டலடித்து வருகின்றனர். முன்னதாக அனுபமா தனது வலைத்தள பக்கத்தில்  க்ளாமரான புகைப்படம் ஒன்ரை பகிர்ந்து , “என்னை நான் மேம்படுத்திக்கொண்டிருக்கிறேன், நீங்கள் எப்படி “ என ஒரு பதிவிட்டிருந்தார். இதற்கு கீழே கமண்ட் செய்த பலரும், அதனால்தான் ஆசிரியர் பணியை தேர்வு செய்தீர்களா என இந்த சம்பவம் தொடர்பாகவே கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். இதனால் கடுப்பான நடிகை அனுபமா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஸ்டோரியில் இது குறித்து பகிரவே சம்பவம் காட்டுத்தீ போல பரவ ஆரமித்திருக்கிறது.இதேபோல கடந்த 2019 ஆம் ஆண்டு பீகார் பொது சுகாதார பொறியியல் துறையின் தகுதிப்பட்டியல் வெளியானது. அதில் பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோனின் புகைப்படம் இடம்பெற்று சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.  

 

 

தலைப்பு செய்திகள்

பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
Embed widget