மேலும் அறிய

Valimai Update | கடைசியாக கிடைத்தேவிட்டது வலிமை அப்டேட்..! அஜித்துக்கு இந்த ரோலா?

வலிமை திரைப்படத்தில் அஜித் கதாபாத்திரம் தொடர்பாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல நடிகர் அஜித் நடிப்பில் ஹெச்.வினோத், இயக்கத்தில் வெளியாக உள்ள திரைப்படம் வலிமை. இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தை போனி கபூர் மற்றும் ஜி ஸ்டியோஸ் இணைந்து தயாரித்து வருகின்றனர். அஜித் நடிக்கும் 61-வது படம் இது என்பதால் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக அவருடைய ரசிகர்கள் சமூக வலைத்தளம் மற்றும் அனைத்து இடங்கள் என எங்கு பார்த்தாலும் வலிமை அப்டேட் சொல்லுங்க என்ற கேட்டுக்கொண்டு இருந்தனர். 

இந்நிலையில் வலிமை திரைப்படம் தொடர்பாக ஒரு விறுவிறுப்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் நடிகர் அஜித் ஒரு சிபிசிஐடி காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார் என்று தெரியவந்துள்ளது. இது தொடர்பாக இயக்குநர் வினோத்திற்கு நெருக்கமான வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இப்படத்தில் அஜித் ஒரு மிகப்பெரிய சண்டை காட்சியிலும் நடித்துள்ளதாகவும் தகவல் தெரியவந்துள்ளது. ஏற்கெனவே இப்படத்தில் அஜித் ஒரு ஐபிஎஸ் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியானது. தற்போது இந்த தகவல் அதை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. 


Valimai Update | கடைசியாக கிடைத்தேவிட்டது வலிமை அப்டேட்..! அஜித்துக்கு இந்த ரோலா?

முன்னதாக அவுட்லுக் தளத்திற்கு படத்தின் இயக்குநர் ஹெச் வினோத் மற்றும் பிஆர்.ஓ சுரேஷ் சந்திரா என இருவரும் பேட்டியளித்திருந்தனர். அதில், "வலிமை திரைப்படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். தொடக்கத்தில் அவர்களுடைய காட்சிகளை எடுத்துவிட்டோம். அதற்கு பின்னர் கொரோனா ஊரடங்கு காரணமாக சில காட்சிகள் எடுக்க முடியாமல் போனது. ஊரடங்கு தளர்விற்கு பிறகு மீண்டும் அந்தக் காட்சிகள் படமாக்கப்பட்டன. ஆனால் அதற்கு நிறைய நடிகர்கள் சரியாக நேரம் தராததால் சில சிக்கல் ஏற்பட்டது. எனினும் அவற்றை சரிசெய்து நாங்கள் மீதமுள்ள காட்சிகளை எடுத்து முடித்தோம். மேலும் படத்தில் ஒரு சண்டை தொகுப்பு இன்னும் எடுக்கப்படாமல் உள்ளது. அதை வெளிநாட்டில் படமாக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம். எனினும் தற்போது கொரோனா காலம் என்பதால் வெளிநாடுகளில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆகவே இந்த நிலைமை சரியான பின்பு அந்த சண்டை காட்சி முழுவதும் எடுத்து முடிக்கப்படும். இதற்கிடையே டப்பிங் வேலைகளும் மும்முரமாக நடைப்பெற்று வருகிறது. இவை அனைத்தும் முடிந்து விரைவில் படம் வெளியாகும்" எனத் தெரிவித்திருந்தனர். 

இந்தப் படத்தில் உள்ள பாடல்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அஜித்-யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் தீனா தொடங்கி பல வெற்றி படங்கள் அமைந்துள்ளன. எனவே இந்தப் படத்தின் பாடல்களுக்கும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதுவும் ஹிட் அடிக்கும் என்று அஜித் ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். ஹெச்.வினோத் உடன் அஜித் இணைந்து நடிக்கும் இரண்டாவது திரைப்படம் இதுவாகும். 

மேலும் படிக்க:லிங்குசாமி படத்தில் நடிக்கவில்லை; போட்டு உடைத்தார் மாதவன்!

தலைப்பு செய்திகள்

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
Tamil Nadu Budget 2026 Highlights: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026: நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
TN Budget 2026: சமூக நீதியை காப்பாற்றினாரா CM விஜய்? பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி என்ன? முக்கிய திட்டங்களின் லிஸ்ட்
சமூக நீதியை காப்பாற்றினாரா CM விஜய்? பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி என்ன? முக்கிய திட்டங்களின் லிஸ்ட்
Tamil Nadu Budget 2026: இனி ரேஷன்கடையில் முழு கோதுமைக்கு பதிலாக கோதுமை மாவு.! பொதுமக்களுக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்பு
இனி ரேஷன்கடையில் முழு கோதுமைக்கு பதிலாக கோதுமை மாவு.! பொதுமக்களுக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்பு
அடி தூள்.! 25,000 டூ 35,000 ரூபாயாக உயர்வு.. ஹஜ்க்கு செல்பவர்களுக்கு ஜாக்பாட்- பட்ஜெட்டில் அசத்தல்
அடி தூள்.! 25,000 டூ 35,000 ரூபாயாக உயர்வு.. ஹஜ்க்கு செல்பவர்களுக்கு ஜாக்பாட்- பட்ஜெட்டில் அசத்தல்
தமிழ்நாடு To கர்நாடகாவிற்கு ஜல்லுனு போகலாம்.! பொம்மசந்திரா வரை மெட்ரோ திட்டம்- பட்ஜெட்டில் அசத்தல்
தமிழ்நாடு To கர்நாடகாவிற்கு ஜல்லுனு போகலாம்.! பொம்மசந்திரா வரை மெட்ரோ திட்டம்- பட்ஜெட்டில் அசத்தல்
Embed widget