மேலும் அறிய

Ajith Rifle Shooting: அஜித்தின் அடுத்த அவதாரம்..! தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்பு..!

நடிகர் அஜித்குமார் தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் வரும் செப்டம்பர் மாதம் பங்கேற்க உள்ளார். இதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தமிழ்த்திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவருமானவர் நடிகர் அஜித்குமார். இவர் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், சண்டைக்காட்சி ஒன்று மட்டும் படமாக்கப்பட வேண்டியுள்ளது. இதற்காக படக்குழுவினர் ரஷ்யா செல்ல திட்டமிட்டுள்ளனர்.

நடிகர் அஜித்குமார் திரைப்பட நடிகராக மட்டுமின்றி ஆளில்லா குட்டி விமானம் தயாரிக்கும் பொறியாளராகவும், துப்பாக்கி சுடும் வீரராகவும் பன்முகத் திறன் கொண்டவராக திகழ்ந்து வருகிறார். அவர் சமீபகாலமாக துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் தீவிரமாக ஆர்வம் காட்டி வருகிறார்.

Ajith Rifle Shooting: அஜித்தின் அடுத்த அவதாரம்..! தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்பு..!

சென்னை ரைபிள் கிளப்பின் உறுப்பினராக உள்ள நடிகர் அஜித்குமார், அவ்வப்போது அங்கு சென்று தீவிர பயிற்சி எடுப்பதை வழக்கமாக கொண்டு வருகிறார். சமீபகாலமாக, அவர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தீவிரமாக ஆர்வம் காட்டி வருகிறார். அதற்காக, தீவிர பயிற்சியும் எடுத்து வருகிறார்.

சமீபத்தில் தமிழ்நாடு அளவில் நடைபெற்ற 46வது மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கங்களை கைப்பற்றி அந்த போட்டியில் முதலிடத்தை பிடித்தார். அவரது இந்த வெற்றிக்கு தமிழக அரசியல் தலைவர்களும், திரைப்பிரபலங்களும், அவரது ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

Ajith Rifle Shooting: அஜித்தின் அடுத்த அவதாரம்..! தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்பு..!

இந்த நிலையில், வரும் செப்டம்பர் மாதம் தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் நடிகர் அஜித்குமார் பங்கேற்க உள்ளார். இதற்காக படப்பிடிப்பு அல்லாத சமயங்களில், அஜித்குமார் தீவிர பயிற்சி எடுத்து வருகிறார். சமீபத்தில் அவர் பயிற்சி எடுத்த வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைதளங்கில் வைரலாகியது.

அஜித்குமார் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளதை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். நடிகர் அஜித்குமார் நடிகராக மட்டுமில்லாமல் கார்பந்தய ஓட்டுநராகவும், மெக்கானிக், ஏரோ மாடலிங் தயாரிப்பு, சமையற்கலை என்று பல்வேறு துறைகளிலும் தனது முத்திரையை பதித்து வருகிறார். திரைத்துறையில் இருப்பவர்கள் பெரும்பாலும் திரைத்துறையிலே பன்முகத்திறன் கொண்டவர்களாக வலம் வரும் சூழலில், நடிகர் அஜித்குமார் மட்டும் திரைத்துறையையும் தாண்டி பல்வேறு துறைகளிலும் தனது முத்திரையை பதித்து வருவதற்கு பலரும் அவருக்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

Ajith Rifle Shooting: அஜித்தின் அடுத்த அவதாரம்..! தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்பு..!

நடிகர் அஜித்குமார் அண்ணா பல்கலைகழகத்தின் மாணவர்களை கொண்ட தக்‌ஷா குழுவினருக்கு ஆலோசகராகவும் உள்ளார். அவரது ஆலோசனையின் பேரில் செயல்பட்ட தக்‌ஷா குழுவினர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆளில்லா விமானங்களை மருத்துவ பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதற்கான போட்டியில் பங்கேற்று 2ம் இடத்தை பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

Jailer 2 Collection: அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
TN Weather News: 34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
TN Govt: ஊழியர்களுக்கு செம்ம ஜாக்பாட்..! தனிநபர் கடனை ரூ.35 லட்சமாக உயர்த்திய தமிழக அரசு - ரூல்ஸ் என்ன?
ஊழியர்களுக்கு செம்ம ஜாக்பாட்..! தனிநபர் கடனை ரூ.35 லட்சமாக உயர்த்திய தமிழக அரசு - ரூல்ஸ் என்ன?
Jailer 2 Collection: அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
இந்தியாவையே சுத்தி வரலாம்போலயே.. Royal Enfield Himalayan 750 பைக்கில் அப்படி என்ன இருக்கு? விலை எப்படி?
இந்தியாவையே சுத்தி வரலாம்போலயே.. Royal Enfield Himalayan 750 பைக்கில் அப்படி என்ன இருக்கு? விலை எப்படி?
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
முந்திரி தோட்டத்தில் மரப்பெட்டிக்குள் காத்திருத்த அதிர்ச்சி: அரியலூர் போலீசார் அதிரடியில் இருவர் கைது
முந்திரி தோட்டத்தில் மரப்பெட்டிக்குள் காத்திருத்த அதிர்ச்சி: அரியலூர் போலீசார் அதிரடியில் இருவர் கைது
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
Embed widget