மேலும் அறிய

Ajith Kumar : யாகத்தில் எரியும் தீ.. பய பக்தியுடன் அஜித்.. குருவாயூர் கோயிலில் சாமி தரிசனம் செய்த புகைப்படம் வைரல்!

நடிகர் அஜித்குமார் குருவாயூர் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ள புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

டிகர் அஜித் குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'வலிமை' திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்கள் பெற்றது. தொடர்ந்து, திரையரங்குகளில் பெரும் வசூலை ஈட்டி வரும்நிலையிலும், Zee 5 இல் OTT வெளியிடப்பட்டதில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது. வலிமை படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் மீண்டும் தனது 61வது படத்தில் எச். வினோத் உடன் இணைந்துள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் இருந்து தொடங்க இருக்கிறது. 

Ajith Kumar : யாகத்தில் எரியும் தீ.. பய பக்தியுடன் அஜித்.. குருவாயூர் கோயிலில் சாமி தரிசனம் செய்த புகைப்படம் வைரல்!

இந்தநிலையில், ak 61 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாக நடிகர் அஜித் குமார் குருவாயூர் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் பரவி படு வைரலாகி வருகிறது. 

'ஏகே 61' ஒரு வங்கிக் கொள்ளை திரைப்படம் என்றும், இதில் அஜித் குமார் எதிர்மறையான முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படமானது ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமான செட்கள் அமைக்கப்பட்டு, படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு தீபாவளி வெளியீடாக படத்தை மூன்று மாதங்களுக்குள் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் படக்குழு திட்டமிட்டுள்ளது. 

தற்போது, 'ஏகே 61' படத்தின் ஹாட் அப்டேட் என்னவெனில், படம் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்றாலும் அதில் சண்டை காட்சிகள் குறைவாகவே இருக்கும் என்றும், அஜீத் தனது கேரியரில் முதல்முறையாக சண்டை காட்சிகள் இல்லாத படத்தில் நடிக்க இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.  இருப்பினும், அஜித் நடிக்கும் இந்த திரைக்கதை மிகவும் உக்கிரமாகவும், ஆணிவேராகவும் இருக்கும் என்றும், ரசிகர்கள் அவரைப் பார்த்துப் பழகியதை விட முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் இருப்பார் என்றும் குழுவினருக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவிக்கிறது. 

'ஏகே 61' படம் எச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரித்து வருகிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார்.ஏற்கனவே இவர்களது கூட்டணியில் ‘நேர் கொண்ட பார்வை’, ‘வலிமை’ படங்களைத் தொடர்ந்து இவர்கள் இணையும் மூன்றாவது படம் இதுவாகும். ‘ஏகே 61’ படத்திற்கான அஜித்தின் தோற்றமும் வெளியாகி மிகப்பெரிய வைரலானது. தற்போதைய நிலவரப்படி அதிதி ராவ் ஹைதாரி, தபு, யோகி பாபு பிரகாஷ் ராஜ் மற்றும் கவின் ஆகியோர் முக்கிய நடிகர்கள் என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Embed widget