மேலும் அறிய

Actor Ajith: மனிதாபிமானம் மிக்க அஜித்! துக்க நிகழ்வுகளில் மட்டும் பங்கேற்காதது ஏன்? இதுதான் காரணமா?

தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமான அஜித்குமார் சில பிரபலங்களின் துக்க நிகழ்வுகளில் பங்கேற்காதது ஏன்? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் அஜித்குமார். இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவரது படத்திற்கான முதல் நாள் முதல் காட்சி ரசிகர்கள் கூட்டம் என்பது மற்ற எந்த நடிகருக்கும் இல்லாத ஒன்றாகும்.

தேவா மரணத்திற்கு இரங்கல்கூட தெரிவிக்காத அஜித்:

சமீபத்தில் பிரபல இசையமைப்பாளர் தேவா காலமானார். அவரது மறைவிற்கு மொத்த திரையுலகமும் கண்ணீர் அஞ்சலி செலுத்தியது. ஆனால், அஜித்குமார் தரப்பில் இருந்து எந்த இரங்கல் செய்தியும் அறிவிக்கப்படவில்லை.

நடிகர் அஜித்தின் ஆரம்பகால திரைவாழ்வில் மிகப்பெரிய உச்சத்தை அளித்த படங்களுக்கு இசையமைத்தவர் தேவா. அஜித்தின் 13 படங்களுக்கு தேவா இசையமைத்துள்ளார். ஆசை, வான்மதி, காதல் கோட்டை, ஆனந்த பூங்காற்றே, வாலி போன்ற மாபெரும் வெற்றி பெற்ற படங்களுக்கு தேவாவே இசையமைத்தார். ஆனால், அவரது மறைவிற்கு அஜித் இரங்கல் தெரிவிக்காததும், அவரது குடும்பத்தினர் யாரும் நேரில் வராததும் பெரும் விமர்சனத்திற்கு உண்டாகியது.

துக்க நிகழ்வுகளில் பங்கேற்காதது ஏன்?

அதேசமயம், ஜெயலலிதா மறைவிற்கு வெளிநாட்டில் இருந்து வந்து நேரில் அஞ்சலி செலுத்தினார், மனோராமா மறைவிற்கு காலில் அடிபட்டபோதிலும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். ஆனாலும், சில பிரபலங்கள் இறுதி அஞ்சலியில் அவர் பங்கேற்காமல் இருப்பது ஏன்? என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து வருகிறது.

தமிழ் திரையுலகில் உச்சநட்சத்திரமாக இருந்தபோதிலும் நல்ல மனிதர், அடுத்தவருக்கு உதவும் குணம் கொண்டவர் என்று பல நல்ல பண்புகளை வைத்திருக்கும் அஜித்குமார் ஏன் துக்க நிகழ்வுகளில் பங்கேற்பதில்லை என்ற கேள்வி மட்டும் பலரது மனதிலும் எழுந்து கொண்டே இருக்கிறது.

காரணம் என்ன?

இந்த நிலையில், அவரது வாழ்வில் நடந்த சம்பவம் ஒன்றே இதற்கு காரணமாக கருதப்படுகிறது. அதாவது, கடந்த 2000ம் ஆண்டு வாக்கில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளருக்கும், பெப்ஸி தொழிலாளர்களுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு படப்பிடிப்பு நடக்காமலே இருந்தது. 

இந்த காலகட்டத்தில் அஜித்குமார் தொழிலாளர்களுக்கு பக்கபலமாக அவர்களுக்கு ஆதரவுக்குரல் எழுப்பினார். இதனால், ஆத்திரமடைந்த தயாரிப்பாளர்கள் அவருக்கு எதிராக ஆதங்கத்துடன் இருந்தனர். அந்த சமயம் அவருக்கு முன்பணம் கொடுத்திருந்த தயாரிப்பாளர் ஒருவர் தான் கொடுத்திருந்த ரூபாய் 10 லட்சம் பணத்தை மாலைக்குள் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று கறாராக கூறிவிட்டார்.

நன்றி மறக்காத அஜித்:

அப்போது கையில் காசு இல்லாமல் தவித்த அஜித்குமார் பலரிடமும் பண நெருக்கடியில் உதவி கேட்டபோது பலரும் கை விரித்துவிட்டனர். அப்போது, செளகார்பேட்டையில் வசித்து வந்த திரைப்படங்களுக்கு நிதி உதவி செய்யும் ஒருவர் மட்டுமே உடனடியாக பணம் கொடுத்து உதவியுள்ளார். அந்த நன்றியை மறக்காத அஜித்குமார் அவரது மறைவின்போது குறுகலான தெருவில் அவரது வீடு இருந்தபோதிலும், தான் பிரபலமாக இருந்தாலும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும், அவரது உடல் அடக்கம் செய்யப்படும் வரை இறுதி ஊர்வலத்திற்கு நேரில் சென்று பங்கேற்றார். இது திரையுலகினர் அனைவரும் அறிந்தது.

மேலும், பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சியின்போது நடிகர் அஜித்குமார் கருணாநிதி முன்பாகவே திரைப்பட நடிகர்களை இதுபோன்ற நிகழ்வுகளில் பங்கேற்க கட்டாயப்படுத்தி மிரட்டுகின்றனர் என்று வெளிப்படையாகவே பேசியிருப்பார். அஜித்தின் அந்த பேச்சு அப்போது மொத்த தமிழ்நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. 

அஜித்திற்கு மிரட்டல்:

அந்த சம்பவத்தின்போது திமுக-வின் முக்கிய நிர்வாகிகள் பலரும் அஜித்திற்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்ததாகவும் ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இந்த சம்பவம் உச்சத்திற்குச் சென்றபோது நடிகர் ரஜினிகாந்த் கருணாநிதி வீட்டிற்கு அஜித்தை அழைத்துச் சென்று இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்தார்.

இந்த சம்பவத்தின்போதும் திரையுலகினர் யாரும் அஜித்திற்கு ஆதரவு கரம் நீட்டவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், அப்போது திமுக ஆட்சியில் இருந்ததால் அஜித்தி்ற்கு அவர்கள் ஆறுதல் கூறவும் தயங்கி ஒருவர் கூட அவரிடம் அழைப்பு விடுத்து ஆறுதல் கூறவில்லை என்றும் கூறப்படுகிறது. 

மன உளைச்சலுக்கு ஆளான அஜித்:

இந்த இரண்டு சம்பவமும் அஜித்தை மிக கடுமையாக பாதித்துள்ளது. இதனால், மனம் உடைந்த அஜித்குமார் அப்போது தனக்கு ஆதரவுக்கரம் நீட்டியவர்களுக்கு மட்டும் எந்த சூழலிலும் உடனிருக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளார். அதேசமயம், தன்னை கைவிட்டவர்களுடன் நட்பு பாராட்டக்கூடாது என்றும் அவர் முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது. 

இந்த சம்பவத்தின் காரணமாகவே நடிகர் அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் சிலரது மரணங்கள், துயர நிகழ்வுகளில் மட்டும் பங்கேற்பதாக பிரபல திரைப்பட பத்திரிகையாளர் ஒருவர் யூடியூப் நேரலையில் தெரிவித்துள்ளார். எந்த நிகழ்வுகளில் பங்கேற்காவிட்டாலும் ஒரு மனிதனின் துக்க நிகழ்வுகளில் பங்கேற்க வேண்டும் என்று பொதுவாக ஒரு கருத்து உள்ளது.

 

 

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

விஜய் தேவரகொண்டா vs ரிஷிகாந்த்.. பெண்கள் பார்வையில் யார் Green Flag?
விஜய் தேவரகொண்டா vs ரிஷிகாந்த்.. பெண்கள் பார்வையில் யார் Green Flag?
தனுஷ் படத்தில் போலீஸ் வேடத்தில் சாய் பல்லவி..ஓம் பட க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது
தனுஷ் படத்தில் போலீஸ் வேடத்தில் சாய் பல்லவி..ஓம் பட க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது
ஆபாச வார்த்தையில் திட்டிய விஜய் தேவரகொண்டா...இவருக்கு வாய்ல தான் சனி
ஆபாச வார்த்தையில் திட்டிய விஜய் தேவரகொண்டா...இவருக்கு வாய்ல தான் சனி
" இதில் என்ன தவறு இருக்கிறது ?"கணவர் விஜய் தேவரகொண்டா குறித்த சர்ச்சைக்கு ராஷ்மிகா மந்தனா விளக்கம்!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“யாருக்கு உறுத்தியது எனத் தெரியவில்லை” - லஞ்சப் புகாரில் கைதான அன்பில் மகேஸ் பரபரப்பு பேட்டி
“யாருக்கு உறுத்தியது எனத் தெரியவில்லை” - லஞ்சப் புகாரில் கைதான அன்பில் மகேஸ் பரபரப்பு பேட்டி
செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பு: நீர் திறக்கும் முன் மக்களுக்கு எச்சரிக்கை - முதலமைச்சர் விஜய் உத்தரவு
செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பு: நீர் திறக்கும் முன் மக்களுக்கு எச்சரிக்கை - முதலமைச்சர் விஜய் உத்தரவு
கியூபாவை கைப்பற்றப்போவதாக ட்ரம்ப் மிரட்டல் - 67 ஆண்டுகளாக நிறைவேறாத அமெரிக்காவின் ஆசை!
கியூபாவை கைப்பற்றப்போவதாக ட்ரம்ப் மிரட்டல் - 67 ஆண்டுகளாக நிறைவேறாத அமெரிக்காவின் ஆசை!
Anbil Mahesh Arrest: அன்பில் மகேஸ் கைது ஏன்? பின்னணியில் நடந்தது என்ன? பரபரப்பு வீடியோ
அன்பில் மகேஸ் கைது ஏன்? பின்னணியில் நடந்தது என்ன? பரபரப்பு வீடியோ
MK Stalin: அன்பில் மகேஸ் கைது ஏன்? - மு.க.ஸ்டாலின் சொன்ன பரபரப்பு காரணம்!
MK Stalin: அன்பில் மகேஸ் கைது ஏன்? - மு.க.ஸ்டாலின் சொன்ன பரபரப்பு காரணம்!
அக்.31 இல் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவித்த திமுக! - எதற்காக தெரியுமா?
அக்.31 இல் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவித்த திமுக! - எதற்காக தெரியுமா?
நாகை மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் - எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை?
நாகை மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் - எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை?
பட்டப்பகலில் திமுக பிரமுகர் ஓட ஓட வெட்டிக் கொலை.. சினிமாவை மிஞ்சிய சம்பவம் - பின்னணியில் என்ன நடந்தது?
பட்டப்பகலில் திமுக பிரமுகர் ஓட ஓட வெட்டிக் கொலை.. சினிமாவை மிஞ்சிய சம்பவம் - பின்னணியில் என்ன நடந்தது?
Embed widget