மேலும் அறிய

A R Rahman : இதனால்தான் அவர் ரஹ்மான்.. மகளின் திருமணத்தில் ரஹ்மான் எடுத்த முடிவு

தனது குழந்தைகளுக்கு ரஹ்மான் முழு சுதந்திரம் கொடுத்துள்ளார் என்று கம்பீரன் கூறியுள்ளார்

தனது பொருளாதார வாய்ப்பில் இல்லை என்றாலும் ரஹ்மான் தனது மகள் கதிஜாவின் திருமணத்தை ஆதரித்ததற்கான காரணத்தை பத்திரிகையாளர் கம்பீரன் விளக்கியுள்ளார்.

ஏ.ஆர் ரஹ்மான்

1992 ஆம் ஆண்டு மனிரத்னம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஏ.ஆர் ரஹ்மான். தமிழ் சினிமாவில் மூடி சூடா மன்னனாக இருந்து வந்த இளையராஜாவின் சிஷ்யனாக தனது பயணத்தைத் தொடங்கி, பின் யார் சிறந்தவர் என்று ரசிகர்கள் மோதிக்கொள்ளும் அளவிற்கு மக்களை ஆக்கிரமித்தார் ரஹ்மான்.  தற்போது 2023-ஆம் ஆண்டில் திரையிசையில் 30 ஆண்டுகளை நிறைவு செய்ய இருக்கிறார் ரஹ்மான். இந்தி, தமிழ் , என கிட்டத்தட்ட 169 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் . ‘சின்ன சின்ன ஆசையில் 90-களின் குழந்தைகள் தொடங்கி ‘பொன்னி நதி பார்க்கணுமே’ என ஓங்கி ஒலித்து gen z கிட்ஸ் எனப்படும் இன்றைய இளைஞர்கள் வரை அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இசையில் மட்டுமில்லை அன்பு, நகைச்சுவை குறும்புத்தனத்திலும் ரஹ்மான் கொஞ்சம் கெட்டிக்காரர்தான். டைமிங்கில் எதையாவது சொல்லிவிட்டு கலாய்த்து விடுவது . தனது மனைவியாக இருந்தாலும் மேடையில் இந்தியில் பேசினால் தமிழில் பேசுவது என சின்னதாக எதையாவது செய்து ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துவிடக் கூடியவர்.

“எனது வாழ்நாள் முழுவதும் என் முன்னே அன்பு, வெறுப்பு என இரண்டு விருப்பங்கள் இருந்தன, நான் அன்பைத் தேர்ந்தெடுத்தேன். அதனால் இங்கு நிற்கிறேன்” ஆஸ்கர் விருது வெல்லும் போது ரஹ்மான் இந்த உரையை பேசினார். இந்த வார்த்தைக்கும் உண்மையான ஒருவராக தனிப்பட்ட வாழ்க்கையில் இன்றும் இருந்து வருகிறார்.

மகளின் திருமணத்திற்கு பச்சைக்கொடி

ரஹ்மானுக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் இருக்கிறார்கள். இதில் அவரது இளைய மகளான கதிஜாவுக்கு சமீபத்தில் திருமணமானது. இந்த திருமணம் தொடர்பாக பத்திரிகையாளர் கம்பீரன் சமீபத்தில் சில தகவல்களை பகிர்ந்துகொண்டார், தனது குழந்தைகளுக்கு அனைத்து சுதந்திரத்தையும் ரஹ்மான் கொடுத்திருக்கிறார். அவர்களுக்கு விருப்பப்பட்டதை அவர்கள் செய்துகொள்ளலாம். தனது சொந்த ஆசைகள் அவர் தனது குழந்தைகள் மீது திணிப்பதில்லை. அவரது மகள் கதிஜாவின் திருமணம் அவரது பொருளாதார வாய்ப்புக்கு நிகரானதாக இல்லை என்றாலும் இந்த திருமணத்துக்கு அவர் சம்மதம் தெரிவித்தார். தன்னிடம் சவுண்ட் இஞ்சினியராக பணிபுரிந்தவரைத் தான் தனது மகள் கதிஜாவுக்கு அவர் திருமணம் செய்து வைத்தார்“ என்று அவர் கூறினார்.

ரஹ்மான் இசையமைத்து வரும் படங்கள்

ஏ.ஆர் ரஹ்மான் இசையில் சமீபத்தில் சிவகார்த்திகேயன்  நடித்த அயலான் படம் வெளியானது. இதனைத் தொடர்ந்து ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் , விக்ராந்த், ரஜினிகாந்த் நடித்திருக்கும் லால் சலாம் படத்தில் இசையமைத்துள்ளார். கமல்ஹாசன்  நடித்து மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் தக் லைஃப் படத்திற்கு ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

தலைப்பு செய்திகள்

Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
Gold Rate Today Aug.5th: அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
MG Hector Hawk: மஹிந்திரா XUV 7XO-க்கு சங்கு ஊதுமா MG Hector Hawk; பிளக்-இன் ஹைப்ரிட், EV பதிப்புகளில் அறிமுகம்
மஹிந்திரா XUV 7XO-க்கு சங்கு ஊதுமா MG Hector Hawk; பிளக்-இன் ஹைப்ரிட், EV பதிப்புகளில் அறிமுகம்
Liquor Ban: மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! OLD MONK உள்ளிட்ட 3 சரக்குகளுக்கு தடை- இது தான் காரணமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! OLD MONK உள்ளிட்ட 3 சரக்குகளுக்கு தடை- இது தான் காரணமா.?
TN Budget 2026: குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
Embed widget