மேலும் அறிய

Meera Jasmine | தாவணி போட்ட தீபாவளி.. ரீ எண்ட்ரி கொடுக்கும் மீரா ஜாஸ்மின்.!

திருமணத்துக்குப் பின் நடிப்புக்கு முழுக்கு போட்டார் தேசிய விருது பெற்றார் அந்த தாவணி போட்ட தீபாவளி.ஆனால், இந்த தீபாவளியை ஒட்டி அவரைப் பற்றி ஒரு இனிப்பான செய்தி கிடைத்துள்ளது

மீரா ஜாஸ்மின், தமிழ், மலையாளத் திரைப்படங்களில் மணம் வீசிக் கொண்டிருந்த மீரா ஜாஸ்மின் யார் கண் பட்டதோ ஒதுங்கிப் போனார். இப்போது, சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் ரீ என்ட்ரி கொடுக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

காதல் பிசாசே... காதல் பிசாசே பாடலை மீராவுக்கு ரசித்தவர்கள் தான் ஏராளம் என்று அடித்துச் சொல்லலாம். மேடி ரசிகர்களும், வித்யாசாகர் ரசிகர்களும் கொஞ்சம் பொறுத்துக்கோங்க. உண்மையை சொல்லித்தானே ஆகணும்.  குட்டையான தோற்றம், குண்டு குண்டு கண்கள், குறும்புப் பார்வை, துடிப்பான நடிப்பு, அழுத்தமான உடல் மொழி, உணர்வுப்பூர்வமான காட்சிகளில் நேர்த்தி என நடிப்பு ராட்சஸியாக இருந்தவர் மீரா ஜாஸ்ம்னின்.

திருமணத்துக்குப் பின் நடிப்புக்கு முழுக்கு போட்டார் தேசிய விருது பெற்றார் அந்த தாவணி போட்ட தீபாவளி.
ஆனால், இந்த தீபாவளியை ஒட்டி அவரைப் பற்றி ஒரு இனிப்பான செய்தி கிடைத்துள்ளது. துபாயின் வசிக்கும் அவர் ஐக்கிய அரபு எமீரகத்திடமிருந்து கோல்டன் விசா பெற்றுள்ளாராம். இது நீண்ட கால பயணத்துக்கான ஒருவகை பிரத்யேக விசா. மலையாளத் திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் ஆகியோர் யுஏஇ அரசின் இந்த கோல்டன் விசாவை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Meera Jasmine | தாவணி போட்ட தீபாவளி.. ரீ எண்ட்ரி கொடுக்கும் மீரா ஜாஸ்மின்.!
இந்நிலையில் தனது ரீஎட்ரி குறித்து மீரா ஜாஸ்மின் மனம் நெகிழ்ந்து பேசியுள்ளார். அதில், "நான் ஒரு இடைவேளை எடுத்துக் கொண்டேன். இனி நான் சினிமாவில் சுழன்றுவரப் போகிறேன். ஆனால், நான் தேர்வு செய்யும் கதைகள் தனித்துவமானதாக இருக்கும். ஏற்கெனவே சத்யன் அந்திக்காடுடன் நான் 4 படங்கள் செய்துள்ளேன். இது அவரது ஐந்தாவது படம். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். மேலும், ஆசிர்வதிக்கப்பட்டவளாய் உணர்கிறேன். 

ஒரு கலைஞராக பல்வேறு கதைக்களங்களையும் எக்ஸ்ப்ளோர் செய்து பார்க்க வேண்டும். ஒரு படத்தின் கரு தான் அதன் உயிர். ரசிகர்களை எப்போதும் குறைத்து மதிப்பிடக் கூடாது. ரசிகர்கள் தங்களின் கூரிய நுட்பத்தால் வித்தியாச கதைக்களங்களையே சீர்தூக்கி ரசிக்கின்றனர். அவர்களை சாதாரண கதைக்களத்தால் சமாதானப்படுத்திவிட முடியாது. அதில் அவர்கள் சமரசமாக மாட்டார்கள். 

சத்யன் அந்திக்காடுடன் நான் ஏறெகனவே 4 படங்கள் செய்திருந்தாலும், இந்தப் படத்தை அவற்றுடன் ஒப்பிட முடியாது. இந்தப் படத்தில் எனக்கு முழுவதும் வித்தியாசமான கதாபாத்திரம். இது எனக்கு ஒரு புதிய துவக்கம்" என்றார்.
மீரா ஜாஸ்மின் மலையாளத்தில் பிரபல இயக்குநர் லோகிதாஸின் சூத்ரதாரன் என்ற படம் மூலம் அறிமுகமானார்.

இப்போது மீரா ஜாஸ்மின் ஒப்பந்தமாகியுள்ள சத்யன் அந்திக்காடு இயக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகர் ஜெயராம் நடிக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்துக்கு இப்போது எதிர்பார்ப்பு அதிகரித்துவிட்டது.

தலைப்பு செய்திகள்

‘விஸ்வநாத் & சன்ஸ்’ படப்பிடிப்பில் ராதிகாவிடம் அடி வாங்கிய ஜி.வி.பிரகாஷ்.. அவரே சொன்ன தகவல்
‘விஸ்வநாத் & சன்ஸ்’ படப்பிடிப்பில் ராதிகாவிடம் அடி வாங்கிய ஜி.வி.பிரகாஷ்.. அவரே சொன்ன தகவல்
Dharman : தர்மன் படத்தில் ரஜினியின் மருமகனாகவும் வில்லனாகவும் நடிக்கு ராம் பொத்தினேனி
Dharman : தர்மன் படத்தில் ரஜினியின் மருமகனாகவும் வில்லனாகவும் நடிக்கு ராம் பொத்தினேனி
 சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தை பார்த்த சரத்குமார்.. சொன்ன ஒரே வார்த்தை என்ன தெரியுமா?
 சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தை பார்த்த சரத்குமார்.. சொன்ன ஒரே வார்த்தை என்ன தெரியுமா?
பெரிய நட்சத்திரங்கள். இன்னும் பெரிய கதைகள். ZEE5 வழங்கும் மிகச் சிறப்பான உள்ளடக்கத் தொகுப்பு!
பெரிய நட்சத்திரங்கள். இன்னும் பெரிய கதைகள். ZEE5 வழங்கும் மிகச் சிறப்பான உள்ளடக்கத் தொகுப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Job Fair Chennai : ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
Kanyakumari District Holiday : 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
Embed widget