மேலும் அறிய

விசிக வேட்பாளருக்கு போதை கடத்தல் மன்னன் ஜாஃபர் சாதிக்குடன் தொடர்பு; அன்புமணி அதிரடி குற்றச்சாட்டு

பண்ருட்டியில் திமுக கூட்டணி சார்பில் நிற்க வைக்கப்பட்டுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் யார்? அன்புமணி கேள்வி.

பண்ருட்டியின் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்,போதை கடத்தல் மன்னன் ஜாஃபர் சாதிக் உடன் தொடர்புடையவர் என்று பண்ருட்டியில் அன்புமணி பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

கூட்டணியில் உள்ள விசிக, மதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை திமுக முடித்து விட்டதாகவும் பத்தாண்டுகளாக கூட்டணியில் இருக்கும் விசிகவிற்கு 8 சீட்டு, நேற்று வந்த தேமுதிகவிற்கு 10 சீட்டு வழங்கியுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

 தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பண்ருட்டி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது அன்புமணி பேசியதாவது:

’’பண்ருட்டி பலாப்பழத்திற்கு உரிய விலை இல்லாத காரணத்தால் அவர்கள் நெடுஞ்சாலையில் நின்று  விற்க வேண்டிய நிலை இருக்கிறது. பண்ருட்டியில் விளையும் முந்திரிக்கு உரிய விலை இல்லை.. ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறார்கள்.

பண்ருட்டியில் திமுக கூட்டணி சார்பில் நிற்க வைக்கப்பட்டுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் யார்? சில மாதங்களுக்கு முன்பு திமுக அயலக அணியை சேர்ந்த ஜாபர் சாதிக் என்பவரை 3000 கோடிக்கு போதை பொருள் விற்ற காரணத்தால் கைது செய்தார்கள். அவருடன் தொடர்புடையவர்தான் இந்த பண்ருட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர். ஆனால் அதிமுக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் மோகன் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர், எளிய மக்களுடன் பழகக் கூடியவர்.

பட்டியலின மக்களுக்கு கடைசி இடம்

தமிழ்நாட்டில் 34 அமைச்சர்கள் இருக்கிறார்கள். அவர்களில் புரோட்டாகால் அடிப்படையில் கடைசி அமைச்சராக பட்டியல் இனத்தை சேர்ந்த கயல்விழி என்பவருக்கு கொடுத்திருக்கிறார்கள்.

32 ஆவது இடத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த மற்றொரு அமைச்சரான மதிவேந்தனுக்கு கொடுத்திருக்கிறார்கள். முப்பதாவது இடத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ. கணேசனுக்கு கொடுத்திருக்கிறார்கள்.

பட்டியலின மக்களின் வாக்குகள் மட்டும் வேண்டும், ஆனால் திமுக பட்டியலின மக்களுக்கு எதுவும் நன்மை செய்யாது. பிறகு எதற்காக திமுகவுக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும்?

இபிஎஸ்ஐ பார்த்துக் கேள்வி கேட்க தகுதி உள்ளதா?

இப்படி எல்லாம் செய்துவிட்ட திமுக இபிஎஸ்ஐ பார்த்துக் கேள்வி கேட்க தகுதி உள்ளதா? 5 ஆண்டுகளில் ஏதாவது நன்மை செய்திருந்தால் அதைச் சொல்லி திமுக ஓட்டு கேட்கட்டும்.

ஐந்தாண்டுகள் தமிழ்நாட்டில் ஆட்சி செய்த திமுக தங்களுடைய சாதனைகளோ, வாக்குறுதிகளோ, கொள்கையோ சொல்லி ஓட்டு கேட்காமல் 8000 ரூபாய் கூப்பன் கொடுப்போம் என்று சொல்லி வாக்கு கேட்கிறார்கள். இந்த ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் ஏதாவது நன்மை செய்திருந்தால் அதை சொல்லி வாக்கு கேட்கலாமே?’’

இவ்வாறு அன்புமணி கேள்வி எழுப்பினார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget