தூக்கமின்மை உங்கள் கோபத்தையும் சோர்வையும் பலமடங்கு அதிகரிக்கும். போதிய அளவு ஓய்வும், ஆழ்ந்த தூக்கமும் மூட் ஸ்விங்ஸை சரிசெய்யும் சிறந்த மருந்து.
உடல் வறட்சி (Dehydration) தலைவலியையும் எரிச்சலையும் தரும். நிறைய தண்ணீர், சீரகத் தண்ணீர், மோர், இளநீர் குடிப்பது உடலையும் மனதையும் 'கூல்' ஆக வைக்கும்.
உங்களுக்குப் பிடித்த பாட்டு கேட்பது, புத்தகம் படிப்பது, அல்லது காமெடி வீடியோக்கள் பார்ப்பது என உங்கள் மனதை சந்தோஷப்படுத்தும் விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்.
எனக்கு மூட் சரியில்லை, சோர்வாக இருக்கிறது என உங்கள் குடும்பத்தினரிடமோ அல்லது கணவரிடமோ வெளிப்படையாகச் சொல்லி விடுங்கள். இது தேவையில்லாத சண்டைகள் வருவதைத் தடுக்கும்.
இந்த நாட்களில் சாக்லேட், சிப்ஸ் அதிகம் சாப்பிடத் தோன்றும். ஆனால் அதிக இனிப்பும் உப்பும் எரிச்சலை அதிகமாக்கும். அதற்குப் பதிலாக பழங்கள், நட்ஸை சாப்பிடலாம்.
ஷாக் ஆகாதீங்க. கடுமையான ஒர்க்அவுட் வேண்டாம். லேசான வாக்கிங் அல்லது ஸ்ட்ரெச்சிங் செய்தால், உடலில் ஹேப்பி ஹார்மோன் சுரந்து மனநிலையை உடனடியாக மாற்றும்.
அடிக்கடி காபி குடிக்கும் பழக்கம் இருந்தால், அதை குறைத்துக் கொள்ளுங்கள். அதிலுள்ள காஃபின் பதற்றத்தையும், தூக்கமின்மையையும் அதிகரிக்கும். ஹெர்பல் டீ அல்லது சுக்கு காபி குடிக்கலாம்.
பால், தயிர், கீரை வகைகள் மற்றும் வாழைப்பழம் சாப்பிடுங்கள். இவை தசைப்பிடிப்பைக் குறைத்து, மனதை ரிலாக்ஸ் செய்யும்.
அடிவயிற்றில் வெந்நீர் ஒத்தடம் கொடுப்பதும், மிதமான வெந்நீரில் குளிப்பதும் உடல் வலியை நீக்கி, மனதுக்கு இதமான உணர்வைத் தரும்.
இவை எதற்குமே கேட்காமல், பீரியட்ஸ் நேர மனநிலை மாற்றங்கள் உங்கள் அன்றாட வாழ்க்கையையே முடக்கும் அளவுக்கு கடுமையாக இருந்தால், தயங்காமல் ஒரு மருத்துவரை சென்று ஆலோசியுங்கள்.