மேலும் அறிய

TVK Vijay Campaign: ’’நா நடிகன்தான்..’’ விமர்சனங்களுக்கு இன்ச் பை இன்ச் பதில்.. விஜய் உரை ஹைலைட்ஸ்

TVK Vijay Campaign Today: ’’வெளிய வராத விஜய், நடிகன்தான், கரூர் சம்பவம்..’’ தன்மீது வைக்கப்பட்ட எல்லா விமர்சனங்களுக்கும் பதில் சொன்ன தவெக விஜய்

சென்னை, நந்தனத்தில் தவெக தலைவர் விஜய், நிர்வாகிகள் கூட்டத்தில் உரையாற்றினார். யார் இன்னிக்கு ஸ்க்ரிப்ட் எழுதிக் கொடுத்தது என்று எல்லோரும் கேட்கும் வகையில், அவரின் உரையில் பாஜக, அதிமுகவை சரமாரியாக விளாசினார். 

அதில் அவர் பேசிய உரையின் டாப் ஹைலைட்ஸ்:

  • புதுச்சேரியில் சுமார் 90 சதவீத வாக்குப் பதிவு நடந்திருக்கிறது. தமிழ்நாட்டிலும் இதுவே நடக்க வேண்டும்.
  • விஜய் வெளியே வருவதே இல்லை என்கிறார்கள். சேலத்துக்கு அருகே எடப்பாடியில் இருந்து நீங்கள் வெளியே வாருங்கள். 10 தோல்வி கண்டவர் என்னை விமர்சிக்கிறார். எடப்பாடி தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடும் பிரேம்குமாருக்கு டிவி சின்னத்தில் டிவிகே தொண்டர்கள் வாக்களிக்க வேண்டும். 
  • என்னை எல்லோரும் நடிகன் என்கிறார்கள். நான் நடிகன்தான். ஆனால் உங்களைப் போல் நான் அரசியலில் நடிக்கவில்லை.
  • திமுகவுக்கோ அல்லது அதிமுகவுக்கோ வாக்களிப்பது என்பது பாஜகவுக்கு ஓட்டு போடுவதுதான். எல்லோரும் ஏன் என்னை ஒருவனை மட்டுமே எதிர்க்கிறார்கள்? ஏனெனெில் எல்லோரும் ஒரே கூட்டணியில் இருக்கிறார்கள்.
  • ஒவ்வொரு வீட்டில் இருக்கும் என்னுடைய குட்டி ரசிகர்களுக்கும் ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன். உங்களின் வீட்டில் உள்ள பெற்றோர்கள், உறவினர்கள், சொந்தங்களிடம் விஜய் மாமாவுக்கு ஓட்டு போடுங்கள் என்று மறக்காமல் சொல்லுங்கள்.
  • என்னென்னமோ தேர்தல் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள். அதை எதையும் நம்பாதீர்கள். மக்கள் விரைவில் பதில் தருவார்கள்.
  • ஸ்டாலின் அரசுக்கு நான் என்ன தவறு செய்தேன்? உங்களின் உணவில் மண்ணை அள்ளிப் போட்டேனா? மக்களிடம் நீங்கள் செய்யும் தவறுகளையும் ஊழலையும் வெளிப்படுத்தினேன். அவ்வளவுதான்.
  • கரூர் சம்பவத்தில் நான் எந்தத் தவறையும் செய்யவில்லை. காவல்துறை கொடுத்த நேரத்தில் சரியாக வந்தேன். லைவில் எல்லோரும் அதைப் பார்த்தார்கள். உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா? ஏன் எல்லா பழியையும் என்மீது போடுகிறீர்கள்?
  • ஏன் உங்களின் அடிமையை (திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி) கரூரில் இருந்து கோயம்புத்தூருக்கு அனுப்பி வைத்தீர்கள்?
  • தேர்தலுக்குப் பிறகு கட்சியைக் காப்பாற்ற பாஜகவின் காலில் திமுக விழும். பாஜகவின் அடிமையாக யார் இருப்பார்கள் என்பதில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் போட்டி உள்ளது. திமுக, மோடி காலில் விழுமா அமித் ஷா காலில் விழுமா என்று பார்ப்போம்.
  • நான் பொது மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்க தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்குச் செல்வேன்.
  • ஏப்ரல் 23ஆம் தேதி அன்று, அன்று ஒரே நாள் மட்டும் விஜய் சொல்வதைக் கேளுங்கள். அதன் பிறகு ஒவ்வோர் ஆண்டும் விஜய் நீங்கள் சொல்வதைக் கேட்பான். வெற்றி நிச்சயம். கான்ஃபிடண்ட்டாக இருங்கள். இவ்வாறு விஜய் பேசினார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

மதுராந்தகம் இடைத்தேர்தல்: வேட்புமனு வாபஸ் முடிந்தது! களத்தில் எத்தனை பேர் தெரியுமா?
மதுராந்தகம் இடைத்தேர்தல்: வேட்புமனு வாபஸ் முடிந்தது! களத்தில் எத்தனை பேர் தெரியுமா?
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: பா.ம.க. அதிரடி முடிவு - யாருக்கும் ஆதரவில்லை!
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: பா.ம.க. அதிரடி முடிவு - யாருக்கும் ஆதரவில்லை!
TN Bypoll: இன்றே கடைசி..! மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வேட்புமனு - நிலவரம்? தொகுதிக்கு எத்தனை பேர்?
இன்றே கடைசி..! மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வேட்புமனு - நிலவரம் என்ன? தொகுதிக்கு எத்தனை பேர்?
"விஜய் படம் ஒட்டாத வீட்டில் ஓட்டு விழாது" - தவெக வேட்பாளர் சத்யபாமா சர்ச்சை பேச்சு

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rooftop Solar Subsidy: வீட்டின் கூரை மேல் சோலார் மின் உற்பத்தி - ரூ.1 லட்சம் வரை நிதியுதவி - யாருக்கு? விண்ணப்பிப்பது எப்படி?
வீட்டின் கூரை மேல் சோலார் மின் உற்பத்தி - ரூ.1 லட்சம் வரை நிதியுதவி - யாருக்கு? விண்ணப்பிப்பது எப்படி?
TN Weather News: 21 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னையிலும் இன்று கனமழை? தமிழக வானிலை அறிக்கை
21 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னையிலும் இன்று கனமழை? தமிழக வானிலை அறிக்கை
Tamilaga Makkal Kazhagam: TVKக்கு போட்டியாக TMK.. அஜித்துக்கே தெரியாமல் கட்சி தொடங்கிய ரசிகர்கள்.. இனி அதிரடி தான்!
Tamilaga Makkal Kazhagam: TVKக்கு போட்டியாக TMK.. அஜித்துக்கே தெரியாமல் கட்சி தொடங்கிய ரசிகர்கள்.. இனி அதிரடி தான்!
தவெகவை டெபாசிட் இழக்க செய்வோம்.. தொகுதிக்கு வராமலேயே திமுக செய்யும்.. பொன்முடி கணிப்பு!
தவெகவை டெபாசிட் இழக்க செய்வோம்.. தொகுதிக்கு வராமலேயே திமுக செய்யும்.. பொன்முடி கணிப்பு!
Fishermen Alert: புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி.. கடலோர மாவட்டங்களில் வானிலை, தமிழக மீனவர்களுக்கான வார்னிங்
புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி.. கடலோர மாவட்டங்களில் வானிலை, தமிழக மீனவர்களுக்கான வார்னிங்
Rasi Palan Today (21.09.2026): சிம்மத்துக்கு தடங்கல்.. மகரத்துக்கு சிக்கல்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்ல நாளா?
Rasi Palan Today (21.09.2026): சிம்மத்துக்கு தடங்கல்.. மகரத்துக்கு சிக்கல்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்ல நாளா?
Maruti 7 Seater EV: 500KM ரேஞ்ச்..! மாருதியின் குடும்பங்களுக்கான மலிவான 7 சீட்டர் மின்சார கார் - அம்சங்கள் ப்ரீமியமா? பட்ஜெட்டா?
500KM ரேஞ்ச்..! மாருதியின் குடும்பங்களுக்கான மலிவான 7 சீட்டர் EV - அம்சங்கள் ப்ரீமியமா? பட்ஜெட்டா?
Trump on Alert: எச்சரித்த ஈரான்; விடுமுறையை பாதியில் முடித்து திரும்பிய ட்ரம்ப்; மத்திய கிழக்குக்கு விரையும் US குண்டுவீச்சு விமானம்
எச்சரித்த ஈரான்; விடுமுறையை பாதியில் முடித்து திரும்பிய ட்ரம்ப்; மத்திய கிழக்குக்கு விரையும் US குண்டுவீச்சு விமானம்
Embed widget