மேலும் அறிய

TVK Vijay: 9.4 லட்சம் வாக்காளர்கள் - நள்ளிரவில் 30 வேட்பாளர்களை அறிவித்த விஜய் - புதுச்சேரியில் தவெக தேறுமா?

TVK Vijay Puducherry Election 2026: புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான 30 வேட்பாளர்களின் பட்டியலை தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

TVK Vijay Puducherry Election 2026: புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் அந்த யூனியன் பிரதேசத்தில் உள்ள 30 தொகுதிகளிலும், விஜய் தலைமையிலான தனித்து களம் காண்கிறது.

புதுச்சேரி வேட்பாளர்களை அறிவித்த விஜய்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக, வரும் ஏப்ரல் 9ம் தேதியே புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  5.03 லட்சம் பெண்கள், 4.45 லட்சம் ஆண்க என சுமார் 9.48 லட்சம் வாக்காளர்கள் அங்கு வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். ஏற்கனவே என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி இரண்டு முனை போட்டி அங்கு நிலவி வரும் சூழலில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனித்து களம் காண்கிறது. இந்நிலையில், இங்கு அங்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் முடிவடைய உள்ள சூழலில், 30 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் விவரங்களை விஜய் அறிவித்துள்ளார். பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்பட்டாலும், இறுதியில் தமிழ்நாட்டை போன்று புதுச்சேரியிலும் தமிழக வெற்றிக் கழகம் தனித்தே களம் காண்கிறது.

புதுச்சேரி தவெக வேட்பாளர்கள் பட்டியல்

தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளில் 2 தொகுதிகளுக்கு பெண் வேட்பாளர்களை அறிவித்துள்ளார். அந்த பட்டியலில், காரைக்கால் தெற்கில் கே.ஏ.யு. அசனா, உழவர்கரை தொகுதியில் எஸ். சசிபாலன், லாஸ்பேட்டை தொகுதியில் வி. சாமிநாதன், ராஜ்பவன் தொகுதியில் வி.ஜே. சந்திரன்,  முதலியார்பேட்டையில் என். மணிபாலன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மங்கலம் தொகுதியில் எம்.கே. சத்யா, கதிர்காமம் தொகுதியில் ஆர். ஜெயந்தி ஆகிய பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கூட்டணி இழுபறி

என்.ஆர். காங்கிரஸ் - பாஜக மற்றும் காங்கிரஸ் - திமுக இடையேயான கூட்டணிகள் இறுதியாகிவிட்டாலும், எந்த தொகுதிக யாருக்கு என்பதில் இதுவரை இழுபறி நீடித்து வருகிறது. குறிப்பாக திமுக - காங்கிரஸ் இடையே தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரியிலும் தொகுதிகளை கைப்பற்றுவதில் கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே பல தொகுதிகளில் இரண்டு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தாலும், வரும் 26ம் தேதி வரும் வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான அவகாசம் உள்ளது. அதற்குள் எந்த தொகுதி யாருக்கு என உறுதியாகிவிட்டால் மற்ற வேட்பாளர்கள் வேட்புமனுவை திரும்பப் பெற திட்டமிட்டுள்ளனராம். ஆளுங்கட்சி கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பாஜக 14 தொகுதிகளிலும் மற்றும் புதியதாக தோற்றுவிக்கப்பட்ட லட்சிய ஜனநாயக கட்சி 2 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Chennai Power Cut: சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
Japanese SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
Embed widget