மேலும் அறிய

Aadhav Arjuna Net Worth: 442 கோடி சொத்து, 490 சவரன் தங்கம், கார்கள்.. ஆச்சர்யபடுத்தும் ஆதவ் அர்ஜூனா சொத்து விவரம் இதோ!

TVK Aadhav Arjuna Affidavit: 442 கோடி சொத்து, 490 சவரன் தங்கம்.. கார்கள்.. தவெக பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா சொத்து மதிப்பு விவரம் இதோ!

தமிழ்நாட்டில் தேர்தல் ஜூரம் எல்லோரையும் பற்றிக் கொண்டுள்ளது. திமுக, அதிமுக, நாதக, தவெக என நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. இதுபோக ராமதாஸ் - சசிகலா கூட்டணியும் களத்தில் இறங்கி உள்ளது.

தவெக தேர்தல் வியூக மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா அக்கட்சி சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் விசில் சின்னத்தில் போட்டியிடுகிறார். இதற்காக வேட்புமனுத் தாக்கல் செய்த ஆதவ், தன்னுடைய பிரமாணப் பத்திரத்தை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தார். அதில் அவரின் சொத்து மதிப்புகள் குறித்துக் கூறப்பட்டிருப்பதாவது:

ஆதவ் அர்ஜூனாவிடம் மொத்தம் 180 கோடி ரூபாய் அசையும் சொத்தும் அவரின் மனைவி டெய்ஸியிடம் 162 கோடி ரூபாய் அசையும் சொத்தும் உள்ளன.

அதேநேரத்தில் விவசாய நிலங்களோ, விவசாயம் அல்லாத நிலங்களோ இருவரிடமும் இல்லை என்று பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் வணிக கட்டிடங்கள் இருவர் வசமும் உள்ளன.

அசையா சொத்துகளின் மொத்த மதிப்பு ஆதவ் அர்ஜூனாவிடம் 17.5 கோடி ரூபாயாகவும் அவரின் மனைவியிடம் 83 கோடி ரூபாய் ஆகவும் உள்ளது.

நகைகள் என்னென்ன?

ஆதவ் அர்ஜூனாவிடம் சொந்தமாக 211 சவரன் தங்க நகை அதாவது 1691 கிராம் தங்கம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரின் மனைவி டெய்ஸி ஆதவ் அர்ஜூனாவிடம் 278 சவரன் நகை, அதாவது 2,225 கிராம் தங்கம் உள்ளது.

இவைபோக 24,109 கிராம் வெள்ளி பொருட்கள் ஆதவின் மனைவி டெய்ஸிடம் உள்ளன. இருவருக்குமே வணிகம் பிரதானத் தொழில் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Aadhav Arjuna Net Worth: 442 கோடி சொத்து, 490 சவரன் தங்கம், கார்கள்.. ஆச்சர்யபடுத்தும் ஆதவ் அர்ஜூனா சொத்து விவரம் இதோ!

என்னென்ன வாகனங்கள்?

  • இன்னோவா கிறிஸ்டா
  • மாருதி எக்ஸ்எல் 6 ஆல்ஃபா
  • ராயல் என்ஃபீல்ட்
  • ஸ்போர்ட்ஸ் சைக்கிள்

வழக்குகள் எப்படி?

தவெக தேர்தல் வியூக மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா மீது ஒரு குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவெக தலைவர் விஜயின் அசையும் சொத்து மதிப்பு ரூ.404 கோடி (404,58,57,196) என்று  தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல அசையா சொத்து – 115 கோடி ரூபாய் (115,13,63,000) ஆகும். அதேபோல விஜய் மனைவி சங்கீதா பெயரில் 15,51,79,421 (15 கோடி) அசையும் சொத்தும் 2.5 கோடி ரூபாய் (2,50,00,000 ) அசையா சொத்தும் உள்ளன. இதன்மூலம் மொத்தம் ரூ.537 கோடி ரூபாய் சொத்து விஜயிடம் உள்ளதாக, தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல தவெக தலைவர் புஸ்ஸி ஆனந்தின் மொத்த சொத்து மதிப்பு– ரூ.2.04 கோடி என்றும் அவரின் மனைவி அர்லின்லுமா-விடம் – 1.61 கோடி ரூபாய் மதிப்பில் சொத்துகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
Donald Trump: ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
Donald Trump: ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
நகைப்பிரியர்களுக்கு குஷி.! தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்தது.! இன்றைய விலை நிலவரம் இதோ..
நகைப்பிரியர்களுக்கு குஷி.! தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்தது.! இன்றைய விலை நிலவரம் இதோ..
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
Embed widget