மேலும் அறிய

TN Urban Local Body Election 2022 Voting | ”இந்த முறைதான் தனியா வந்து வாக்களிக்கிறேன். மக்கள் நல்ல முடிவு எடுப்பார்கள்” - வாக்களித்த பின் சசிகலா பேட்டி..

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வி.கே.சசிகலா வாக்களித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று காலை முதல் வாக்குப்பதிவு தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்டோர் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். 

இந்நிலையில் வி.கே.சசிகலா திநகர் வித்யோதயா பள்ளியில் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்தார். அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளார்களை சந்தித்தார். அதில், “எப்போதும் அக்காவுடன் வந்து வாக்களிப்பேன். ஆனால் இந்த முறைதான் நான் தனியாக வந்து வாக்களிக்கிறேன். அதை நான் நினைத்துக்கொண்டே வந்தேன். தமிழ்நாடு மக்களுக்கு எல்லாம் தெரியும். இது தமிழக அரசு நடத்தும் தேர்தல். ஆகவே ஆளும் கட்சியினர் அராஜகம் செய்ய கூடாது. அனைத்து ஏற்பாடுகளும் செய்துவிட்டால் போதாது தேர்தலை நியாயமான முறையில் நடத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னை தேனாப்பேட்டையில் வாக்களித்தார். அதன்பின்னர் தமிழ்நாடு மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் ஆகியவற்றிற்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. மொத்தம் 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. 

இதற்காக தமிழ்நாட்டு முழுவதும் 30,735 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, அதில் 5,960 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளனர். சென்னையில் மூவர் உட்பட 38 மாவட்டங்களில் மொத்தம் 41 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தேர்தல் பணிகளில் ஈடுபடப்படுத்தப்பட்டுள்ளனர். கோவையில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான காவலர்கள் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 8.21% வாக்குப்பதிவு பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் தகவல் தெரிவித்துள்ளார்.அதன்படி, மாநகராட்சிகளில் 5.78 சதவீதம், நகராட்சிகளில் 8.21 சதவீதம், பேரூராட்சிகளில் 11.74 சதவீதம் என தமிழ்நாட்டில் மொத்த 8.21 சதவீதம் வாக்குகள் இதுவரை பதிவாகியுள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிட்பில் வீடியோக்களை காண

மேலும் படிக்க: 9 மணி நிலவரப்படி இதுதான் வாக்குப்பதிவு - மாநில தேர்தல் ஆணையர்

தலைப்பு செய்திகள்

CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
KT Rajendra Balaji: திமுகவுக்கு போகச்சொல்லி நெருக்கடி.. மனம் மாறுவாரா ராஜேந்திர பாலாஜி.. பரபரக்கும் அரசியல்!
KT Rajendra Balaji: திமுகவுக்கு போகச்சொல்லி நெருக்கடி.. மனம் மாறுவாரா ராஜேந்திர பாலாஜி.. பரபரக்கும் அரசியல்!
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Embed widget