மேலும் அறிய

TVK Vijay: விஜய் Vs ஸ்டாலின், விஜய் Vs உதயநிதி; வேட்புமனுத் தாக்கலில் தவெக தலைவரின் தரமான சம்பவம்!

TVK Vijay Nomination: தந்தை வேட்புமனுத் தாக்கலின்போது பெரம்பூர், மகன் செய்தபோது திருச்சி கிழக்கு- விஜய் செய்த சம்பவம்.. பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் பரபரப்பு.

 பெரம்பூர் தொகுதியில் தந்தை ஸ்டாலினின் வேட்புமனுத் தாக்கலின்போதும் திருச்சி கிழக்கு தொகுதியில் மகன் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனுத் தாக்கல் செய்தபோதும் விஜய் மனுத்தாக்கல் செய்தது பேசுபொருளாகி உள்ளது.

தவெக தலைவர் விஜய் 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர், திருச்சி  கிழக்கு என இரு தொகுதிகளிலும் போட்டியிட உள்ளார். தவெக 234 தொகுதிகளிலும் தனித்துக் களம் காணும் நிலையில், திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணிகளுடன் களத்தில் உள்ளன. நாம் தமிழர் கட்சி மட்டும் வழக்கம்போல தனித்தே போட்டியிடுகிறது. தமிழ்நாட்டுக்கு ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. 

விஜய் Vs ஸ்டாலின்

இந்த நிலையில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய மார்ச் 30ஆம் தேதி அன்றே வியாசர்பாடியில் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். சற்றேறக் குறைய அதே நேரத்தில் முதல்வர் ஸ்டாலின் தான் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

விஜய் Vs உதயநிதி ஸ்டாலின்

அதேபோல துணை முதலமைச்சரும் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் 2ஆவது முறையாக சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் நிற்கிறார்.  இதனையொட்டி ஐஸ் ஹவுஸ் பகுதியில் உதயநிதி இன்று (ஏப்ரல் 2) காலை வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

TVK Vijay: விஜய் Vs ஸ்டாலின், விஜய் Vs உதயநிதி; வேட்புமனுத் தாக்கலில் தவெக தலைவரின் தரமான சம்பவம்!

இந்த நிலையில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் விஜய், திருச்சி விமான நிலையத்தில் இருந்து ரோட் ஷோ செய்தார். திறந்தவெளி வாகனத்தில் மேலே ஏறி நின்று, தொண்டர்களிடம் கையசைத்தவாறே வேட்புமனுத் தாக்கல் செய்யும் பாலக்கரை பகுதிக்குச் சென்றார். வேட்புமனுத் தாக்கல் செய்த கையோடு, திருச்சியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பேசுபொருளான சம்பவம்

இது எதேச்சையாக நடந்து இருக்கலாம் என்றும் சென்னை, பெரம்பூர் தொகுதியில் தந்தை ஸ்டாலினின் வேட்புமனுத் தாக்கலின்போதும் திருச்சி கிழக்கு தொகுதியில் மகன் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனுத் தாக்கல் செய்தபோதும் விஜய் மனுத்தாக்கல் செய்தது திட்டமிட்டுத்தான் என்றும் நெட்டிசன்கள் விவாதித்து வருகின்றனர். விஜய், திமுகவுக்கும் தவெகவுக்கும்தான் போட்டியே என்று செல்லும் இடங்களில் எல்லாம் பிரச்சாரம் செய்வது வருவது குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில் இது தவெக தலைவரின் தரமான சம்பவம் என்று பேசப்பட்டு வருகிறது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
Cheapest CNG AT SUV: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget