மேலும் அறிய

TVK Vijay: தவெக பரப்புரை ரத்து.. சோர்ந்து போன விஜய்.. உடல்நிலை பற்றி பரவும் தகவல்!

விஜய் பரப்புரைக்கு ஏற்பாடுகள் செய்யும் நிலையில் முதல் நாள் இரவு வரை அனுமதி கிடைக்குமா என்ற சந்தேகம், அப்படியே கிடைத்தாலும் திட்டமிட்டபடி நடக்குமா என்ற கேள்வி போன்றவை தவெக தொண்டர்களை ஒருகணம் அதிர வைக்கிறது. 

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் பரப்புரை அடுத்தடுத்து ரத்து செய்யப்படும் நிலையில், இணையத்தில் அவரது உடல்நிலை பற்றிய தகவலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

233 தொகுதிகளிலும் தவெக போட்டி

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஒட்டுமொத்த இந்தியாவுக்கு எதிர்பார்ப்பு மிகுந்த ஒன்றாக மாறியுள்ளது. இந்த தேர்தலில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி முதல்முறையாக களமிறங்குகிறது. அந்த கட்சியின் முதல்வர் வேட்பாளராக விஜய் அறிவிக்கப்பட்டுள்ளார். இப்படியான நிலையில் சேலம் எடப்பாடி தொகுதி தவிர 233 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு அக்கட்சி தனித்து களம் காண்கிறது. 

விஜய் தேர்தலில் ஜெயிப்பார், தோற்பார் என்பது ஒருபுறம் என்றாலும், அவர் முதல் தேர்தலில் என்ன மாதிரியான வாக்கு சதவிகிதம் பெறப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு தான் மேலோங்கி இருக்கிறது. 

செல்லும் இடமெல்லாம் விஜய்க்கு பெருகும் ஆதரவு 

இந்த நிலையில் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிடுகிறார். இந்த இரு தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் செய்து விட்டு தொடர்ந்து அவர் தனது பரப்புரையைத் தொடங்கினார். தொடர்ந்து புதுச்சேரி, திருநெல்வேலி, தூத்துக்குடி,காரைக்குடி ஆகிய இடங்களுக்கும் விஜய் பரப்புரை, வாகன பேரணி சென்றிருக்கிறார். செல்லும் இடமெங்கும் விஜய்க்கு கிடைக்கும் ஆதரவு எதிர்தரப்பு அரசியல் கட்சியினர் இடையே ஒரு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரத்து செய்யப்படும் தேர்தல் பரப்புரை

ஆனால் கடலூரில் இன்று நடைபெறுவதாக இருந்த பரப்புரை ரத்து செய்யப்பட்டது.  வில்லிவாக்கம், தி. நகர்,  சைதாப்பேட்டை, கடலூர், கும்மிடிப்பூண்டி ஆகிய இடங்களில் தேர்தல் பரப்புரை ரத்து செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் விஜய் பரப்புரை அறிவிக்கப்படுவதும், ரத்து செய்யப்படுவதும் மிகப்பெரிய கேள்விகளை எழுப்பியுள்ளது. நாளை கன்னியாகுமரியில் பரப்புரை மேற்கொள்வார் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி வருகிறது. 

முன்பெல்லாம் அனுமதி கொடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தற்போது அனுமதி கொடுத்தும், நேரம் போதவில்லை உள்ளிட்ட காரணங்கள் முன்வைக்கப்பட்டு பரப்புரை ரத்து செய்யப்படுவது தவெகவினரிடையே கவலைக்குரிய விஷயமாக  மாறியுள்ளது. எல்லா ஏற்பாடுகள் செய்யும் நிலையில் முதல் நாள் இரவு வரை அனுமதி கிடைக்குமா என்ற சந்தேகம், அப்படியே கிடைத்தாலும் திட்டமிட்டபடி நடக்குமா என்ற கேள்வி போன்றவை தவெக தொண்டர்களை ஒருகணம் அதிர வைக்கிறது. 

விஜய் உடல்நிலைக்கு என்ன ஆச்சு?

இந்த நிலையில் தவெக தலைவர் விஜய்க்கு உடல்நிலை பாதிப்பு காரணமாக அவர் பரப்புரை ரத்து செய்யப்படுவதும், தேதி மாற்றப்படுவதும் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடும் வெயில் வாட்டி வதைத்து வரும், அந்த வெப்பத்தை  விஜய் உடல்நிலை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், அவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதனாலேயே தேர்தல் பரப்புரை நிரல் மாற்றம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. விஜய் மீண்டும் உடல்நிலை தேறி வர வேண்டும் என பிரார்த்தனை செய்வதாக சமூக வலைத்தளத்தில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். 

தலைப்பு செய்திகள்

பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
NEET PROTEST : நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
TN GOVT Reliability Division : விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
NEET PROTEST : நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
TN GOVT Reliability Division : விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
Maruti 7 Seater: எல்லாமே இருந்தும் ஓடல..! 7 சீட்டரை அப்க்ரேட் செய்து விலையை குறைக்கும் மாருதி? 5 ஸ்டார் ரேட்டிங், 23KM மைலேஜ்
எல்லாமே இருந்தும் ஓடல..! 7 சீட்டரை அப்க்ரேட் செய்து விலையை குறைக்கும் மாருதி? 5 ஸ்டார் ரேட்டிங், 23KM மைலேஜ்
Ration Shop Fingerprint : மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய லாஸ்ட் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
Toyota Innova Hycross: இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
Embed widget