மேலும் அறிய

Madurai West: மதுரை மேற்கு தொகுதி.. செல்லூர் ராஜூவுக்கு குறையும் மவுசு.. திமுக வேட்பாளருக்கு வெற்றி முகம்!

மதுரை மேற்கு தொகுதியில் அதிமுக, தவெக வேட்பாளர்களிடையே நடக்கும் போட்டி திமுக வேட்பாளர் ரகு பாலாஜிக்கு சாதகமாக அமைந்திருக்கிறது. அந்த தொகுதியில் அவர் வெற்றி பெறுவார் என கள நிலவரம் கூறுகிறது.

மதுரை மேற்கு தொகுதியில் முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ மீது நிலவும் அதிருப்தி காரணமாக திமுக வேட்பாளரான ரகு பாலாஜிக்கு வெற்றி வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மதுரை மேற்கு தொகுதி நிலவரம்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான களம் மிகப்பெரிய அளவில் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒன்றாக மாறியுள்ளது. 4 முனை போட்டி நிலவினாலும் களம் வழக்கம்போல திமுக vs  அதிமுக என்ற நிலையில் தான் உள்ளது. ஒவ்வொரு தொகுதியில் புதுமுகங்களுக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட்டிருக்கிறது. இப்படியான மதுரை மேற்கு தொகுதியில் தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வெற்றி இந்த முறை கேள்விக்குறியாகியுள்ளது. 

அந்த தொகுதியில் திமுக சார்பில் ரகு பாலாஜி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் புதுமுக வேட்பாளராவார். திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.கஸ்டாலினின் மதுரை வடக்கு மண்டல தளபதியாக அறியப்படும் அமைச்சர் மூர்த்தியின் ஆதரவாளர் தான் ரகு பாலாஜி ஆவார். இவர் திமுகவின் தலைமைச் செயற்குழு உறுப்பினராகவும், கடந்த 25 ஆண்டுகளாகக் கட்சிப் பணியாற்றியும் வந்துள்ளார். அதேசமயம் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் எஸ்.ஆர்.தங்க பாண்டியன் களமிறங்கியுள்ளார். 

செல்லூர் ராஜூவுக்கு குறையும் மவுசு

இந்த நிலையில் 3 முறை இந்த தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ.,வாக உள்ள செல்லூர் ராஜூ மீது அந்த தொகுதி மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன. சுமார் 2.94 லட்சம் வாக்காளர்கள் உள்ளடக்கிய இந்த தொகுதியில் செல்லூர் ராஜூ கடந்த 15 ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினராக இருந்தும் தொகுதிக்கு பெரிதாக எதுவும் செய்யவில்லை என சொல்லப்படுகிறது. குறிப்பாக 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் அமைச்சராகவும் இருந்துள்ளார். மிகப்பெரிய செல்வாக்கு இருந்து அதனை சரியாக தொகுதிக்கு பயன்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு மக்களிடையே மேலோங்கியுள்ளது. 

இப்படியான நிலையில் சமீபத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவருடன் அண்ணாமலையை ஒப்பிட்டு பேசினார். இது அங்கு வாழும் முக்குலத்தோர் சமூக மக்களிடையே பெரும் அதிருப்தியை உண்டாக்கியிருக்கிறது. இதனால் அவர்கள் அதிமுக எதிர்ப்பு மனநிலைக்கு மாறியுள்ளனர். 

இதற்கிடையில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளராக இருக்கும் தங்கப்பாண்டியன் திமுக எதிர்ப்பு வாக்குகளை தன் பக்கம் இழுத்து வருகிறார். இதற்காக மிகப்பெரிய அளவில் களப்பணி ஆற்றியும் வருகிறார்.

ரகு பாலாஜிக்கு அதிகரிக்கும் வெற்றி வாய்ப்பு

இதனால் திமுக எதிர்ப்பு ஓட்டுகளை நம்பி இருக்கும் செல்லூர் ராஜூ விழிபிதுங்கியுள்ளார். தவெக பக்கம் செல்லும் வாக்குகளை தன் பக்கம் இழுக்கும் பொருட்டு விஜயையும், தவெகவையும் சரமாரியாக விமர்சித்து வருகிறார். ஆனால் அதிமுக, தவெக வேட்பாளர்களிடையே நடக்கும் போட்டி திமுக வேட்பாளர் ரகு பாலாஜிக்கு சாதகமாக அமைந்திருக்கிறது. அவர் செல்லும் இடமெல்லாம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது. அதேசமயம் அமைச்சர் மூர்த்தி செல்வாக்கும் இந்த மதுரை மேற்கு தொகுதிக்கு சாதகமாக மாறியிருக்கிறது. 

தலைப்பு செய்திகள்

சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
BMW iX3 Unveiled: ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Embed widget