வெயில் காலத்தில் தயிரை கெடாமல் பாதுகாப்பது எப்படி?

Published by: பேச்சி ஆவுடையப்பன்

பால் நன்றாக கொதிக்க வைத்து, சிறிது கெட்டியாக வரும் வரை காய்ச்ச வேண்டும். இதனால் தயிர் கட்டியாக வரும்.

பால் மிகவும் சூடாகவோ அல்லது மிகவும் குளிர்ச்சியாகவோ இல்லாமல், இளம் சூடாக இருக்கும்போது மட்டுமே தயிர் சேர்க்க வேண்டும்.

கோடையில் அதிக தயிர் சேர்த்தால் தயிர் விரைவில் புளிக்கும். எனவே 1 கப் பாலுக்கு கால் தேக்கரண்டி தயிர் போதுமானது.

மண்பானையில் தயிர் நன்றாக உறையும். நீண்ட நேரம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். ஸ்டீல் பாத்திரத்தையும் பயன்படுத்தலாம்.

கோடையில் 5 அல்லது 6 மணி நேரத்தில் தயிர் உறையும். அதிக நேரம் வைத்திருந்தால் புளித்துவிடும்.

தயிரை சற்று கெட்டியானதும் குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டும். இதனால் புளிப்பு தன்மை குறைக்கப்படுகிறது.

தயிரை உறைய வைக்கும்போது தண்ணீர் விழுந்தால், அது மெல்லியதாகிவிடும். விரைவில் கெட்டுவிடும்.

நேரடி வெப்பத்தில் வைத்தால் தயிர் விரைவில் புளிக்கும். எனவே குளிர்ச்சியான இடத்தில் வைக்கவும்.

நிறைய கிரீம் உள்ள பாலில் தயிர் கிரீமியாகவும் கெட்டியாகவும் வரும்.

இந்த டிப்ஸ்களைப் பின்பற்றினால் கோடையில் கூட சுவையான தயிர் பெறலாம்.