மேலும் அறிய

TVK Vijay: கடைசி நேரத்தில் வேட்பாளர்களை மாற்றிய விஜய் .. எந்தெந்த தொகுதி தெரியுமா?

TVK Candidate Change: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டிருக்கின்றனர்.

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில் தமிழக வெற்றிக் கழகம் 2 இடங்களில் வேட்பாளர்களை மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

சட்டமன்ற தேர்தலில் தவெக

வரும் ஏப்ரல் 23ம் தேதி தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த சட்டமன்ற தேர்தலில் 5 முனை போட்டி நிலவுகிறது. இதில் புதிதாக களம் கண்டுள்ள விஜயின் தமிழக வெற்றிக் கழகம் பெரும் எதிர்பார்ப்பிற்குரிய கட்சியாக மாறியுள்ளது. அந்த கட்சிக்கு இந்த தேர்தலில் விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேர்தலுக்கு முந்தைய பல்வேறு கருத்து கணிப்புகளில் கண்டிப்பாக தவெகவுக்கு மிகப்பெரிய வாக்கு வங்கி இருப்பது நிரூபணமாகும் என சொல்லப்படுகிறது. 

தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளிலும் தனித்து களம் காண்கிறது. இதில் அக்கட்சி தலைவர் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிடுகிறார். அவர் இரண்டு தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். தவெகவின் மற்ற வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு தாக்கலுக்கான கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது. 

கடைசி நேரத்தில் மாற்றப்பட்ட வேட்பாளர்கள்

இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டிருக்கின்றனர். ஒசூர் மற்றும் ஊத்தங்கரை தொகுதிகளுக்கான புதிய வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது. ஊத்தங்கரையில் முதலில் அறிவிக்கப்பட்ட குமரவேல் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக அதிமுகவில் இருந்து விலகி சமீபத்தில் தவெகவில் சேர்ந்த இளையராஜா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னதாக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு மாற்றப்பட்ட குமரவேலுவும்  சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்தார்.

ஓசூரில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அம்ரீஸ் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் வேந்தர்கரசன் வேட்பாளராக மனு தாக்கல் செய்ததாக சொல்லப்பட்டிருக்கிறது.ஏற்கனவே அந்த கட்சியில் மாற்றுக் கட்சியில் இருந்து வந்த 106 பேருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது கட்சி தொண்டர்களிடையே பெரும் பேசுபொருளாக மாறியிருந்த நிலையில் தற்போது ஊத்தங்கரை தொகுதியிலும் முன்னாள் அதிமுக பிரமுகரே தவெக வேட்பாளராக களமிறங்கியிருக்கிறார். 

விஜய் பரப்புரையில் தொடரும் தடை 

இதனிடையே தேர்தலுக்கு இன்னும் இரு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செல்ல திட்டமிட்டுள்ளார். ஆனால் அவருக்கு காவல்துறை தரப்பில் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. சென்னையில் ஒரு மணி நேரம் மட்டுமே சம்பந்தப்பட்ட தொகுதிகளில் அனுமதி வழங்கப்பட்ட நிலையில் அதை காரணம் காட்டி விஜய் தேர்தல் பரப்புரையை ரத்து செய்திருக்கிறார். விஜயின் அடுத்த பரப்புரை திருநெல்வேலியில் ஏப்ரல் 8ம் தேதி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
TN EB Tender: ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
TN EB Tender: ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
பட்ஜெட் விலையில் மாஸ் மைலேஜ்.. அறிமுகமாகியது அப்டேட்டட் 2026 TVS Radeon பைக்
பட்ஜெட் விலையில் மாஸ் மைலேஜ்.. அறிமுகமாகியது அப்டேட்டட் 2026 TVS Radeon பைக்
TTV Dhinakaran: அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்.. நல்லா இருக்கு உங்க நியாயம்.. தவெகவை சாடிய டிடிவி தினகரன்!
TTV Dhinakaran: அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்.. நல்லா இருக்கு உங்க நியாயம்.. தவெகவை சாடிய டிடிவி தினகரன்!
யூனிட் ரூ.35க்கு வாங்கினால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
யூனிட் ரூ.35க்கு வாங்கினால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
CM Vijay: இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
Embed widget