மேலும் அறிய

Premalatha Vijayakanth: திமுக கூட்டணியில் தேமுதிக.. ரொம்ப ஃபீல் பண்றேன்.. பிரேமலதா உருக்கம்!

தவறான கூட்டணியில் இத்தனை ஆண்டுகள் இருந்திருக்கிறோம். இப்போதான் வழி பிறந்திருக்கிறதோ என தோன்றுகிறது. இரண்டு தெய்வங்கள் ஆசியால் தான் இன்றைக்கு இந்த கூட்டணி அமைந்திருக்கிறது என பிரேமலதா தெரிவித்துள்ளார்.

திமுகவுடன் ஏன் இவ்வளவு நாள் கூட்டணி அமைக்கவில்லை என தான் ஃபீல் பண்ணியதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

2026 தமிழக சட்டமன்ற தேர்தல்

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள திமுக கூட்டணியில் முதல்முறையாக தேமுதிக இடம் பெற்றுள்ளது. அக்கட்சிக்கு 10 சட்டமன்ற தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. இதில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விருதாச்சலம் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அமைச்சர் சி.வி.கணேசன் உடனிருந்தார். 

கருணாநிதி - விஜயகாந்த் உறவு

தொடர்ந்து விருதாச்சலம் சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய பிரேமலதா, “கலைஞர் கருணாநிதி மீது கேப்டன் விஜயகாந்துக்கு அவ்வளவு பாசம் இருந்தது. இவர் விஜி விஜி என அழைக்க, அவர் அண்ணன் அண்ணன்” என்பார். நான் பக்கத்தில் உட்கார்ந்து பாத்திருக்கிறேன். நாங்க எல்லா முதலமைச்சரையும் பார்த்திருக்கிறோம். ஆனால் ஏதாவது ஒரு விஷயத்திற்கு சந்திக்க வேண்டும் என அப்பாயின்மென்ட் கேட்போம். மற்ற முதலமைச்சர்கள் என்றால் நிச்சயம் சந்திக்க  3 நாட்களாவது ஆகியிருக்கும். ஆனால் விஜயகாந்த் கேட்டால் அடுத்த 5வது நிமிடத்தில் எப்போது வர வேண்டும் என்ற பதில் கிடைக்கும். ஏதாவது ஒரு வேண்டுகோள் விடுத்தால் காலையில் 6 மணிக்கு கருணாநிதியே போனில் நேரடியாக தொடர்பு கொள்வார். எனக்கு அதைக் கண்டு ஆச்சரியமாக இருப்பார். 

திமுக கூட்டணியில் தேமுதிக

அந்த நாட்களை நான் நினைக்கும்போது ஏன் இவ்வளவு நாட்களாக திமுக - தேமுதிக கூட்டணி அமையவில்லை என உண்மையிலேயே நான் ஃபீல் பண்ணுகிறேன். தவறான கூட்டணியில் இத்தனை ஆண்டுகள் இருந்திருக்கிறோமோ என்ற கேள்வி தான் எழுகிறது. இப்போதான் வழி பிறந்திருக்கிறதோ என தோன்றுகிறது. கருணாநிதி, விஜயகாந்த் என்ற இரண்டு தெய்வங்கள் மேலே இருந்து ஆசி வழங்குவதால் தான் இன்றைக்கு இந்த கூட்டணி அமைந்திருக்கிறது. குடும்ப உறவு, கூட்டணி உறவாக மாறியிருக்கிறது. 234 தொகுதிகளிலும் நான் எங்கு வேண்டுமானாலும் போட்டியிட்டிருக்கலாம். தேமுதிகவில் விருப்பமனு வழங்கிய மாவட்ட செயலாளர்கள் அனைவரும் அண்ணி எங்க தொகுதியில போட்டி போடுங்க என சொன்னார்கள். எல்லார் சொல்வதையும் நான் கேட்பேன். ரொம்ப நிதானித்து நான் விருதாச்சலத்தை தேர்வு செய்தேன்.   இது கேப்டன் விஜயகாந்த் முதல்முதலில் போட்டியிட்ட தொகுதியாகும்" என தெரிவித்தார். 

Advertisement

தலைப்பு செய்திகள்

TN Cabinet: அமைச்சரவை மாற்றத்திற்கு தயாராகும் CM விஜய் - லிஸ்டில் 7 பேரா? என்ன காரணம், யாருக்கு ஜாக்பாட்?
அமைச்சரவை மாற்றத்திற்கு தயாராகும் CM விஜய் - லிஸ்டில் 7 பேரா? என்ன காரணம், யாருக்கு ஜாக்பாட்?
அமைச்சர் கோட்டாவில் வசூல் வேட்டை; சிக்கப்போகும் முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர்கள்?
அமைச்சர் கோட்டாவில் வசூல் வேட்டை; சிக்கப்போகும் முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர்கள்?
Impact of ABP Nadu's news: ஏபிபிநாடு செய்தி எதிரொலி! ஆபத்துக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள் – அதிரடி சுத்தம்!
Impact of ABP Nadu's news: ஏபிபிநாடு செய்தி எதிரொலி! ஆபத்துக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள் – அதிரடி சுத்தம்!
TN Weather Update: தமிழக வானிலை அறிக்கை - எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை?
தமிழக வானிலை அறிக்கை - எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Cabinet: அமைச்சரவை மாற்றத்திற்கு தயாராகும் CM விஜய் - லிஸ்டில் 7 பேரா? என்ன காரணம், யாருக்கு ஜாக்பாட்?
அமைச்சரவை மாற்றத்திற்கு தயாராகும் CM விஜய் - லிஸ்டில் 7 பேரா? என்ன காரணம், யாருக்கு ஜாக்பாட்?
அமைச்சர் கோட்டாவில் வசூல் வேட்டை; சிக்கப்போகும் முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர்கள்?
அமைச்சர் கோட்டாவில் வசூல் வேட்டை; சிக்கப்போகும் முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர்கள்?
Impact of ABP Nadu's news: ஏபிபிநாடு செய்தி எதிரொலி! ஆபத்துக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள் – அதிரடி சுத்தம்!
Impact of ABP Nadu's news: ஏபிபிநாடு செய்தி எதிரொலி! ஆபத்துக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள் – அதிரடி சுத்தம்!
TN Weather Update: தமிழக வானிலை அறிக்கை - எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை?
தமிழக வானிலை அறிக்கை - எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை?
த.வெ.க-வில் இணையும் 4 முன்னாள் அமைச்சர்கள், 7 முன்னாள் எம்.எல்.ஏ-க்கள்; அதிர்ச்சியில் அதிமுக!
த.வெ.க-வில் இணையும் 4 முன்னாள் அமைச்சர்கள், 7 முன்னாள் எம்.எல்.ஏ-க்கள்; அதிர்ச்சியில் அதிமுக!
Tata Sieera EV: சியாரா விலையில் மின்சார கார்..! 535KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - ரூ.8,400 EMI - முழு விவரங்கள்
சியாரா விலையில் மின்சார கார்..! 535KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - ரூ.8,400 EMI - முழு விவரங்கள்
Gold and silver rate today : நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்தது- வெள்ளி விலை என்ன தெரியுமா.?
நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்தது- வெள்ளி விலை என்ன தெரியுமா.?
290 கி.மீட்டர் மைலேஜ்.. Vespa S 150 ஸ்கூட்டரை வாங்கலாமா? விலை எப்படி?
290 கி.மீட்டர் மைலேஜ்.. Vespa S 150 ஸ்கூட்டரை வாங்கலாமா? விலை எப்படி?
Embed widget