மேலும் அறிய

லூலூ மால், டி-மார்ட்டை அனுமதித்து சிறுவணிகர்களை வஞ்சித்தது திமுக! - சி.வி. சண்முகம் அட்டாக்

அரிசி, பருப்பு கிடைக்கிறதோ இல்லையோ, எல்லா இடத்திலும் கஞ்சா தாராளமாகக் கிடைக்கிறது. திமுக ஆட்சி நீடித்தால் தமிழ்நாடு அடுத்த பஞ்சாப் போல மாறிவிடும் !

விழுப்புரம் :   சிறு வியாபாரிகள் வாழ்வாதாரத்தைச் சீரழிக்கும் வகையில் லூலு (Lulu) மற்றும் டி-மார்ட் (D-Mart) போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களை அனுமதித்தது திமுகதான் என முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விமர்சனம்.


விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணி கட்சி பாமக வேட்பாளர் கணேஷ்குமாரை ஆதரித்து அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் தலைமையில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் விழுப்புரம் சாலையில் நடைபெற்றது, இதற்கு முன்னதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் செஞ்சி சந்தைமேடு பகுதியில் உள்ள செல்வ விநாயகர் ஆலயத்தில் இருந்து ரோட் ஷோ மேற்கொண்டு பிரச்சார வாகனத்தில் இருந்து வேட்பாளருக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்குகள் சேகரித்தபடி செஞ்சி பேருந்து நிலையம் வழியாக பொதுக்கூட்டம் நடைபெறும் மேடைக்கு வருகை புரிந்தார், இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மேடையில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம்:- 

இந்த சட்டமன்ற தேர்தல் ஒரு முக்கியமான தேர்தல், 525 வாக்குறுதிகளை கவர்ச்சியான திட்டங்களை கூறி ஏமாற்றி ஆட்சி தட்டில் அமர்ந்தது திமுக, இப்போது மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது, இந்த ஐந்து ஆண்டு காலத்தில் என்ன செய்துள்ளார்கள், தமிழகத்தில் என்ன முன்னேற்றம் ஏற்பட்டு விட்டது என மக்கள் சிந்திக்க வேண்டும், இந்த செஞ்சி பகுதியை சுற்றி விவசாயிகள் தான் அதிகம் உள்ளார்கள் அவர்களுக்கு கூட ஒன்றும் செய்யவில்லை, 4-ஆம் தேதி இந்த மக்கள் விரோத ஆட்சி தூக்கி எறியப்பட போகிறது, இதுவரை எந்த விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை ஆனால் அம்மாவுடைய 10 ஆண்டு காலம் ஆட்சியிலே இரண்டு முறை விவசாய கடனை தள்ளுபடி செய்து சாதனை படைத்த அரசு அம்மாவுடைய அரசு, 12,500 கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்தவர் எடப்பாடியார், விவசாயிகள் வேதனை அறிந்த எடப்பாடியார் ஆட்சிக்கு வந்ததும் விவசாய கடன் தள்ளுபடி செய்யபடும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார், ஆனால் ஸ்டாலின் அதை பற்றி பேசுவது கூட இல்லை.

விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள் இதை உணர்ந்த எடப்பாடியார் இதுவரை தமிழ்நாட்டிலே எந்த தலைவரும் கொண்டு வராத புதிய திட்டம் விவசாயிகள் பயிர் வைக்கும் அந்த பயிர் செலவு ஒரு ஹெக்டருக்கு 15 ஆயிரம் ரூபாய் உற்பத்தி மானியமாக விவசாயிகளுக்கு கொடுக்கப்படும் என்று கூறியுள்ளார், கடந்த ஐந்து ஆண்டுகள் இந்த செஞ்சி தொகுதிக்கு 10 ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினர் மஸ்தான், மற்றும் அவரது மகன் பேரூராட்சி தலைவர் இந்த தொகுதிக்கு என்ன செய்தார், சில காலம் அமைச்சராகவும் இருந்தார், அப்போதும் ஒன்றும் செய்யவில்லை, தனக்கு ஓட்டு போட்ட வாக்காளருக்கு என்ன செய்திருக்கிறார், செஞ்சி தொகுதியில் உள்ள அனைத்து ஊராட்சி சாலைகளும் குண்டும் குழியுமாக உள்ளது.

கிராமப்புற சாலைகள் போட மாட்டார்கள், நெடுஞ்சாலையில் மட்டும் போடுவார்கள் ஏன் என்றால் அதில் தான் 20 சதவீதம் கமிஷன், சிறுபான்மையினர் மக்களை ஏமாற்றி அவர்களை பயமுறுத்தி அவர்களது வாக்குகளை பெற்ற அவர்களுக்கு கூட ஒன்றும் செய்யவில்லை,  வக்ஃப் போர்டு அமைச்சராக இருந்து வக்ஃப் போர்டு இடத்தை தனது பெயருக்கு மாற்றி கொண்டார், மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை, இந்த தேர்தல் மதத்துக்கான தேர்தல் அல்ல திமுக தவறாக ஒரு கட்டமைப்பை ஏற்படுத்துகிறது, அதிமுக வந்தால் நாடு வீணாகிவிடும் என்று சொல்கிறார்கள், இந்த ஐந்து ஆண்டு காலம் திமுக ஆட்சியில் தான் இந்த தமிழ்நாடு குட்டிசுவரகியுள்ளது.

கஞ்சா தமிழ்நாடு, போதை தமிழ்நாடு ஆகியுள்ளது, திமுக ஆட்சி வந்தால் அடுத்த பஞ்சாப் போன்று தமிழ்நாடு ஆகி விடும், அரிசி பருப்பு கிடைக்குதா இல்லையோ எல்லா இடத்திலும் கஞ்சா கிடைக்குது, கஞ்சா புழக்கத்தால் என்ன ஆகுது எங்கே பார்த்தாலும் கொலை கொள்ளை, கூட்டு பாலியல் பலாத்காரம், வீட்டில் இருக்கும் பெண்கள் கற்பழிப்பு, சாலையில் நடந்து செல்லும் பெண் கடத்தி சென்று கற்பழிப்பு, இதெல்லாம் இந்த முதலமைச்சருக்கு தெரியாது, எதுவுமே நடக்காதது போல நடிப்பார், ஆனால் இதையெல்லாம் நாம் பேசினால் பாத்தியா அந்த சண்முகம் பேசிட்டான் என்று இந்த குஷ்பு, கனிமொழிக்கு நாம் பேசுவது மட்டும் தான் தெரியும், ஆனால் இந்த கொலை, கொள்ளை கற்பழிப்பு எல்லாம் கண்ணுக்கு தெரியாது, சரி நான் பேசுனா தான் தப்பு, நீங்கள் ஏலம் எடுத்த கட்சி பொட்டி பார்ட்டி, பொட்டிலதா ட்யூப் லைட் பக்கத்தில் வைத்து கொண்டு எங்கள் அண்ணன் மீது ஒரே குறை மட்டும் தான் உள்ளது அது கற்பழிப்பு கொள்ளை என்று கூறுகிறார் இதற்கு மேல் என்ன வேண்டும்.

எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது சிறப்பாக பணியாற்றியவர் கணேஷ்குமார், நன்கு படித்தவர், உங்களுடைய கோரிக்கைகளை போராடி வென்று கொடுக்கும் வேட்பாளர், எனவே அவருக்கு வாக்களித்து வெற்றிபெற செய்யுங்கள், திமுக எப்பயுமே ரெட்டை வேடம் போடுவது மகளிர் இடஒதுக்கீடு எதிராக எப்படியெல்லாம் டிராமா நாடகம் மகளிர்க்கு இடஒதுக்கீடு கூடாதா, கனிமொழி மட்டும் தான் எம். பி ஆக வேண்டுமா, மற்ற பெண்கள் ஆக கூடாதா? இந்த பகுதியில் சிறுவியபாரிகள் அதிகம் உள்ளீர்கள் சிறுவியபாரம் பாதிப்பிற்கு காரணம், லூலூ மற்றும் டிமார்ட் இதை ஆதரித்தது திமுக, இதை அப்போவே அம்மா எதிர்த்தார்கள், சிறுவணிகம் காப்பாற்ற பட வேண்டும் என்றால், மாம்பழத்திற்கு வாக்களியுங்கள் என்று கூறி முடித்தார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

சிங்கம்புணரி பள்ளியில் மாணவர்களுக்கு வாக்குச்சீட்டு தேர்தல்: ஜனநாயகத்தின் முதல் பாடம்!
சிங்கம்புணரி பள்ளியில் மாணவர்களுக்கு வாக்குச்சீட்டு தேர்தல்: ஜனநாயகத்தின் முதல் பாடம்!
TN By-Election: திருச்சி கிழக்கில் தேர்தல் பணிகளை தொடங்க அவசர உத்தரவு - தேதி எப்போது அறிவிப்பு? - சூடுபிடிக்கும் அரசியல் களம்
திருச்சி கிழக்கில் தேர்தல் பணிகளை தொடங்க அவசர உத்தரவு - தேதி எப்போது அறிவிப்பு? - சூடுபிடிக்கும் அரசியல் களம்
காங்கிரஸ் செய்தது தவறு; திமுகவை குறைத்து மதிப்பிடுவது அறியாமை : கார்த்திக் சிதம்பரம் எம்பி பேட்டி !
காங்கிரஸ் செய்தது தவறு; திமுகவை குறைத்து மதிப்பிடுவது அறியாமை : கார்த்திக் சிதம்பரம் எம்பி பேட்டி !
Puducherry CM Rangaswamy : புதுச்சேரி முதல்வராக பதவியேற்றார் ரங்கசாமி..! பதவி பிரமாணம் செய்து வைத்த ஆளுநர் கைலாசநாதன்...
Puducherry CM Rangaswamy : புதுச்சேரி முதல்வராக பதவியேற்றார் ரங்கசாமி..! பதவி பிரமாணம் செய்து வைத்த ஆளுநர் கைலாசநாதன்...
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த திடீர் எச்சரிக்கை!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
​
​"நீயா, நானா?" மது வாங்குவதில் வந்த சண்டை.. நண்பனை சேற்றில் அமுக்கிக் கொன்ற வாலிபர்..!
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
Embed widget