மேலும் அறிய

Annamalai: வாக்கு செலுத்தியபின் அண்ணாமலை சொன்ன 'அந்த' விஷயம்! – பரபரக்கும் அரசியல் களம்

Tamil Nadu Election 2026 Voting: இரண்டு மூன்று தினங்களாக தமிழகத்தில் விரும்பத்தகாத செயல்கள் நடைபெற்று உள்ளது. திமுக அதனை செய்துள்ளது. வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் கூறிய கருத்துக்களுக்கு நான் உடன்படுகிறேன்.

“இந்த தேர்தலில் ஜனநாயகம்தான் ஜெயிக்கும் பணம் எப்பொழுதும் ஜெயிக்காது. மக்கள் சரியாக வாக்களித்தால் நல்லவர்கள் ஜெயிப்பார்கள்” என்று கோவையில் வாக்களித்தப்பின் அண்ணாமலை தெரிவித்தார்.

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அவிநாசி சாலையில் உள்ள பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்களித்தார்.

வாக்கு செலுத்திய பிறகு செய்தியாளர்களுக்கு அண்ணாமலை பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது, “தமிழகத்தில் காலையிலிருந்து எல்லோரும் சிறப்பாக ஜனநாயக கடமையை ஆற்றி கொண்டு உள்ளார்கள். அனைவரும் நிச்சயமாக ஜனநாயக கடமையை செய்ய வேண்டும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். அனைத்து வசதிகளும் வாக்குச்சாவடிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யாரும் வாக்களிக்காமல் வீட்டில் இருந்து விடாதீர்கள். 84 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அமைதியான மாநிலம் தான் அதிக அளவிலான வயலன்ஸ் எதுவும் இருக்காது. இரண்டு மூன்று தினங்களாக பல்வேறு பகுதிகளில் பணம் கொடுப்பது நகைகள் கொடுப்பது கோவையிலும் அதிக பண பட்டுவாடா நடப்பது போன்ற சம்பவங்கள் உள்ளது.

பேருந்து வசதிகள் குறைவு

சென்னையில் இருந்து தென் தமிழகத்திற்கு செல்லக்கூடிய பேருந்து வசதிகள் குறைவாக உள்ளது. கோவையில் இருந்து வெளியூர் செல்லும் பேருந்து வசதிகளும் குறைவாக உள்ளது என்று வாக்காளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். எனவே தேர்தல் ஆணையம் இன்னும் இந்த வசதிகளை சிறப்பாக செய்திருக்கலாம் என்பது என்னுடைய கருத்து.

தேர்தல் ஆணையம் இன்னும் கவனம் செலுத்தி அனைவரும் வாக்களிப்பதற்கான வழிவகையை செய்ய வேண்டும். பல்வேறு பகுதிகளில் பணம் பட்டுவாடா தைரியமாக நடக்கிறது வாக்காளர்களுக்கு அணிகலன்களை கொடுக்கிறார்கள். சாதாரண மக்கள் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் எடுத்துச் சென்றால் தேர்தல் ஆணையத்திடம் மாட்டிக் கொள்ள வேண்டிய உள்ளது.

திமுகவை கண்டிக்கின்றோம்

கோவை தெற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் போராட்டம் செய்ததை கூட பார்க்க முடிந்தது. அதையெல்லாம் வாக்காளர்களும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். SIR மிக நேர்மையாக தான் நடந்துள்ளது. தேவையில்லாமல் வாக்காளர்களை நீக்கவில்லை தமிழகத்தில் நடுநிலையாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த தேர்தல் வழக்கமானதை காட்டிலும் அடுத்த கட்டத்திற்கு சென்று விட்டது. பணப்பட்டுவாடா மற்றும் நகைகளை தைரியமாக கொடுப்பதை எல்லாம் நான் பார்த்ததில்லை. திமுக அதன் Soft Campaign செய்துள்ளது தேர்தல் ஆணையம் அதில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக பல்வேறு தவறுகளை செய்கிறார்கள் அதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

நான் எப்பொழுது வந்தாலும் பிரவுன் பேண்ட் வெள்ளை சர்ட் அணிந்து கொண்டு தான் வருவேன். இதே ஆடையை தான் ஜெகன்மோகன் ரெட்டி, விஜய் ஆகியோர் அணிகிறார்கள், நான் காவல் துறையில் இருந்து வெளியில் வந்ததால் எப்பொழுதும் என்னுடனே இது இருக்க வேண்டும் என்று இதனை அணிகிறேன். என்னுடைய ஜனநாயக கடமையை நான் செய்து வருகிறேன். என்னை எந்தப் பக்கமும் சேர்த்து விடாதீர்கள்.

கடந்த இரண்டு மூன்று தினங்களாக தமிழகத்தில் விரும்பத்தகாத செயல்கள் நடைபெற்று உள்ளது. திமுக அதனை செய்துள்ளது. வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் கூறிய கருத்துக்களுக்கு நான் உடன்படுகிறேன். அனைவரும் முறைப்படி வாக்கு செலுத்துவார்கள் என்று நம்புகிறேன். இந்த தேர்தலில் ஜனநாயகம் தான் ஜெயிக்கும் பணம் எப்பொழுதும் ஜெயிக்காது. மக்கள் சரியாக வாக்களித்தால் நல்லவர்கள் ஜெயிப்பார்கள். என்னதான் தேர்தல் ஆணையமாக இருந்தாலும் அதில் உள்ள கீழ்மட்ட அதிகாரிகள் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் தான். தேர்தல் ஆணையம் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை சரியாக செய்ய தவறிவிட்டது என்பது தான் என்னுடைய கருத்து. தேர்தல் நடைமுறை வருவதற்கு முன்பே செய்ய வேண்டியது எல்லாம் செய்து விட்டார்கள். தேர்தல் ஆணையம் அதனை கண்காணித்திருக்க வேண்டும்.புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வாக்காளர்கள் மனசாட்சிக்கு உட்பட்டு வாக்களிப்பார்கள் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Heavy Rain Alert : சூறாவளி காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கும்.! 3 நாட்களுக்கு அலர்ட் – எந்தெந்த மாவட்டங்களுக்கு? முழு லிஸ்ட் இதோ..
சூறாவளி காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கும்.! 3 நாட்களுக்கு அலர்ட் – எந்தெந்த மாவட்டங்களுக்கு? முழு லிஸ்ட் இதோ..
Embed widget