மேலும் அறிய

TN Election 2026: யாருக்கு அந்த 14 லட்சம் ஓட்டு - வெற்றியை தீர்மானிக்கும் 1.18 கோடி பேர் - 43 லட்சம் தாத்தா, பாட்டி

TN Election 2026: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் எந்த வயது வரம்பினர் வெற்றியை தீர்மானிக்கும் அளவிலான, வலுவான வாக்கு வங்கியை கொண்டுள்ளனர் என கீழே விவரிக்கப்பட்டுளது.

TN Election 2026: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 40 முதல் 49 வயது வரம்பினர் அதிகபட்சமாக, ஒரு கோடியே 18 லட்சம் பேர் வாக்காளர்களாக உள்ளனர்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவிற்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ளது. வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கடைசி நாளான இன்று அனல் பறக்க பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். இதுபோக வாக்காளர்களின் ஒவ்வொரு பிரிவையும் குறித்து ஏராளமான தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளனர். முதல் தலைமுறை மற்றும் இளம் வாக்காளர்கள், குடும்ப தலைவர் & தலைவி மற்றும் மூத்த குடிமக்கள் என பல்வேறு பிரிவுகளாக  பல நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த சட்டமன்ற தேர்தலில் எந்தெந்த வயது வரம்பில் எவ்வளவு வாக்காளர்கள் தமிழகத்தில் உள்ளனர் என்ற விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம். 

முதல் தலைமுறை வாக்காளர்கள்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் முதல் தலைமுறை வாக்காளர்கள் மீது இந்த முறை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணமாக தவெக தலைவர் விஜயின் வருகை கூறப்படுகிறது. கடந்த முறை அதிமுகவை வீழ்த்தி ஆளுங்கட்சியாக வந்த திமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்குமான ஒட்டுமொத்த வாக்கு சதவிகிதமே 3 சதவிகிதம் மட்டும் தான். இதனால் 2.54 சதவிகித வாக்கு வங்கிகளை கொண்டுள்ள முதல் தலைமுறையினர் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக கருதப்படுகின்றனர். 18 முதல் 19 வயதுக்குட்பட்ட வரம்பில் 7 லட்சத்து 62 ஆயிரம் ஆண் வாக்காளர்கள், 6 லட்சத்து 96 ஆயிரத்து பெண் வாக்காளர்கள், 99 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் சுமார் 14 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளன.

20-39 வயதில் எத்தனை வாக்காளர்கள்

தமிழ்நாட்டில் இந்த சட்டமன்ற தேர்தலில் 20 முதல் 29 வயதுக்கு உட்பட்ட வரம்பில் சுமார் 54 லட்சத்து 93 ஆயிரம் ஆண்கள், 52 லட்சத்து 22 ஆயிரம் பெண்கள், 2 ஆயிரத்து 545 மூன்றாம் பாலினத்தவரும் என ஒரு கோடியே 6 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் மாநிலத்தின் ஒட்டுமொத்த வாக்காளர்கள் பட்டியலில் 18.69 சதவிகிதம் ஆகும். 30 முதல் 39 வயது வரையிலான வரம்பில் சுமார் 57 லட்சத்து 49 ஆயிரத்திற்கும் அதிகமான பெண்கள் மற்றும் ஆயிரத்து 316 மூன்றாம் பாலினத்தவரும்  என மொத்தம் ஒரு கோடியே 15 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர். அதாவது மாநிலத்திலேயே அதிக வாக்கு வங்கி கொண்ட இரண்டாவது வயது வரம்பாக 30 முதல் 39 பிரிவு உள்ளது.

வெற்றியை தீர்மானிக்கும் 1.18 கோடி பேர்

மாநிலத்திலேயே அதிக வாக்குகளை கொண்டு வயது வரம்பாக 40 முதல் 49 வயது பிரிவு உள்ளது. ஆண் வாக்காளர்கள் 57 லட்சத்து 29 ஆயிரத்திற்கும் அதிகமாகவும், பெண் வாக்காளர்கள் 61 லட்சத்து 69 ஆயிரத்திற்கும் அதிகமாகவும், ஆயிரத்து 316 மூன்றாம் பாலினத்தவரும் உள்ளனர். அதன்படி ஒரு கோடியே 18 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள், அதாவது மாநிலத்தின் ஒட்டுமொத்த வாக்குகளில் 20.75 சதவிகிதம் இந்த பிரிவில் உள்ளனர்.

முதியோர்கள் நிலவரம் என்ன?

50 முதல் 59 வயது வரையிலான வரம்பில் ஒரு கோடியே 3 லட்சத்திற்கும் அதிகமானோரும், 60 முதல் 69 வயது வரையிலான வரம்பில் 67 லட்சத்திற்கும் அதிகமானோரும், 70 முதல் 79 வரையிலான வரம்பில் 34 லட்சத்திற்கும் அதிகமானோரும் தகுதியான வாக்காளர்களாக உள்ளனர். 80 வயதுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் பிரிவில் 10 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் தபால் வாக்குகள் மூலம் தங்களது ஜனநாயக கடைமையை ஆற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டின் வாக்காளகள் நிலவரம்:

தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 5 கோடியே 73 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் 2 கோடியே 80 லட்சத்திற்கும் அதிகமான ஆண்களும், 2 கோடியே 93 லட்சத்திற்கும் அதிகமான பெண்களும், 7 ஆயிரத்திற்கும் அதிகமான மூன்றாம் பாலினத்தவரும் வேட்பாளர்களாக உள்ளனர்.

வயது ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் சதவிகிதம் (%)
18-19 7,62,308 6,96,632 99 2.54
20-29 54,93,148 52,22,764 2,545 18.69
30-39 57,49,744 58,60,998 2,748 20.25
40-49 57,29,991 61,69,006 1,316 20.75
50-59 49,72,475 54,10,814 645 18.10
60-69 32,17,690 35,51,790 257 11.81
70-79 16,17,836 18,17,706 97 5.99
80+ 4,87,536 5,75,195 21 1.85
மொத்தம் 2,80,30,658 2,93,04,905 7,728 100

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Trump Praises India: “அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
“அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
Yamaha Scooter Launch: ஆக்டிவாவுக்கு ஆப்பு கன்பார்ம்.! ஃபாசினோ, ரேZR ஹைப்ரிட்களின் 2026 பதிப்பை இறக்கிய யமாஹா; விலை என்ன.?
ஆக்டிவாவுக்கு ஆப்பு கன்பார்ம்.! ஃபாசினோ, ரேZR ஹைப்ரிட்களின் 2026 பதிப்பை இறக்கிய யமாஹா; விலை என்ன.?
Trump on Hormuz: ''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
Embed widget