TN Exit Poll 2021 LIVE: தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? இன்று இரவு 7 மணிக்கு ABP நாடு வெளியிடுகிறது EXIT POLL
இந்தியாவின் நூற்றாண்டு அனுபவம் கொண்ட ABP நிறுவனம், ‛சி வோட்டர்ஸ்’ உடன் இணைந்து தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை இன்று இரவு 7 மணிக்கு பிரத்யேகமாக வெளியிடுகிறது. தமிழில் ABP நாடு இணையதளம் மற்றும் அப்ளிகேஷன்களில் அந்த முடிவுகளை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் மிக முக்கிய மாநிலங்களான தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா, அசாம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் ஒரு கட்டமாகவும், மற்ற மாநிலங்களில் பல கட்டங்களாகவும் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மே 2 வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கும் நிலையில், ஒவ்வொரு மாநிலத்திலும் யார் ஆட்சியை பிடிப்பார் என்கிற எதிர்பார்ப்பு அந்தந்த மாநில மக்களிடத்தில் உள்ளது.
இந்தியாவின் பாரம்பரிய செய்தி நிறுவனமான ABP செய்தி குழுமம், தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளை ‛சி வோட்டர்ஸ்’ உடன் இணைந்து வழங்கியது. அதே போல் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் எடுத்து முடிக்கப்பட்ட நிலையில், அதற்கான முடிவுகளை இன்று இரவு 7 மணிக்கு வெளியிடுகிறது ABP செய்தி குழுமம். இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் முடிவுகள் வெளியாக இருக்கும் நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களுக்காக சமீபத்தில் துவங்கப்பட்ட ABP நாடு டிஜிட்டல் தளம் மூலமாக , தமிழிலும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாக உள்ளன.
இந்திய நேரப்படி சரியாக இரவு 7 மணிக்கு ABP நாடு இணையதளம் மற்றும் அப்ளிகேஷன் உள்ளிட்டவற்றில் தமிழகம் உள்ளிட்ட தேர்தல் முடிவுற்ற அனைத்து மாநிலங்களின் தேர்தல் முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆட்சியை தொடரப்போகிறதா அதிமுக? மீண்டும் முதல்வராவாரா எடப்பாடி பழனிச்சாமி? திமுகவின் கரம் உயர்ந்து, முதல் முறையாக முதல்வராகிறாரா ஸ்டாலின்? இவை அனைத்திற்கும் இன்று மாலை 7 மணிக்கு விடை கிடைக்கும். தமிழகத்தை வட தமிழகம், தென் தமிழகம், கொங்கு மண்டலம், டெல்டா மண்டலம் என நான்கு மண்டலங்களாக பிரித்து அங்கு கட்சிகளின் வெற்றி வாய்ப்புகள் என்ன? பிரபல வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது ? என்பன உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் கருத்துக்கணிப்புகள் எடுக்கப்பட்டுள்ளது. அடுத்து ஆட்சி அமைக்கப்போவது யார் என்பதற்கான விடை இதன் மூலம் மக்களுக்கு தெளிவாக தெரியவரும்.
அதுமட்டுமின்றி , கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் அரசு அமைய என்ன காரணம்? எது வாய்ப்பை ஏற்படுத்தியது? எது வாய்ப்பை பறித்தது? யார் பலமாக இருந்தது? யாருக்கு எது பலவீனமாக இருந்தது? போன்ற பல்வேறு தரவுகளை இன்றைய அரசியல் பார்வையோடு ஒப்பிட்டு தேர்தல் ஆய்வு கட்டுரைகளும் அடுத்தடுத்து இன்று வெளியாக உள்ளன. மே 2 தேர்தல் கொண்டாட்டங்களுக்குத் தேர்தல் ஆணையம் தடை விதித்திருக்கும் நிலையில், இன்று இரவே வீட்டில் இருந்த படி, விரல் நுனியில் தமிழகம் மட்டுமல்லாது மேற்கு வங்கம், அசாம், கேரளா, புதுச்சேரியின் முடிவுகளை அறிந்து கொண்டாடுங்கள். துல்லியமான, தேர்தலுக்கு பிந்தைய இந்த கருத்துக்கணிப்பு முடிவுகளுக்காக இன்னும் சில மணி நேரங்கள் மட்டும் காத்திருங்கள்... அது வரை அடுத்தடுத்து வரும் அரசியல் தரவுகளை அசைபோடுங்கள், இரவு 7 மணிக்கு உங்களை தேடி வருகிறோம்!