மேலும் அறிய

TN Election 2026: திமுகவின் 8 கோட்டைகள் - அதிமுகவை சோதிக்கும் வடக்கு & மத்திய பகுதி - EPS-க்கு கொங்கு போதுமா?

TN Assembly Election 2026: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மாவட்ட வாரியாக திமுக மற்றும் அதிமுகவின் பலம் எப்படி உள்ளது என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

TN Assembly Election 2026: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், 2021 தேர்தலில் எந்த கூட்டணி எந்த மாவட்டத்தில் ஆதிக்கம் செலுத்தியது என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026:

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில வாரங்களே உள்ளன. தேர்தல் முடிவில்  வரலாற்றில் முதல்முறையாக திமுக தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்குமா? அல்லது எடப்பாடி பழனிசாமி இரண்டாவது முறையாக முதலமைச்சர் ஆவரா? என்ற கேள்விகளே அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக உள்ளது. இந்நிலையில், கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், திமுக ஆட்சியை பிடிக்கவும், 10 ஆண்டுகளுக்குப் பிறகு அதிமுக ஆட்சியில் இருந்து அகற்றப்படவும், எந்தெந்த மாவட்டங்களின் தேர்தல் முடிவுகள் மிக முக்கிய பங்கு வகித்தன? எந்த மாவட்டம் எந்த கட்சிக்கான கோட்டையாக இருந்தது? எந்தெந்த மாவட்டங்களில் இந்த இரண்டு கட்சிகளும் முழுமையான வெற்றியை பதிவு செய்தன? என்பது போன்ற கேள்விகளுக்கான பதில்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

திமுக கோட்டையான 8 மாவட்டங்கள்:

ஒரு மாவட்டத்தில் உள்ள அத்தனை தொகுதிகளையும் கைப்பற்றுவது என்பது அவ்வளவு எளிதான காரியமில்லை. அப்படி நடந்தால் அந்த பகுதியில் குறிப்பிட்ட கட்சி எவ்வளவு வலுவானதாக இருக்கிறது என்பதை மட்டுமின்றி, எதிர்க்கட்சிகள் மீது மக்கள் எந்த அளவிற்கு அதிருப்தியில் இருக்கின்றனர் என்பதையும் வெளிப்படுத்துகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் பிரதான தொழில்மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் உள்ள அத்தனை தொகுதிகளையும் கடந்த தேர்தலில் திமுக கைப்பற்றியது. அந்த வகையில் மட்டும் திமுக 49 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதவாதும் மாநிலம் முழுவதும் அதிமுக கூட்டணி கைப்பற்றிய 75 தொகுதிகளில், மூன்றில் இரண்டு பங்கை எட்டே மாவட்டங்களில் திமுக கூட்டணி கைப்பற்றியது.

  • சென்னை - 16 தொகுதிகள்
  • திருவள்ளூர் - 10 தொகுதிகள்
  • காஞ்சிபுரம் - 2 தொகுதிகள்
  • திருச்சி - 9 தொகுதிகள்
  • கரூர் - 4 தொகுதிகள்
  • பெரம்பலூர் - 2 தொகுதிகள்
  • அரியலூர் - 2 தொகுதிகள்
  • ராமநாதபுரம் - 4 தொகுதிகள்

அதிமுகவை சோதிக்கும் வடக்கு & மத்திய மாவட்டங்கள்:

மாவட்டங்களை முழுமையாக கைப்பற்றுவதோடு மட்டுமின்றி, பல மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான தொகுதிகளை கைப்பற்றுவதிலும் திமுக கூட்டணி ஆதிக்கம் செலுத்தியுள்ளது. குறிப்பாக மத்திய மாவட்டங்களில் அதிமுக கூட்டணி மிக மோசமான வெற்றியையே பதிவு செய்துள்ளது. அதன்படி,

  • வடக்கு மண்டலத்தில் உள்ள 80 சட்டமன்ற தொகுதிகளில் 62 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. 
  • மத்திய மண்டலத்தில் உள்ள 46 தொகுதிகளில் 40 தொகுதிகளில் அதிமுக கூட்டணி தோல்வி கண்டுள்ளது
  • தெற்கு மண்டலத்தைச் சேர்ந்த மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளில் 18 தொகுதிகளில் மட்டுமே அதிமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

 கொங்கு மண்டலம் மட்டும் போதுமா?

அதிமுக ஏற்கனவே வலுவான வாக்கு வங்கியை கொண்டிருப்பதோடு, பாஜக மற்றும் பாமகவின் கணிசமான வாக்கு வங்கி மூலம், கொங்கு மண்டலத்தில் மட்டுமே அந்த கூட்டணி ஓரளவிற்கு ஆதிக்கம் செலுத்தியுள்ளது. அந்த மாவட்டங்களில் உள்ள 38 தொகுதிகளில் 26 தொகுதிகளில் வெற்றி ஈட்டியுள்ளது. அதிலும் கோயம்புத்தூர் (10) மற்றும் சேலம் (11-ல் 10 தொகுதிகள்) மாவட்டங்களில் மட்டும் 20 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

கொங்கு மண்டலத்தில் மட்டும் ஆதிக்கம் செலுத்துவது எப்படி?

கொங்கு மண்டலத்தில் அதிமுக ஆதிக்கம் செலுத்த பல்வேறு காரணங்கள் அடுக்கப்படுகின்றன.

  • கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்கள் பெருவாரியாக உள்ள கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூக மக்கள் பாரம்பரியமாக அதிமுகவிற்கு ஆதரவு அளித்து வருகின்றனர்
  • கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த எடப்பாடியே கட்சியின் தலைமையாக உருவெடுத்து, ஆட்சி அதிகாரத்திலும் இருந்ததால் அதிமுக அந்த பகுதியில் மேலும் வலுவடைந்தது
  • நீர்நிலைகளை சீரமைக்கும் குடிமராமத்து போன்ற பணிகளுக்கு அதிமுக அதிக முக்கியத்துவம் கொடுப்பதால், விவசாயிகள் நிறைந்த கொங்கு பகுதி அதிமுகவிற்கு ஆதரவாக விளங்குகிறது
  • மாநிலத்தின் பிற மாவட்டங்களில் வலுவான இரண்டாம் கட்ட தலைவர்களை உருவாக்கியதை போன்று, கொங்கு மாவட்டங்களில் உருவாக்க முடியாமல் திமுக தடுமாறி வருவதும் அதிமுகவிற்கு பலமாக பார்க்கப்படுகிறது

திமுக சாதித்தது/சாதிப்பது எப்படி?

  • வலுவான கூட்டணி திமுகவின் மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது
  • கூட்டணி மூலம் கிடைக்கும் என கணிக்கப்பட்ட வாக்கு சதவிகிதமானது அதிமுகவை காட்டிலும், திமுகவிற்கு சிந்தாமல், சிதறாமல் கிடைத்துள்ளது
  • விடுதலை சிறுத்தை கட்சிகளின் பங்களிப்பு வடமாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் உள்ள தலித் சமூக வாக்குகளை வலுவாக அறுவடை செய்து தருகிறது. இதன் மூலம் அதிமுகவிற்கு செல்லும் வன்னியர் ஓட்டுகள் ஈடு செய்யப்படுகின்றன
  • அதிமுகவை போல இல்லாமல் நகர்ப்புற மேம்பாட்டில் திமுக அதிக கவனம் செலுத்துவது, பெரும்பாலும் நகரமயமாதலை சார்ந்துள்ள வடமாவட்டங்களில் திமுகவிற்கு வலுவான வாக்கு வங்கியை உருவாக்கி கொடுத்துள்ளது
  • அதிமுகவை போன்று பெரிய அளவிலான உட்கட்சி மோதல் இல்லாமல் இருப்பது திமுக மீதான நம்பிக்கையை மக்களிடையே அதிகரித்துள்ளது
  • பாஜகவிற்கு எதிரான மனநிலை கொண்ட சிறுபான்மையின மக்களின் வாக்குகள் பக்கபலமாக உள்ளது
  • தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தி திணிப்புக்கு எதிரான கொள்கை அரைநூற்றாண்டை கடந்தும் திமுகவை முதன்மையான சக்தியாக நிலைநிறுத்துகிறது

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Embed widget