மேலும் அறிய

பெரம்பூர் பிரச்சாரத்தில் விஜயை விமர்சித்த சத்யராஜ்...விஜய்க்கு ஆதரவாக சிபிராஜ் ட்வீட்

தவெக தலைவர் விஜயை விமர்சித்து நடிகர் சத்யராஜ் பேசியுள்ள நிலையில் அவரது மகன் சிபிராஜ் விஜய்க்கு ஆதரவாக எக்ஸ் பக்கத்தில் ட்வீட் பதிவிட்டுள்ளார்

பெரம்பூரில் திமுக வேட்பாளரை ஆதரித்து  நடிகர் சத்யராஜ் பிரச்சாரம் செய்தபோது தவெக தலைவர் விஜயை விமர்சித்து பேசியுள்ளார். முதலமைச்சர் முக ஸ்டாலினை ஸ்டாலினை விஜய்  அவமரியாதையாக பேசியதை சுட்டிக்காட்டிய சத்யராஜ் இதுவே ஜெயலலிதா என்றால் விஜயை கொத்து ப்ரோட்டா போட்டிருப்பார் என்று கூறினார். சத்யராஜ் விஜயை விமர்சித்து பேசியுள்ள நிலையில் அவரது  மகனான சிபிராஜ் விஜய்க்கு ஆதரவாக தனது எக்ஸ் பக்கத்தில் ட்வீல் பதிவிட்டுள்ளார். 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குபதிவுக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் திரைப்பட நடிகர்கள் பலர் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சார களத்தில் இறங்கியுள்ளார்கள். சமீபத்தில் திண்டுகல்லில் பிரச்சாரம் செய்த நடிகர் பிரகாஷ் ராஜ் விஜயை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். அவரைத் தொடர்ந்து இன்று நடிகர் சத்யராஜ் விஜயை கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

அம்மாவிடம் பம்மிய விஜய் ஸ்டாலினிடம் சீறுகிறார்

திமுக வேட்பாளர் ஆர் டி சேகரை ஆதரித்து சத்யராஜ் பிரச்சாரம் செய்தார். அப்போது விஜய் குறித்து பேசிய சத்யராஜ் " விஜய் , அம்பேத்கர் , பெரியாரை தனது கொள்கை தலைவராக அறிவித்தபோது சந்தோசமாக இருந்தது. ஆனால் அடுத்தடுத்து அவர் முதலமைச்சரை மரியாதை இல்லாமல் பேசினார். முதலில் ஸ்டாலின் சார் என்றார் . பின்னர் ஸ்டாலின் அங்கிள் என்று பேசினார். எல்லோரையும் மரியாதையாக பேசும் விஜயா இப்படி பேசுவது என அதிர்ச்சியாக இருந்தது. நாம் பார்த்த விஜய் இது இல்லை. விஜயின் தலைவா பட வெளியாகாத போது கொடநாட்டிற்கு சென்று ஜெயலலிதாவிடம் 'அம்மா அம்மா என்னை மனிச்சிடுங்க. என்னுடைய தலைவா படத்தை ரிலீஸ் பண்ணுங்க ' என்று பேசினார். அப்படி பேசுவார் என்று பார்த்தால் ஸ்டாலின் அங்கிள் என்று பேசிவிட்டார். இதுவே ஜெயலலிதாவை இப்படி பேசியிருந்தால் அவர் கொத்து ப்ரோட்டா போட்டிருப்பார். ஒரு முதலமைச்சர் பெருந்தன்மையாக இருக்கிறார் என்பதற்காக என்ன வேண்டுமானால் பேசுவதா ? சின்ன சம்பளம் வாங்கும் என்னையே மக்கள் வந்து பார்க்க முடிவதில்லை. பெரிய சம்பளம் வாங்கும் விஜயை மக்கள் எங்கே போய் சந்திப்பது. " என சத்யராஜ் பேசியுள்ளார்

சிபிராஜ் ட்வீட் 

 ஒருபக்கம் நடிகர் சத்யராஜ் விஜயை  விமர்சித்து பேசியுள்ள நிலையில் அவரது மகன் சிபிராஜ் விஜய்க்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் சிபிராஜ் ' உசுப்பேத்துறவன உம்முனும் கடுப்பேத்துறவன் கிட்ட கம்முனும் இருந்தா வாழ்க்க ஜம்முனு இருக்கும் " என்கிற விஜய் பேசிய வசனத்தை பதிவிட்டுள்ளார். 

Advertisement

தலைப்பு செய்திகள்

DMK Minister: அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
S Janaki Funeral: பாடகி எஸ். ஜானகியின் இறுதி சடங்குகள் - எங்கு? எப்போது? அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் என அறிவிப்பு
பாடகி எஸ். ஜானகியின் இறுதி சடங்குகள் - எங்கு? எப்போது? அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் என அறிவிப்பு
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை, வெயில் பொளக்கும்? - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை, வெயில் பொளக்கும்? - தமிழக வானிலை அறிக்கை
TVK Vijay: அடக்கி வாசித்தால் திமுகவுக்கு நல்லது.. எச்சரிக்கை விடுத்த தவெக ஐடி விங்.. நடந்தது என்ன?
TVK Vijay: அடக்கி வாசித்தால் திமுகவுக்கு நல்லது.. எச்சரிக்கை விடுத்த தவெக ஐடி விங்.. நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

TVK on Senthil Balaji : ”MR. மெகா க்ளீன்! ஓடி ஒளிஞ்சா எப்படி?” செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
Tamilnadu Byelection : ”இடைத்தேர்தல் நடத்த கூடாது” செக் வைத்த நீதிமன்றம்! 5 தொகுதிகள் நிலைமை என்ன?
Senthil balaji on Vijay : ”ஓடு... ஓடு... ஓடு! காப்பாத்துனது யாரு விஜய்” கோபமான செந்தில் பாலாஜி
DMK vs BJP : “யாரு பெருசுன்னு அடிச்சுக்காட்டு
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Minister: அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
S Janaki Funeral: பாடகி எஸ். ஜானகியின் இறுதி சடங்குகள் - எங்கு? எப்போது? அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் என அறிவிப்பு
பாடகி எஸ். ஜானகியின் இறுதி சடங்குகள் - எங்கு? எப்போது? அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் என அறிவிப்பு
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை, வெயில் பொளக்கும்? - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை, வெயில் பொளக்கும்? - தமிழக வானிலை அறிக்கை
TVK Vijay: அடக்கி வாசித்தால் திமுகவுக்கு நல்லது.. எச்சரிக்கை விடுத்த தவெக ஐடி விங்.. நடந்தது என்ன?
TVK Vijay: அடக்கி வாசித்தால் திமுகவுக்கு நல்லது.. எச்சரிக்கை விடுத்த தவெக ஐடி விங்.. நடந்தது என்ன?
Tata Tiago: பட்ஜெட்டில் பாதுகாப்பான EV கார் - 285KM ரேஞ்ச், 4 ஸ்டார் ரேட்டிங் - ரூ.4500 போதும், EMI விவரங்கள்
பட்ஜெட்டில் பாதுகாப்பான EV கார் - 285KM ரேஞ்ச், 4 ஸ்டார் ரேட்டிங் - ரூ.4500 போதும், EMI விவரங்கள்
அசைவ பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி.. ஒரு வாரம் சிக்கன் விற்பனை நிறுத்தம்.. எப்போ தெரியுமா?
அசைவ பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி.. ஒரு வாரம் சிக்கன் விற்பனை நிறுத்தம்.. எப்போ தெரியுமா?
DMK vs CM Vijay : வெறும் வாயில் வடை சுடாதீங்க, ரீல்ஸ் மூலம் ஆய்வு செய்யாதீங்க - விஜய் அரசை வெளுத்தெடுத்த திமுக
வெறும் வாயில் வடை சுடாதீங்க, ரீல்ஸ் மூலம் ஆய்வு செய்யாதீங்க - விஜய் அரசை வெளுத்தெடுத்த திமுக
Rasi Palan Today (12-07-2026): ஞாயிற்றுக்கிழமை எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்?.. 12 ராசிக்குமான பலன்கள் இதோ!
Rasi Palan Today (12-07-2026): ஞாயிற்றுக்கிழமை எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்?.. 12 ராசிக்குமான பலன்கள் இதோ!
Embed widget