மேலும் அறிய

North TN Exit Poll Results 2021: வட தமிழ்நாட்டில் வாகை சூடுவது யார்?

North TN Exit Poll Results 2021 : 22 தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக, இம்முறை 8 முதல் 10 இடங்களில் மட்டுமே வெற்றி பெறுகிறது. அதே போல 25 இடங்களில் வெற்றி பெற்ற திமுக, 2021 தேர்தலில் 36 முதல் 38 தொகுதிகளில் வெற்றி பெறுகிறது

கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் வட தமிழக மண்டலத்தில் அதிமுகவை விட திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. இம்முறை அதன் எண்ணிக்கையை திமுக அதிகரித்திருப்பதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. 22 தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக, இம்முறை 8 முதல் 10 இடங்களில் மட்டுமே வெற்றி பெறுகிறது. அதே போல 25 இடங்களில் வெற்றி பெற்ற திமுக, 2021 தேர்தலில் 36 முதல் 38 தொகுதிகளில் வெற்றி பெறுகிறது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் பெற்ற தொகுதிகளின் ஒப்பீடு படி அதிமுக 13 இடங்களை இழக்கிறது. அதே நேரத்தில் திமுக 12  இடங்களை கூடுதலாக பெறுகிறது. 2016ல் இங்கு 40.2 சதவீதம் வாக்குகளை பெற்ற அதிமுக இம்முறை 31.5 சதவீதம் வாக்குகளை மட்டுமே பெறுகிறது. அதே நேரத்தில் 39.2 சதவீதம் வாக்குகளை மட்டும் கடந்த முறை பெற்றிருந்த திமுக, 51.6 சதவீதம் வாக்குகளை பெறுகிறது. இது அக்கட்சி ஆட்சி அமைப்பதற்கு பெரிய அளவில் உதவுகிறது. அமமுக 2.7 சதவீதம் வாக்குகளை இங்கு பெறுகிறது. இங்கு பிற கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் குறைகிறது.  14.2 சதவீதம் வாக்குகள் மட்டுமே பிற கட்சிகள் பிரிக்கிறார்கள். 

அரசியல் களம்: 

தென் மாவட்டங்களில் தேவர் சமூகமும், கொங்கு பெல்டில் கவுண்டர் சமூகமும் 2016 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கட்சிக்கு மீண்டும் ஆட்சியை தக்க வைப்பதற்கு மிகப்பெரிய காரணிகளாக இருந்தன. அதிமுக அமைச்சரவையில் 9 அமைச்சர்கள் (20 எம்எல்ஏ -க்களில்) தேவர் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, சசிகலா, டிடிவி தினகரன் இருவரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஒ. பன்னீர் செல்வம் நியமிக்கப்பட்டாலும், அதிமுகவின் மைய அதிகாரமாக எடப்பாடி பழனிச்சாமி, எஸ்.பி வேலுமணி , தங்கமணி உருவாக ஆரம்பித்தனர்.      

இந்த சூல்நிலையில் தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிமுக அடுத்தக் கட்ட அரசசியலை முன்னெடுத்தார். 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு கொங்கு பெல்ட் மற்றும் வன்னியர்கள் அதிகமாக வாழும்  வட தமிழகத்தை குறி வைத்தார். அதன் அடிப்படையில், வட தமிழகத்தில் குறிப்பாக கவுண்டர்கள், வன்னியர்கள் அதிகமாக வாழும் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன.

மேலும், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் வன்னியர் சமூகத்தினருக்கு 10 புள்ளி ஐந்து சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட மசோதாவை தமிழக அரசு தேர்தல்  தேதி அறிவிப்பு வெளியாகும் சில மணி நேரத்துக்கு முன்னதாக வெளியிட்டது.  இதனால், வடதமிழகத்தில் மக்கள் தொகையில் மிகப் பெரும் சமுதாயமாக வாழும் வன்னியர்கள் வாக்கு வங்கியை பெற்று விடலாம் என்று அதிமுக கணித்திருந்தது.  

2016 சட்டமன்றத் தேர்தலில் பாமக போட்டியிட்ட 234 சட்டமன்றத் தொகுதியில் ஒரு தொகுதியையும் கைப்பற்றவில்லை. எவ்வாறாயினும், வட தமிழகத்தில்  அதன் அரசியல் இருத்தல் அதிகமாக  உணரப்பட்டது. திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம் உள்ளிட்ட ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் 50,000 க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றது. மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் 40,000க்கும் அதிகமான வாக்குகளும், 8 சட்டமன்றத் தொகுதிகளில் 30,000க்கும் அதிகமான வாக்குகளை அக்கட்சி பெற்றிருந்தது.   

இருப்பினும், பாட்டாளி மக்கள் கட்சிக்கான அரசியல் ஸ்திரத்தனமை தமிழகத்தில் குறைந்து கொண்டு வருகிறது. 2016 சட்டமன்றத் தேர்தலில் 5 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றாலும், தருமபுரி சட்டமன்றத் தொகுதியில் அதன் முதல்வர் வேட்பாளார் அன்புமணி ராமதாஸ் தோல்வியை  சந்தித்தார். 2019 நாடளுமன்றத் தேர்தலில் 70,753 வாக்கு வித்தியாசத்தில் அன்புமனி  ராமதாஸ் திமுக வேட்பாளர் செந்தில்குமாரிடம தோல்வியை சந்தித்தார்.  

வட தமிழகத்தில், வன்னியர் வாக்கு வங்கியை ஒருங்கிணைக்க ராமதாஸ் எடுத்த அநேக முயற்சிகள் தோல்வியை சந்தித்து வருகின்றன. ராமதாஸ் முன்னெடுத்த அரசியலால், வடதமிழகத்தில்,  வன்னியர் அல்லாதா சமூகங்களும், இஸ்லாமியர்களும், கிறிஸ்துவர்களும் ஒன்றினைந்து திமுகவுக்கு வாக்களிக்கத் தொடங்கியுள்ளனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"2025ல முடியாதுங்க" குடியரசுத் தின அணிவகுப்பில் தமிழக அரசு ஊர்தி ஏன் பங்கேற்காது?
"பிராமணர்களே மற்றவர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தந்தனர்" புகழ்ந்து தள்ளிய தி.மு.க. எம்.எல்.ஏ.
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Yuvanraj Nethrun Daughter Abeneya : அதை சொல்ல நீ யாரு? சாப்பாட்டை விமர்சித்த நெட்டிசனை அலறவிட்ட நடிகர் நேத்ரன் மகள் அபிநயா!
Yuvanraj Nethrun Daughter Abeneya : அதை சொல்ல நீ யாரு? சாப்பாட்டை விமர்சித்த நெட்டிசனை அலறவிட்ட நடிகர் நேத்ரன் மகள் அபிநயா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"2025ல முடியாதுங்க" குடியரசுத் தின அணிவகுப்பில் தமிழக அரசு ஊர்தி ஏன் பங்கேற்காது?
"பிராமணர்களே மற்றவர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தந்தனர்" புகழ்ந்து தள்ளிய தி.மு.க. எம்.எல்.ஏ.
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Yuvanraj Nethrun Daughter Abeneya : அதை சொல்ல நீ யாரு? சாப்பாட்டை விமர்சித்த நெட்டிசனை அலறவிட்ட நடிகர் நேத்ரன் மகள் அபிநயா!
Yuvanraj Nethrun Daughter Abeneya : அதை சொல்ல நீ யாரு? சாப்பாட்டை விமர்சித்த நெட்டிசனை அலறவிட்ட நடிகர் நேத்ரன் மகள் அபிநயா!
Science Facts: பிரம்மிப்பூட்டும் அறிவியல் உண்மைகள் - மூளையை உண்ணும் மூளை, இயர் பாட் ஆப்பு, பார் கோட்..!
Science Facts: பிரம்மிப்பூட்டும் அறிவியல் உண்மைகள் - மூளையை உண்ணும் மூளை, இயர் பாட் ஆப்பு, பார் கோட்..!
Breaking News LIVE: தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பா? விஜய்யை மறைமுகமாக சாடிய திருமாவளவன்
Breaking News LIVE: தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பா? விஜய்யை மறைமுகமாக சாடிய திருமாவளவன்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Embed widget