மேலும் அறிய

Kerala Election: கேரள அரசியலுக்கு வந்த சோதனை.. இந்த முறை வெற்றி கஷ்டம் தான்!

கேரளாவைப் பொறுத்தவரை கம்யூனிஸ்ட், காங்கிரஸ், பாஜக இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் அனைத்து தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த நிலையில் பெயர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கேரள சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்கு சில தொகுதிகளில் வேட்பாளர்கள் இடையே பெயர் குழப்பம் ஏற்பட்டுள்ளது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. 

பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே கேரள சட்டமன்ற தேர்தல் வரும் 2026 ஏப்ரல் 9ம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு கடந்த மார்ச் 16ம் தேதி முதல் மார்ச் 23ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. வேட்புமனு மீதான பரிசீலனை இன்று (மார்ச் 24) நடைபெற்றது. தொடர்ந்து வேட்புமனுவை திரும்பப்பெற மார்ச் 26ம் தேதி கடைசி நாளாகும். தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்படுகிறது. கேரள சட்டமன்றம் 140 தொகுதிகளைக் கொண்டதாகும். 

இப்படியான நிலையில் கேரளத்தைப் பொறுத்தவரை கம்யூனிஸ்ட், காங்கிரஸ், பாஜக இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் அனைத்து தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த நிலையில் கேரளாவில் சில தொகுதிகளில் ஒரே பெயரை கொண்ட பலர் வேட்புமனு தாக்கல் செய்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. இதனால் வாக்குப்பதிவின்போது குழப்பம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முதலமைச்சர் பினராயி விஜயனும் சிக்கிக் கொண்டிருக்கிறார். 

பினராயி விஜயன் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தர்மடம் தொகுதியில் களமிறங்குகிறார். அங்கு விஜயன் ஏ.எம். என்ற சுயேச்சை வேட்பாளரும் வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார். அதேபோல் ஆலப்புழாவில் அம்பலப்புழா தொகுதி உள்ளது. இங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியைச் சேர்ந்த ஜி. சுதாகரனை எதிர்த்து அதே பெயரைக் கொண்ட வேட்பாளர் போட்டியிட களமிறங்கியுள்ளார். அதேபோல் ஹரிப்பாடு தொகுதியில் மூத்த காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா  ரமேஷ் சி என்ற சுயேச்சை வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிடுகிறார். 

அதேசமயம் திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் பி.வி. அன்வர் கோழிக்கோட்டில் உள்ள பேப்பூர் தொகுதியில் தன் பெயரைக் கொண்ட நான்கு வேட்பாளர்களை எதிர்கொள்ளவுள்ளார். சுற்றுலாத்துறை அமைச்சர் பி.ஏ.முஹம்மது ரியாஸும் அதே தொகுதியில் முகமது ரியாஸ் டிடி மற்றும் முஹம்மது ரியாஸ் பிசி என்ற வேட்பாளர்களை எதிர்கொள்ளவுள்ளனர். 

எர்ணாகுளத்தின் களமசேரி தொகுதி அமைச்சர் பி.ராஜூவை எதிர்த்து இன்னொரு ராஜூவும், திருவாம்பாடியில் முஸ்லிம் லீக் தலைவருக்கு எதிராக சி.கே. காசிம் என்ற நபர் களம் காண்கிறார். காங்கிரஸ் தலைவர் பிரவீன் குமாரை எதிர்த்து கோழிக்கோட்டின் கொயிலாண்டி தொகுதியில் அதே பெயருடைய நபர் களமிறங்கியுள்ளார். அமைச்சர் தொடங்கி கட்சியின் முன்னணி நிர்வாகி போட்டியிடும் தொகுதி வரை இந்த சிக்கல் எழுந்துள்ளது. 

வேட்புமனு பரிசீலனை மற்றும் வேட்புமனு வாபஸ் வாங்கும் நடைமுறைகள் முடிந்தபிறகே இந்த பிரச்னைக்கு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் தேர்தலில் பெரும் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது. 

தலைப்பு செய்திகள்

Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு... 26,921 வாக்காளர்கள், 1,330 பேர் பாதுகாப்பு!
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு... 26,921 வாக்காளர்கள், 1,330 பேர் பாதுகாப்பு!
தேர்தல் பிரச்சாரம் ஓவர்! 6 மணிக்கு பிறகு இந்த விஷயத்தை செய்யக்கூடாது! என்னென்ன கட்டுப்பாடுகள்?
தேர்தல் பிரச்சாரம் ஓவர்! 6 மணிக்கு பிறகு இந்த விஷயத்தை செய்யக்கூடாது! என்னென்ன கட்டுப்பாடுகள்?
மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை மாலை 6 மணிக்கு மேல் இதையெல்லாம் செய்தால் சிறை நிச்சயம் - தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை மாலை 6 மணிக்கு மேல் இதையெல்லாம் செய்தால் சிறை நிச்சயம் - தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Toyota Glanza on EMI: டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
Embed widget