மேலும் அறிய

Urban Local Body Election: மயிலாடுதுறை மாவட்டத்தில் 538 மனுக்கள் ஏற்பு, 20 வேட்புமனுக்கள் நிராகரிப்பு!

மயிலாடுதுறை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 123 வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு போட்டியிட 858 வேட்பாளர்கள் வேட்புமனுக்களில்  20 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 28 ம் தேதி துவங்கி பிப்ரவரி 4 ஆம் தேதி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. அதனைத் தொடர்ந்து வேட்புமனு பரிசீலனை ஆனது, பிப்ரவரி 5ஆம் தேதி காலை தொடங்கி மாலை வரை நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய 2 நகராட்சிகள், குத்தாலம், தரங்கம்பாடி, மணல்மேடு, வைதீஸ்வரன்கோயில் ஆகிய 4 பேரூராட்சிகளில் உள்ள 123 வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு போட்டியிட 858 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். 

Urban Local Body Election: மயிலாடுதுறை மாவட்டத்தில் 538 மனுக்கள் ஏற்பு, 20 வேட்புமனுக்கள் நிராகரிப்பு!

இந்நிலையில், அம்மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது. மனுக்கள் சரிவர நிரப்பப்படாதது, கையெழுத்து இல்லாதது, சரியான ஆவணங்கள் இல்லாதது, முன்மொழிவாளர் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், வேட்புமனு பரிசீலனையில் 20 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 838 மனுக்கள் ஏற்கப்பட்டன. மயிலாடுதுறை நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் 4 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 286 மனுக்கள் ஏற்கப்பட்டது. சீர்காழி நகராட்சியில் 24 வார்டுகளில் 3 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 147 மனுக்கள் ஏற்கப்பட்டன. குத்தாலம் பேரூராட்சியில் 15 வார்டுகளில் 11 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 118 மனுக்களும் இதேபோன்று மணல்மேடு பேரூராட்சியில் 15 வார்டுகளில் 2 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 101 மனுக்களும் ஏற்கப்பட்டன. 

Urban Local Body Election: மயிலாடுதுறை மாவட்டத்தில் 538 மனுக்கள் ஏற்பு, 20 வேட்புமனுக்கள் நிராகரிப்பு!

தரங்கம்பாடி பேரூராட்சியில் 18 வார்டுகளில் 105 மனுக்களும், வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கு 81 வேட்புமனுக்களும் எவ்வித நிராகரிப்பு இன்றி அனைத்தும் வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. முன்னதாக சீர்காழி நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனு பரிசீலனை போது  நகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களில் 5 வேட்புமனுக்கள் நிராகரிப்பட்டது. அதிமுக, நாம்தமிழர், சுயேச்சை வேட்பாளர்கள் என 5 பேர் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் நாகராஜன் அறிவித்தார்.

Urban Local Body Election: மயிலாடுதுறை மாவட்டத்தில் 538 மனுக்கள் ஏற்பு, 20 வேட்புமனுக்கள் நிராகரிப்பு!

இதனை அடுத்து அதிமுக, சுயச்சை, நாம் தமிழர் கட்சியினர் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த தேர்தல் மேற்பார்வையாளர் விஜயேந்திர பாண்டியன் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனுக்கள் மீது ஆய்வுகளை நடத்தி வேட்பாளரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதனையடுத்து நிராகரிக்கப்பட்ட 21 வது வார்டு அதிமுக வேட்பாளர் புஷ்பா சுயேச்சை வேட்பாளர்கள் சுமையா பர்வீன், அஸ்மா நாச்சியா இவர்களின் மனுக்கள் மறுபரிசீலனை செய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

Urban Local Body Election: மயிலாடுதுறை மாவட்டத்தில் 538 மனுக்கள் ஏற்பு, 20 வேட்புமனுக்கள் நிராகரிப்பு!

22 வது வார்டில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பாலமுருகன் 17 வது வார்டில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த மஞ்சுளா வேட்புமனுக்கள் தவறாக இருந்ததால் நிராகரிக்கப்பட்டது என தேர்தல் மேற்பார்வையாளர் வேட்பாளர்களிடம் தெரிவித்தார். இதனை அடுத்துடுத்து அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் போராட்டத்திலிருந்து கலைந்து சென்றனர். இதனால் சீர்காழி நகராட்சியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து வேட்பு மனு பரிசீலனை நிறைவடைந்த நிலையில் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் களம் இறங்கியுள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pushpa 2 Tragedy: காவு வாங்கிய புஷ்பா! தியேட்டரிலே பறிபோன தாயின் உயிர்! ஐ.சி.யூ.வில் 9 வயது மகன்

Pushpa 2 Review : மிரட்டி அடித்த அல்லு அர்ஜூன்! இன்னொரு தேசிய விருது ரெடி.. புஷ்பா 2 முதல் விமர்சனம் இதோ!

ஓட்டல்கள், பொது நிகழ்ச்சிகளில் இனி மாட்டிறைச்சிக்கு தடை - அரசு உத்தரவால் அதிர்ச்சி! 

Breaking News LIVE 5th Dec 2024: தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்

ABP Premium

வீடியோ

Govt Teacher Sexual Assault : மாணவிகளிடம் அத்துமீறிய அரசு பள்ளி ஆசிரியர்! செருப்பால் அடித்த பெற்றோர்கள்Aadhav Arjuna: ”ஒன்றிய அரசையே சொல்லாதீங்க!” திமுக-வை விளாசும் ஆதவ்! விசிகவில் வெடிக்கும் கலகம்Police Angry: ஜெய் பீம் பாணியில் மிரட்டல்! விழுப்புரம் போலீஸ் அடாவடி.. சூடான இளைஞர்கள்!Sukhbir Singh Badal: EX Deputy CM  மீது துப்பாக்கிச்சூடு! பயங்காவாதி தொடர்பா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pushpa 2 Tragedy: காவு வாங்கிய புஷ்பா! தியேட்டரிலே பறிபோன தாயின் உயிர்! ஐ.சி.யூ.வில் 9 வயது மகன்
Pushpa 2 Tragedy: காவு வாங்கிய புஷ்பா! தியேட்டரிலே பறிபோன தாயின் உயிர்! ஐ.சி.யூ.வில் 9 வயது மகன்
Pushpa 2 Review : மிரட்டி அடித்த அல்லு அர்ஜூன்! இன்னொரு தேசிய விருது ரெடி.. புஷ்பா 2 முதல் விமர்சனம் இதோ!
Pushpa 2 Review : மிரட்டி அடித்த அல்லு அர்ஜூன்! இன்னொரு தேசிய விருது ரெடி.. புஷ்பா 2 முதல் விமர்சனம் இதோ!
ஓட்டல்கள், பொது நிகழ்ச்சிகளில் இனி மாட்டிறைச்சிக்கு தடை - அரசு உத்தரவால் அதிர்ச்சி! 
ஓட்டல்கள், பொது நிகழ்ச்சிகளில் இனி மாட்டிறைச்சிக்கு தடை - அரசு உத்தரவால் அதிர்ச்சி! 
Breaking News LIVE 5th Dec 2024: தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
Breaking News LIVE 5th Dec 2024: தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
'திருட்டு கேஸ்ல உள்ளே தள்ளிடுவேன்' பள்ளி மாணவியை தற்கொலைக்கு தூண்டிய எஸ்.ஐ? பெற்றோர்கள் கண்ணீர்

Rasipalan December 05: கடகத்திற்கு பாசமழை; சிம்மத்திற்கு நட்பு - அப்போ உங்க ராசிக்கு?

உஷார்! செல்லூர் ராஜூவின் உதவியாளர்? அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.26 லட்சம் மோசடி?

WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்

Embed widget