மேலும் அறிய

தேர்தல் கமிஷன் இன்று மத்திய அரசின் எடுபிடி கமிஷனாக மாறிவிட்டது - வைகோ பகீர் குற்றச்சாட்டு..!

சீர்காழியில் ம.தி.மு.க வேட்பாளர் செந்தில் செல்வனை ஆதரித்து வைகோ தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட வைகோ எடப்பாடி பழனிச்சாமி மற்றும் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து பேசினார்.

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் ம.தி.மு.க வேட்பாளர் இரா. செந்தில் செல்வனை ஆதரித்து, சீர்காழி புதிய பேருந்து நிலையப் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு உரையாற்எழுச்சிறினார். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அவர் ஆற்றிய உரை தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக முதல்வரின் சாதனைத் திட்டங்கள்: ஒரு முன்னோட்டம்

கூட்டத்தில் உரையாற்றிய வைகோ, தமிழக அரசின் மக்கள் நலத் திட்டங்களை வரிசைப்படுத்திப் பேசினார். "இந்தியாவிற்கே வழிகாட்டும் வகையில் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தைத் தொடங்கி வைத்தவர் நமது முதல்வர். இன்று பிற மாநிலங்களும் இதனைப் பின்பற்றத் தொடங்கியுள்ளன. புதுமைப் பெண் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், விவசாயத்திற்கெனத் தனி பட்ஜெட், கலைஞர் கனவு இல்லம் என அடுக்கடுக்கான சாதனைகளைச் செய்துள்ளார்.

குறிப்பாக, 2 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கியதுடன், மகளிர் உரிமைத் தொகை மற்றும் கோடைக்கால சிறப்பு நிதி எனத் தாய்மார்களின் கைகளில் பணப்புழக்கத்தை அதிகரித்துள்ளார். அரசு ஊழியர்களின் நீண்டகாலக் கோரிக்கையான ஓய்வூதியத் திட்டத்திலும் உறுதியான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்," என்றார்.

தாய்மார்களுக்கு ரூ.8,000 கூப்பன்: வைகோவின் அதிரடி அறிவிப்பு

மேலும் தொடர்ந்து பேசிய வைகோ, "யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு மகத்தான அறிவிப்பை முதல்வர் வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் தாய்மார்களின் பெயரில் ரூ. 8,000 மதிப்பிலான கூப்பன் வழங்கப்படும். அந்தக் கூப்பனைக் கொண்டு வீட்டிற்குத் தேவையான எந்தப் பொருளையும் வாங்கிக் கொள்ளலாம். இத்தகைய திட்டத்தை வேறு எந்த மாநிலமாவது வழங்கியிருக்கிறதா? இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை," என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

மத்திய அரசையும், தேர்தல் ஆணையத்தையும் சாடிய வைகோ

மத்திய அரசின் பாரபட்சமான போக்கை வன்மையாகக் கண்டித்த வைகோ, "மற்ற மாநிலங்களுக்கு அள்ளி அள்ளி வழங்கும் நரேந்திர மோடி அரசு, தி.மு.க ஆட்சி செய்யும் தமிழகத்திற்கு மட்டும் ஓரவஞ்சகத்தோடு எதையும் தருவதில்லை. நிதி வழங்காமல் அணை போட்டுத் தடுக்கும் மோடிக்கு ஒன்றைச் சொல்கிறேன்; உங்கள் உதவியை எதிர்பார்க்காமல் இத்தனை திட்டங்களை முதல்வர் நிறைவேற்றிக் காட்டியுள்ளார்," என்றார்.

மேலும், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்துச் சாடிய அவர், "தேர்தல் கமிஷன் இன்று மத்திய அரசின் எடுபிடி கமிஷனாக மாறிவிட்டது. அதனால்தான் தலைமைச் செயலாளர் திடீரென மாற்றப்படுகிறார். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஏஜென்டாக இருந்த சாய்குமாரைத் தலைமைச் செயலாளராகப் போட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இதற்கு அவர்கள் வெட்கப்பட வேண்டும்," என ஆவேசமாகப் பேசினார்.

ஸ்டெர்லைட் படுகொலையும், சட்டம் ஒழுங்கு விமர்சனமும்

தனது போராட்ட வரலாற்றை நினைவுகூர்ந்த வைகோ, "நான் தெற்குச் சீமையைச் சேர்ந்தவன். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் பல போராட்டங்களை முன்னெடுத்தவன். டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றத் தொடர்ந்து குரல் கொடுத்தவன். ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்களே, அந்தப் படுகொலைக்குக் அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான் காரணம்.

அப்படிப்பட்ட கொடுமைகளைச் செய்துவிட்டு, இன்று சட்டம் ஒழுங்கு பற்றிப் பேச அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? அ.தி.மு.க ஆட்சியில் வேடம்நத்தத்தில் 11-ஆம் வகுப்பு மாணவி பாலியல் கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் கைது செய்யப்பட்டவரை எப்படி ஜாமீனில் விட்டார்கள்?" என்று கேள்வி எழுப்பினார்.

பாலியல் குற்றவாளிகளுக்குக் கடுமையான சட்டம்

"பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்க முடியாத வகையில் மிகக் கடுமையான சட்டத்தைத் தமிழக அரசு கொண்டு வர வேண்டும் என்று நான் உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன். தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்கவும், இந்தச் செந்தமிழ்நாட்டைப் பேணவும் தான் நான் இன்றும் போராடிக் கொண்டிருக்கிறேன்," என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

"செந்தில் செல்வனை வெற்றி பெறச் செய்யுங்கள்"

இறுதியாக, வேட்பாளர் குறித்துப் பேசிய வைகோ, "தமிழக முதல்வர் மீண்டும் முதல்வராவதை யாராலும் தடுக்க முடியாது. சீர்காழி தொகுதியில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து, பல்லாயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் இரா.செந்தில் செல்வனை வெற்றி பெறச் செய்யுங்கள். ஒரு சட்டமன்ற உறுப்பினர் எப்படித் தொகுதி மக்களுக்காக உழைக்க வேண்டுமோ, அப்படிச் செந்தில் செல்வன் சிறப்பாகச் செயல்படுவார் என நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன்," என உரையை நிறைவு செய்தார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
மஹிந்திரா எஸ்யுவிகளுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் சலுகை- எந்தெந்த காருக்கு எவ்வளவு?
மஹிந்திரா எஸ்யுவிகளுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் சலுகை- எந்தெந்த காருக்கு எவ்வளவு?
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
Maruti SUV: ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
Embed widget