மேலும் அறிய

PM Modi: தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி கர்வத்தை பா.ஜ.க. அழிக்கும் - பிரதமர் மோடி காரசார பேச்சு

PM Modi: தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியின் வெற்றி தலைக்கணத்தை பா.ஜ.க. அழிக்கும் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.

மக்களவைத் தேர்தல் நெருங்கும் வேளையில் பா.ஜ.க.வினர் இந்தியா முழுவதும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், இன்று கன்னியாகுமரி, அகத்தீஸ்வரத்தில் நடைபெறும் பா.ஜ.க. கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார்.

இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது, எனது அன்பார்ந்த தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு வணக்கம். நாட்டின் தென் கோடியில் இருந்து கன்னியாகுமரியில் இருந்து ஒரு அலை புறப்பட்டுள்ளது. இந்த அலை நீண்ட தூரம் பயணிக்கப்போகிறது. 1991ம் ஆண்டு இதே கன்னியாகுமரியில் இருந்து கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு காஷ்மீர் நோக்கி சென்றேன்.

இந்த முறை கன்னியாகுமரியில் இருந்து புறப்படுகிறேன், நாட்டை துண்டாட நினைத்தவர்களை காஷ்மீர் மக்கள் தூக்கி எறிந்துவிட்டார்கள். நமது தமிழக மக்களும் இப்போது அதைத்தான் செய்யப்போகிறார்கள். தி.மு.க. – காங்கிரஸ் இந்தியா கூட்டணி துடைத்து எறியப்படும். காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணிக்கு வெற்றி என்ற தலைக்கணம் இருக்கிறது. அது முற்றிலும் அழிக்கப்படும். தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சியை அகற்றி பா.ஜ.க. ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்பதே எனது விருப்பம்.

தி.மு.க. – காங்கிரஸ் இந்தியா கூட்டணியால் தமிழ்நாட்டில் எந்த வளர்ச்சி திட்டங்களையும் முன்னெடுக்க முடியாது. அவர்களது வரலாற்றை எடுத்துப்பார்த்தால் வெறும் மோசடியும், ஊழலும்தான் முதன்மையாக இருக்கும். அவர்களது கொள்கையை பார்த்தால் அரசியலில் ஆட்சிக்கு வந்து கொள்ளையடிக்க வேண்டும் என்ற ஒற்றை இலக்குதான் அவர்கள் முதல் இலக்கு.

ஒருபுறம் பா.ஜ.க.வின் பல மக்கள் நலத்திட்டங்கள். அந்த பக்கம் தி.மு.க. – காங்கிரஸ் இந்தியா கூட்டணியில் கோடிக்கணக்கான ஊழல்கள். ஆர்டிக்கல் பைபர், 5ஜி, டிஜிட்டல் இந்தியா இது எல்லாம் பா.ஜ.க. மக்களுக்கு தருகிறது. ஆனால், இந்தியா கூட்டணியில் லட்சக்கணக்கான கோடியில் நடந்த ஊழல் உள்ளது. 2ஜி ஊழல் உள்ளது.

இந்த 2ஜி கொள்ளையில் பெரும் பங்கு வகித்தது தி.மு.க. பா.ஜ.க. ஏராளமான விமான நிலையங்களை கட்டியது. பா.ஜ.க. உதான் திட்டங்களை செயல்படுத்தியது. காங்கிரஸ் பெயரில் நாட்டின் பாதுகாப்பு பெயரில் விளையாடும் ஹெலிகாப்டர் ஊழல் உள்ளது. கேலோ இந்தியா மூலம் விளையாட்டுத்துறையை மிக உன்னதமான இடத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். அவர்கள் பெயரில் காமன்வெல்த் விளையாட்டு ஊழல்தான் உள்ளது. கனிமத்துறையில் பல சீர்த்திருத்தங்களை கொண்டு இந்தியா வளத்தை நாம் மேம்படுத்தினால், அவர்கள் பெயரில் கனிம வளத்தை கொள்ளையடித்த நிலக்கரி ஊழல்தான் உள்ளது. இந்த பட்டியலை சொன்னால் சொல்லிக்கொண்டே போகலாம். இதுதான் இந்தியா கூட்டணி நிலைமை.

இவ்வாறு அவர் பேசினார்.

தலைப்பு செய்திகள்

Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை காரணமாக நாளை (18.10.202) மதுரை மல்லிகைப் பூ விலை எகிறுமா?
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை காரணமாக நாளை (18.10.202) மதுரை மல்லிகைப் பூ விலை எகிறுமா?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Deva: யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Embed widget