மேலும் அறிய

நான் கூட்டணி வைக்காததால் கேட்ட சின்னம் கிடைக்கவில்லை - கம்பத்தில் சீமான் பேச்சு

தங்க தமிழ்ச்செல்வன் அன்று இரட்டை இலையில் இருந்தார். இன்று எந்த சின்னத்தில் இருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியும். நாளை இதில் இருப்பார் என்பது யாருக்கு தெரியும்.

தேனி பாராளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக மருத்துவர் மதன் ஜெயபாலன் என்பவர் ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கம்பம் வஉசி திடலில் திறந்த வெளி வாகனத்தில் வேன் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சீமான் பேசுகையில், “தேனி மாவட்ட மக்கள் அனைவரும் அறிவு சார்ந்த மக்களாக விளங்குகின்றனர். பகுதி மக்கள் மண்மனம் மாறாமல் வீரத்திலும் தியாகத்திலும் சிறந்து விளங்குபவர்களாக உள்ளனர். ஒரு மனிதனுக்கு வரலாறு என்பது மிக முக்கியமான ஒன்று நாம் வரலாற்றை எப்போதும் மறந்துவிடக்கூடாது. தலைவர் பிரபாகரன் கூறுவது போல் நம்மை பறைசாற்றுவது நம் வரலாறு மட்டுமே.

நான் கூட்டணி வைக்காததால் கேட்ட சின்னம் கிடைக்கவில்லை - கம்பத்தில் சீமான் பேச்சு

அதுபோன்று வீரத்தில் வித்திட்டார் தமிழ்க்குடி மாறாத மறவர்களாக வாழ்ந்தவர்கள் இப்பகுதியில் அதிகம் உள்ளவர்கள். இப்பகுதியில் இருக்கக்கூடிய வேட்பாளர்கள் பற்றி உங்களுக்கு தெரியாதது ஒன்றுமில்லை. அதனை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். இப்பகுதியில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் முன்பு ஒரே கட்சியில் இருந்தவர்கள் தங்க தமிழ்ச்செல்வன், டிடிவி தினகரன், நாராயணசாமி உள்ளிட்ட மூன்று வேட்பாளர்களும் அதிமுகவில் இருந்து தற்போது பிரிந்து வெவ்வேறு கட்சிகளாக இன்று உங்கள் முன்னால் வந்து நின்றுள்ளனர். தங்க தமிழ்ச்செல்வன் எப்போதும் ஒரே கட்சியில் அவர் நிலையாக இருந்தது இல்லை. நேற்று ஒரு கட்சி, இன்று ஒரு கட்சி, நாளை எந்த கட்சி என்று அவரது பணி கேள்விக்குறியாக உள்ளது. மேலும், அவருக்கு பணம் பலம் உள்ளிட்டவை இருந்தால் அந்த பகுதியில் உடனடியாக சாய்ந்து விடுகின்றார்.

நான் கூட்டணி வைக்காததால் கேட்ட சின்னம் கிடைக்கவில்லை - கம்பத்தில் சீமான் பேச்சு

அதேபோன்று டிடிவி தினகரன் அவர்கள் ஒன்றை மறந்து விடக்கூடாது. சின்னம்மா, நீங்கள் உள்ளிட்டோரை சிறைக்குச் செல்ல வைத்தது யார் என்பது உங்களுக்கு தெரியும். அப்படி இருக்கையில் அவர்களுடன் நீங்கள் கூட்டணி வைத்துள்ளீர்கள்” என்று விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “தேர்தல் அறிவித்தவுடன் சின்னங்கள் அறிவிக்கப்படுகிறது. நாங்கள் கேட்டிருந்த எங்களது சின்னம் முதலில் வருபவருக்கு வழங்கப்படும் என்று கூறி வேறு ஒருவருக்கு அந்த சின்னத்தை வழங்கி உள்ளீர்கள். ஆனால் அந்த சின்னத்தில் நிற்பதற்கு வேட்பாளர் கூட யாரும் இல்லை உடனே அந்த சின்னத்தினை அனைத்து சுயேட்சை பட்டியலிலும் சேர்த்து யார் யாரையோ வேட்பாளராக களம் காண வைத்துள்ளீர்கள். அதற்கு நாங்கள் கலங்க மாட்டோம். ஆனால் இரவோடு இரவாக தேர்தல் அறிவித்தவுடன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் கேட்ட குக்கர் சின்னம் உடனடியாக கிடைக்கின்றது. தமிழ் மாநில காங்கிரஸ் கேட்ட சைக்கிள் சின்னம் உடனடியாக கிடைக்கின்றது. அப்போ கூட்டணி வைத்தால் மட்டுமே சின்னங்கள் கிடைக்கும் என்ற நிலை  வருகிறது.

நான் கூட்டணி வைக்காததால் கேட்ட சின்னம் கிடைக்கவில்லை - கம்பத்தில் சீமான் பேச்சு

தேனி மாவட்ட மக்கள் வீட்டுப் பிள்ளைகளையும் தாங்கள் வளர்க்கின்ற மாடுகளையும் ஒன்றாகத்தான் பாவித்து வளர்த்து வருகின்றனர். மனிதனுக்கு எவ்வாறு உணவு உரிமை போன்றவை இல்லை என்றால் செல்லாக்காசாக இருக்கின்றானோ அதேபோன்று மாடுகளும் உள்ளது. மாடுகளுக்கு தேவையான உணவுகளை மலைப்பகுதிக்குள் சென்று மேய்ப்பதற்கு கொண்டு சென்றால் இங்கு அதை தடை விதிக்கின்றனர். பின்னர் எவ்வாறு நாட்டு மாடு, மலை மாடுகளும் வளர்ச்சி பெறும் உயிர் வாழும். இதனை சிந்திக்க வேண்டும். அதிகாரத்தில் உள்ளவர்களிடம் இதுகுறித்து நீங்கள் எத்தனை முறைகள், உங்கள் பிரச்சினையை கொண்டு சென்றாலும் அவர்கள் அதற்கு தீர்வு காண்பது அரிதாக உள்ளது. அதேபோன்று நமது பெண் பிள்ளைகளை வீர தமிழச்சியாக வளர்த்து வருகிறோம். நான் பிறந்த சிவகங்கை மண்ணிலே வீரத்துக்கு வித்திட்ட வேலு நாச்சியார் அவர்கள் பெயரில் பெண்கள் கல்லூரி கட்டி பெண்களுக்கான தனி பெருமை சேர்ப்பேன். மேலும் முல்லைப் பெரியாறு அணை விஷயத்தில் தென் மாவட்ட பகுதி மக்களை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது. எதற்கோ அண்ணாமலை அவர்கள் ஆர்டிஐ போட்டு பதில் வாங்குகிறார். ஏன் இந்த முல்லை பெரியாறு விஷயத்தில் ஆர்டிஐ போட மறுக்கிறார்.

நான் கூட்டணி வைக்காததால் கேட்ட சின்னம் கிடைக்கவில்லை - கம்பத்தில் சீமான் பேச்சு

காரணம் அவ்வாறு செய்தால் கேரளாவில் உள்ள மலையாள பிஜேபியினர் கோபித்துக் கொள்வார்கள் என்பதால். எனவே காங்கிரஸ், பிஜேபி உள்ளிட்ட கட்சிகள் ஆட்சிக்கு வந்தாலும் முல்லைப் பெரியாறு விஷயத்தில் சுணக்கமாகவே செயல்படுகின்றனர். தேர்தல் வந்தவுடன் கச்சத்தீவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் நமது அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு ஞாபகத்தில் வருகிறது உடனடியாக கட்ச தீவை பற்றி இன்று பேசுகின்றனர். நாங்கள் அன்றிலிருந்து கத்திக் கொண்டிருக்கிறோம். கச்சத்தீவிற்கு உறுதியான தீர்வு எட்டும் வரை எங்களது பிரச்சாரம் ஓயாது. கச்சத்தீவு பிரச்சனையை வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதிக்குள் முடிவுக்கு கொண்டு வந்தால் எங்கள் கட்சி சார்பில்  களத்தில் உள்ள எங்களது வேட்பாளர்கள் விலகிக் கொண்டு உங்களுக்கு வாக்களிக்க தயாராக உள்ளனர். தேனி தொகுதி மக்களை வஞ்சிக்கும் வண்ணமாக செல்வம் கொழிக்கும் பீர்மேடு, தேவிகளும் உள்ளிட்ட பகுதிகளை கேரளாவிற்கு தாரை வார்த்து கொடுத்தது மிகப்பெரிய துரோகம் விளைவிக்கக் கூடிய செயலாக விளங்குகிறது.

எனவே, தேனி மக்கள் அனைவரும் சிந்தித்து செயல்பட வேண்டும் தற்போது பாராளுமன்ற தேர்தலில் சுமார் 16 வேட்பாளர்கள் மருத்துவர்களாக உள்ளனர். தேனி பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக மருத்துவர் மதன் ஜெயபாலன் நிறுத்தப்பட்டுள்ளார். மருத்துவர்கள் இந்த தேர்தலில் நிறுத்தம் செய்வதற்கான காரணம் நோய்கள் வந்த பின்பு மருத்துவம் பார்ப்பதற்காக அல்ல நோய்கள் வரவிடாமல் அதனை தடுப்பதற்காக மட்டுமே இந்த தேர்தலில் அதிகம் மருத்துவர்கள் மற்றும் படித்தவர்களாக இந்த தேர்தலில் போட்டியிட வைத்துள்ளோம். எனவே வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் எங்களது கட்சி வேட்பாளருக்கு தங்களது வாக்குகளை வழங்கி வெற்றி பெறச் செய்து உங்களது வாழ்க்கையை வெற்றியுள்ள வாழ்க்கையாக மாற்ற வழிவகை செய்த தாருங்கள். நாம் எல்லாவற்றையும் இழந்து நிற்கிறோம் என்பதற்கு சான்று மலை மாடுகள், காளை மாடுகளை வளர்ப்பதற்கு கூட வழியில்லாமல் நிற்கிறோம். அந்த மலைப்பகுதி யாருக்கு சொந்தம் என்பதை நாம் யோசிக்க வேண்டும். கல்வி மனிதனுக்கு செல்வம் மாடும் ஒரு செல்வம் என புரிந்து கொள்ள வேண்டும் நம் வாழ்வோடு ஒன்றி உள்ள மாலை வளர்க்க விடாமல் தடுக்க வேண்டும் என்பதற்காக மலைப்பகுதிக்குள் நுழைய விட வில்லை அந்த மலை யாருக்கு என்பது நாம் புரிந்து கொள்ள வேண்டும். கவிதைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் எழுதப்படுகிறது ஆனால் வரலாறு ரத்தத்தால் மட்டுமே எழுதப்படும்.

நான் கூட்டணி வைக்காததால் கேட்ட சின்னம் கிடைக்கவில்லை - கம்பத்தில் சீமான் பேச்சு

இங்கு வேட்பாளராக நிற்கின்ற நபர்களைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள்.நான் கட்சி ஆரம்பிக்கும் முன்பு 2008இல் ஒரு இனப்படுகொலை நடக்கும் போது என் தலைவனை சந்தித்து விட்டு திரும்பும் போது நான் அங்கே இருந்து விடுகிறேன் என்று கெஞ்சினேன். ஆனால் நீங்கள் சென்று அங்கு போய் பாருங்கள் என்று அவர் கூறினார். அன்றைக்கு நான் ஒற்றையாலாக நின்று திமுக காங்கிரசை கருவறுப்போம் என்று விளக்கத்தை முன்னெடுத்து ஒருவராகச் சென்று கேட்டுக்கொண்டேன். அந்த ஒற்றை வார்த்தை இங்கே அவர்கள் சொன்னதை நான் வந்தால் ஜெயித்து வந்து வந்தால் நீ தனி ஈழம் அமைப்பே என்ற அவர்கள் பேசினார். அந்த வார்த்தை எங்களை போன்ற பிள்ளைகளுக்கு பேர் ஆர்வத்தையும் பெரும் நம்பிக்கை இருந்தார்கள் . அதை பாராட்டி எங்கள் தலைவர் அரசியல் துறை பிரிவு செயலப் பொறுப்பாளர் எங்கள் அண்ணன் நடேசன் மூலமாக கடிதம் அம்மையாருக்கு எழுதியதே நாம் நிலை மலர்ந்தால் ஈழ மலரும் என்று சொன்னதை எல்லோரும் சொல்லிவிட்டார் என்று நாங்கள் போராடவில்லை.

நான் கூட்டணி வைக்காததால் கேட்ட சின்னம் கிடைக்கவில்லை - கம்பத்தில் சீமான் பேச்சு

தங்க தமிழ்ச்செல்வன் அன்று இரட்டை இலையில் இருந்தார். இன்று எந்த சின்னத்தில் இருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியும். நாளை இதில் இருப்பார் என்பது யாருக்கு தெரியும். பதவி பலம் எங்கு கிடைக்கிறது அங்கு செல்கிறார். இது எப்படி என்பதை நீங்களே புரிந்து கொள்ள வேண்டும். ஸ்டாலின் வாழ்க என்பார்கள் இளைய சூரியன் வாழ்க என்பார்கள் அவர்கள் வாழ்வார்கள் நாங்கள் எங்கு வாழ வேண்டும் என தெரியவில்லை. இவன் கொள்கை வீரனோ எவன் கொள்கைக்காக சண்டைக்கு போனால் சண்டைக்காரன் சுடுவான் என்று தெரிந்தும் வழக்கினை வாங்கி செத்த மானமுள்ள மறவர்கள் கூட்டத்திற்கு உங்கள் ஓட்டு அல்லது பல்வேறு நிறம் மாறி கொண்டு உள்ளவர்களுக்கு உங்கள் ஓட்டு என்பதை நீங்களே சிந்தித்து முடிவு செய்து கொள்ளுங்கள். தேனி மக்கள் மான மரியாதை உள்ளவர்கள்” என்று பேசினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
Embed widget