காமராஜர் ஆதித்தனார் கழகம் பாஜகவிற்கு முழு ஆதரவு - கராத்தே செல்வின் மனைவி
தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக போட்டியிடக் கூடிய அனைத்து வேட்பாளர்களுக்கும் ஆதரவு தெரிவிக்கிறோம்.
தமிழ்நாட்டில் பாஜக சார்பாக போட்டியிடக் கூடிய அனைத்து வேட்பாளர்களுக்கும் நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம் என கராத்தே செல்வின் மனைவியும் காமராஜர் ஆதித்தனார் கழகத்தின் நிறுவனருமான வயோலா செல்வின் தெரிவித்தார்.
காமராஜர் ஆதித்தனார் கழகத்தின் நிறுவனர் வயலோ செல்வின், பாளையங்கோட்டையில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசியபோது, காமராஜர் ஆதித்தனார் கழகம் சார்பில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு முழு ஆதரவு தருகிறோம். என்ன மாறிவிட்டார் என்று நினைக்கக்கூடாது. நமக்கு மாற்றங்கள் வேண்டும், கட்சி வளர வேண்டும் என்ற நோக்கத்தில் தற்போது பாஜகவிற்கு ஆதரவளிக்கிறோம்.
இதுவரை திராவிட கழகங்களுக்கு ஆதரவு அளித்ததில் கொடுத்த வாக்குறுதிகளை பெரும்பாலும் அவர்கள் நிறைவேற்றவில்லை. எங்கள் தெருவிலேயே இரண்டு முறை விதவைகளுக்கு எழுதி கொடுத்தும் பணம் வரவில்லை. வீட்டு வரி கூடிவிட்டது, கரெண்ட் வரி கூடிவிட்டது. திராவிட ஆட்சியில் மதுவை ஒழிப்போம் என தெரிவித்தார்கள். ஆனால் இதுவரை செயல்படுத்தவில்லை. சின்ன பசங்க கூட குடிக்க ஆரம்பித்து விட்டனர். இதற்கு காரணம் திமுக ஆட்சி தான். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி மக்களுக்கான பல்வேறு நன்மைகளை செய்து வருகிறது. ஆனால் சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை பேசும்போது, மது கடைகளை ஒழிப்போம் கள்ளுக்கடைகளை திறப்போம் என்று தெரிவித்தார். கள் குடித்தால் உடலுக்கு நலம். எனவே இது போன்ற வாக்குறுதிகளை தரும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் இளைஞர்கள் பெரும்பாலானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். எனவே இந்த முறை பாரதிய ஜனதா கட்சிக்கு எங்களது காமராஜர் ஆதித்தனார் கழகம் சார்பில் ஆதரவு தெரிவிக்கிறோம். தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக போட்டியிடக் கூடிய அனைத்து வேட்பாளர்களுக்கும் நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம்” என கராத்தே செல்வின் நாடாரின் மனைவியும் காமராஜர் ஆதித்தனார் கழகத்தின் நிறுவனருமான வயோலா செல்வின் தெரிவித்தார்.