மேலும் அறிய

ஜோதிமணிக்கு எதிராக மற்றொரு ஜோதிமணி போட்டி - பரபரக்கும் கரூர் தேர்தல் களம்

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தங்கவேலிடம் இந்தியா கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

கரூரில் வேட்பு மனுதாக்கல் செய்த ஜோதிமணியிடம், அண்ணாமலை குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளிக்காமல், தான் செய்த திட்டங்கள் குறித்து மட்டும் பேசி விட்டு நழுவி சென்றார்.

ஜோதிமணிக்கு எதிராக மற்றொரு ஜோதிமணி போட்டி - பரபரக்கும் கரூர் தேர்தல் களம்

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் பல்வேறு கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாள் என்பதால் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தங்கவேலிடம் இந்தியா கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். மேலும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் முன்பு உறுதிமொழி  வாசித்தார்.

ஜோதிமணிக்கு எதிராக மற்றொரு ஜோதிமணி போட்டி - பரபரக்கும் கரூர் தேர்தல் களம்

ஜோதிமணி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்யும்போது உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் கரூர் பாராளுமன்ற தொகுதி திமுக பொறுப்பாளர் எம்.பி அப்துல்லா உள்ளிட்டோர் உடன் இருந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி கூறுகையில்,”கடந்த தேர்தலின் போது பெற்ற வெற்றியை விட இந்த தேர்தல் மீண்டும் மகத்தான வெற்றி பெறுவோம். 1750 நாட்களில் 972 நாட்கள் கரூர் நாடாளுமன்ற தொகுதியில் களப்பணி ஆற்றியுள்ளேன். 300 நாட்கள் மற்ற பகுதிகளில் வேலை செய்துள்ளேன். மேலும், 300 நாட்கள் நாடாளுமன்றத்தில் கரூர் தொகுதி, தமிழ்நாட்டு மற்றும் இந்தியாவின் பிரச்சனைகள் குறித்து பேசி உள்ளேன் என்றார். பாஜகவின்  பீ-டீமாக கரூரிலும், தமிழகம் முழுவதும் அதிமுக செயல்படுகிறது என இவ்வாறு பேசிய ஜோதிமணி திமுக ஆட்சியில் நிறைவேற்றிய திட்டங்கள் குறித்து பட்டியலிட்டார். மேலும், அண்ணாமலை மற்றும் ராகுல்காந்தி குறித்து செய்தியாளர்கள்  கேள்வி எழுப்பிய பொழுது பதில் அளிக்காமல் நழுவி சென்றார்.

கரூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக மற்றொரு ஜோதிமணி போட்டி - மணப்பாறையை சேர்ந்த செந்தில் மனைவி ஜோதிமணி என்பவர் வேட்பு மனு தாக்கல்.

ஜோதிமணிக்கு எதிராக மற்றொரு ஜோதிமணி போட்டி - பரபரக்கும் கரூர் தேர்தல் களம்

கரூர் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஜோதிமணிக்கு இந்தியா கூட்டணி கட்சி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட கடுமையான போராட்டத்திற்கு பிறகு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கரூரில் இன்று நடைபெற்ற இந்தியா கூட்டணி தேர்தல் பணிமனை துவக்க விழாவில் வேட்பாளர் ஜோதி மணியுடன் அமைச்சர்கள் சக்கரபாணி அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்பி அப்துல்லா கலந்து கொண்டு பணிமனையை துவக்கி வைத்தனர் அதனை தொடர்ந்து கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர்களுடன் சென்று தேர்தல் நடத்தும் அலுவலர் தங்கவேலிடம் ஜோதிமணி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

ஜோதிமணிக்கு எதிராக மற்றொரு ஜோதிமணி போட்டி - பரபரக்கும் கரூர் தேர்தல் களம்

இந்த நிலையில் கரூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மணப்பாறை தாலுக்கா, கருப்பூர் கிராமத்தை சேர்ந்த 37 வயதுடைய "செந்தில் மனைவி ஜோதிமணி" என்பவர் கரூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு எதிராக சுயேட்சை வேட்பாளராக போட்டியிட தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே ராமநாதபுரம் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை எதிர்த்து, நான்கு பேர் அதே பெயரில் போட்டியிடுகின்றனர். தற்போது கரூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணிக்கு எதிராக மற்றொரு ஜோதிமணி போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget