மேலும் அறிய

கோவை தொகுதியில் தேர்தலை ரத்து செய்யக்கோரி பரபரப்பு புகார் ; பின்னணி என்ன?

பெருமளவிலான வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்பட்டிருப்பதால் இந்த நாடாளுமன்ற தேர்தல் நியாயமாக நடக்க வழி இல்லை. இந்த தேர்தல் ஒரு பணநாயக தேர்தலாக மாறிவிட்டது.

மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் ஈஸ்வரன் தலைமையில் அவ்வமைப்பினர், கோவை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்திகுமார் பாடியை சந்தித்து கோவை தொகுதியில் தேர்தலை இரத்து செய்யக் கோரி ஒரு புகார் மனு அளித்தனர். இதேபோல பொள்ளாச்சி தொகுதியிலும் தேர்தலை இரத்து செய்ய வேண்டுமென தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அவ்வமைப்பினர் புகார் மனு அளித்தனர். இந்த புகாரினை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகுவிற்கும் அவ்வமைப்பினர் அனுப்பி வைத்தனர்.

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா

இதுகுறித்து பேசிய அவ்வமைப்பின் தலைவர் ஈஸ்வரன், “நடைபெறுகின்ற நாடாளுமன்றத் தேர்தல் நேர்மையாகவும் ஜனநாயகமாகவும் நடைபெற வேண்டும் எனவும் ஓட்டுக்கு பணம் கொடுப்பது தடுக்கப்பட வேண்டும் எனவும் மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு கோரிக்கை மனு அனுப்பி இருந்தோம். இது மட்டும் இல்லாமல் கோவை நாடாளுமன்ற தொகுதி முழுவதும் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுப்பதற்கான விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டோம். அரசியல் தலைவர்கள் ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று உறுதிமொழி தர வேண்டும் என கோரிக்கை வைத்து, இதற்கான அனுமதியை உயர்நீதிமன்றத்தில் பெற்று உண்ணாவிரதம் நடத்தினோம். எனது மனு மீது நடவடிக்கை எடுத்துக் கொண்டிருப்பதாகவும், பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு, நேர்மையான தேர்தலை நடத்தி விடுவதாகவும், பொள்ளாச்சி, சிவகங்கை, தென்காசி ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் எனக்கு பதில் தெரிவித்திருந்தனர்.

பணநாயக தேர்தல்

தேர்தல் ஆணையம் அமைத்த குழுவினர் அப்பாவி வியாபாரிகள் மற்றும் பொதுமக்களை சோதித்து அவர்களை பெரும் சிரமத்திற்கு உள்ளாக்கினார். ஆனால் ஓரிரு சம்பவங்களை தவிர அரசியல்வாதிகள் இதில் சிக்கவில்லை. தற்போது நேற்று இரவில் இருந்து கோவை மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பெரும்பாலான பகுதிகளில் பண விநியோகம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இத்தனை நாட்கள் தேர்தல் ஆணையம் நடத்திய சோதனைகள் அனைத்தும் கேலிக்கூத்தானது. பெருமளவிலான வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்பட்டிருப்பதால் இந்த நாடாளுமன்ற தேர்தல் நியாயமாக நடக்க வழி இல்லை. இந்த தேர்தல் ஒரு பணநாயக தேர்தலாக மாறிவிட்டது.

தேர்தலை இரத்து செய்ய வேண்டும்

பணம் எங்கெல்லாம் விநியோகிக்கப்பட்டு இருக்கிறது யார் இதை விநியோகம் செய்து இருக்கிறார்கள் என்பதை எளிதாக உளவுத்துறையினர் கண்டுபிடித்து விட முடியும் அவர்கள் மீது நடவடிக்கை உடனடியாக எடுக்கவும் முடியும். தமிழ்நாடு தேர்தல் ஆணையம் உடனடியாக இதனை விசாரித்து பணம் கொடுத்த வேட்பாளர்களை உடனடியாக தகுதி நீக்கம் செய்ய வேண்டும். மேலும் இந்த தேர்தலையே ரத்து செய்ய வேண்டும். ஒருமுறை கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இந்த பணநாயக தேர்தலை எதிர்காலத்தில் தடுத்து நிறுத்த முடியும். அதனால் தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்” எனத் தெரிவித்தார். வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவதற்கு எதிராக தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வரும் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருவதும், இதேபோல பணப்பட்டுவாடா புகார் காரணமாக கோவை மாநகராட்சி தேர்தல் மற்றும் ஈரோடு இடைத்தேர்தலை இரத்து செய்யக்கோரி இவ்வமைப்பினர் புகார் மனு அளித்ததும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
ABP Premium

வீடியோ

டெல்லியில் கடும் மூடுபனி அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் பற்றி எரிந்த பேருந்துகள்4 பேர் உயிரிழப்பு | Delhi Accident
கைதாகிறாரா சீமான்? திமுக நிர்வாகி மீது அட்டாக் பாய்ந்த கொலை மிரட்டல் வழக்கு | Seeman Arrest
நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்
DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026: கான்வே, ரவீந்திராவை கண்டுக்கவே கண்டுக்காத CSK - என்ன காரணம்?
IPL Auction 2026: கான்வே, ரவீந்திராவை கண்டுக்கவே கண்டுக்காத CSK - என்ன காரணம்?
செம்பரம்பாக்கம் ஏரி: வரலாறு காணாத நீர்மட்டம்! 500 கன அடி நீர் திறப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
செம்பரம்பாக்கம் ஏரி: வரலாறு காணாத நீர்மட்டம்! 500 கன அடி நீர் திறப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
IPL Most Expensive Players: டாப் கியருக்கு போன கொல்கத்தா! ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 5 வீரர்கள்
IPL Most Expensive Players: டாப் கியருக்கு போன கொல்கத்தா! ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 5 வீரர்கள்
IPL 2026 Auction: ரூபாய் 25 கோடி கொடுத்து கேமரூன் கிரீனை வாங்கியது கொல்கத்தா... ஜஸ்ட்டில் மிஸ் செய்த சென்னை!
IPL 2026 Auction: ரூபாய் 25 கோடி கொடுத்து கேமரூன் கிரீனை வாங்கியது கொல்கத்தா... ஜஸ்ட்டில் மிஸ் செய்த சென்னை!
Embed widget