மேலும் அறிய

தேர்தல் முடிவுகள் 2024

(Source:  ECI | ABP NEWS)

Thirumavalavan Assets: நிலம், தங்கம், வெள்ளி எதுவுமில்லை; சிதம்பரம் விசிக வேட்பாளர் திருமாவளவன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Thirumavalavan Assets Details: திருமாவளவனின் பெயரில் நிலம், தங்கம், வெள்ளி நகைகள் எதுவும் இல்லை. எனினும் குடியிருப்பு மனை 25 சென்ட் மட்டும் உள்ளது. 

விசிக தலைவரும் சிதம்பரம் தொகுதி மக்களவை வேட்பாளருமான திருமாவளவனுக்கு ஒரு குண்டு மணி தங்கம், வெள்ளி கூட கிடையாது என்றும், அதே நேரம் நான்கு கார்கள், ஒரு டெம்போ டிராவலர் வைத்திருப்பதாகவும் தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு விழுப்புரம், சிதம்பரம் ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமாரும், சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனும் களமிறங்குகின்றனர். 

இந்த நிலையில் திருமாவளவன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் சொத்து விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி அவரிடம் 2 கோடியே 7 லட்சத்து 97 ஆயிரத்து 903 ரூபாய் மதிப்புக்கு அசையும் சொத்துகளும், 28 லட்சத்து 62 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்புக்கு அசையா சொத்துகளும் இருக்கின்றன. அவரின் தாய்க்கு ரூ.7,95,500 அசையா சொத்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு 83 ஆயிரத்து 969 ரூபாய் வாகனக்கடன் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம்?

திருமாவளவனிடம் உள்ள 4 வங்கிக் கணக்குகளில், அண்ணா சாலை இந்தியன் வங்கி கணக்கில் இருப்பு எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு கணக்கில் 3 லட்சத்து 22 ஆயிரத்து 595 ரூபாயும், மற்றொரு கணக்கில் 13 ஆயிரத்து 947 ரூபாயும் உள்ளது. இந்தியன் வங்கி, அரியலூர் கணக்கில் 10 லட்சம் ரூபாய் உள்ளதாகவும், அது தேர்தல் செலவுக்கானது என்றும் பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிலம், தங்கம், வெள்ளி எதுவுமில்லை

திருமாவளவனின் பெயரில் நிலம் எதுவும் இல்லை. எனினும் குடியிருப்பு மனை 25 சென்ட் மட்டும் உள்ளது. 

திருமாவளவனுக்குச் சொந்தமாக ஒரு குண்டுமணி தங்கம், வெள்ளி கூடக் கிடையாது என்று பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனினும் அவருக்கு சொந்தமாக 4 கார்களும், ஒரு டெம்ப்போ ட்ராவலரும் உள்ளன. குறிப்பாக ரூ.11 லட்சம் மதிப்பில் டெம்போ டிராவலர், தலா 15 லட்சம் ரூபாய் மதிப்பில் 2 டாட்டா சஃபாரி கார்கள், ரூ.32 லட்சம் மதிப்பில் ஃபோர்ட் எண்டவர், 13 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பில் ஹூண்டாய் கிரெட்டா கார் ஆகியவை திருமாவளவனுக்குச் சொந்தமாக உள்ளன.

வழக்குகள் எத்தனை?

திருமாவளவன் மீது நிலுவையில் 7 வழக்குகள் உள்ளன. எனினும் எந்த வழக்கிலும் அவர் தண்டிக்கப்படவில்லை.

சிதம்பரத்தில் திருமாவளவனுக்கு எதிராக அதிமுக வேட்பாளர் சந்திரஹாசன், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சி ராணி ஆகியோர் களம் இறங்குகின்றனர்.

இதையும் வாசிக்கலாம்: Su Venkatesan Assets: 10 மடங்கு உயர்ந்த மதிப்பு; மதுரை மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனின் சொத்து எவ்வளவு?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Haryana Result: ஹாட்ரிக் வெற்றியை பதித்த பாஜக.!அதிர்ச்சியில் ராகுல்: காங்கிரஸ் தோல்விக்கு முக்கியமான 2 காரணங்கள் ?
ஹாட்ரிக் வெற்றியை பதித்த பாஜக.!அதிர்ச்சியில் ராகுல்: காங்கிரஸ் தோல்விக்கு முக்கியமான 2 காரணங்கள் ?
savitri jindal: பாஜகவிலிருந்து நீக்கம்: சுயேட்சையாக போட்டியிட்டு வென்ற நாட்டின் பணக்கார பெண்: யார் இவர் ?
பாஜகவிலிருந்து நீக்கம்: சுயேட்சையாக போட்டியிட்டு வென்ற நாட்டின் பணக்கார பெண்: யார் இவர் ?
MACE Telescope: உலகிலேயே மிக உயரமான தொலைநோக்கி: இந்திய அணுசக்தி துறை அசத்தல்: பயன்கள் என்ன தெரியுமா?
உலகிலேயே மிக உயரமான தொலைநோக்கி: இந்திய அணுசக்தி துறை அசத்தல்: பயன்கள் என்ன தெரியுமா?
Admk Human Chain Protest: திமுக அரசு 2026 சட்டமன்ற தேர்தலில் வீட்டிற்கு அனுப்பப்படும் - செம்மலை
திமுக அரசு 2026 சட்டமன்ற தேர்தலில் வீட்டிற்கு அனுப்பப்படும் - செம்மலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jammu & Kashmir Election Results : சொல்லி அடித்த ராகுல்! மண்ணை கவ்விய பாஜக!மோடி சறுக்கியது எப்படி?Thalavai Sundaram Removed From ADMK:  தளவாய் சுந்தரம் நீக்கம்!எடப்பாடி  அதிரடி..பாஜகவுடன் நெருக்கமா?Haryana election result : சொதப்பிய காங்கிரஸ் ப்ளான்! தோல்விக்கான 5 காரணங்கள்! தட்டித் தூக்கிய BJPHaryana election result | மண்ணைக் கவ்விய காங்கிரஸ்!காலரை தூக்கும் பாஜக!ஷாக்கில் ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Haryana Result: ஹாட்ரிக் வெற்றியை பதித்த பாஜக.!அதிர்ச்சியில் ராகுல்: காங்கிரஸ் தோல்விக்கு முக்கியமான 2 காரணங்கள் ?
ஹாட்ரிக் வெற்றியை பதித்த பாஜக.!அதிர்ச்சியில் ராகுல்: காங்கிரஸ் தோல்விக்கு முக்கியமான 2 காரணங்கள் ?
savitri jindal: பாஜகவிலிருந்து நீக்கம்: சுயேட்சையாக போட்டியிட்டு வென்ற நாட்டின் பணக்கார பெண்: யார் இவர் ?
பாஜகவிலிருந்து நீக்கம்: சுயேட்சையாக போட்டியிட்டு வென்ற நாட்டின் பணக்கார பெண்: யார் இவர் ?
MACE Telescope: உலகிலேயே மிக உயரமான தொலைநோக்கி: இந்திய அணுசக்தி துறை அசத்தல்: பயன்கள் என்ன தெரியுமா?
உலகிலேயே மிக உயரமான தொலைநோக்கி: இந்திய அணுசக்தி துறை அசத்தல்: பயன்கள் என்ன தெரியுமா?
Admk Human Chain Protest: திமுக அரசு 2026 சட்டமன்ற தேர்தலில் வீட்டிற்கு அனுப்பப்படும் - செம்மலை
திமுக அரசு 2026 சட்டமன்ற தேர்தலில் வீட்டிற்கு அனுப்பப்படும் - செம்மலை
Haryana, J&K Election Result LIVE: 'முதல்வர் பதவி வழங்கப்பட்டால் வேண்டாம் என்று கூறமாட்டேன்' - பாஜகவின் அனில் விஜ்
Haryana, J&K Election Result LIVE: 'முதல்வர் பதவி வழங்கப்பட்டால் வேண்டாம் என்று கூறமாட்டேன்' - பாஜகவின் அனில் விஜ்
கலைஞர் நூற்றாண்டுப் பூங்காவின் நுழைவுக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
கலைஞர் நூற்றாண்டுப் பூங்காவின் நுழைவுக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
Nobel Prize 2024: செயற்கை நரம்பியல் வலைப்பின்னல் மூலம் இயந்திரக் கற்றல்: இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு
Nobel Prize 2024: செயற்கை நரம்பியல் வலைப்பின்னல் மூலம் இயந்திரக் கற்றல்: இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு
TN Cabinet Meeting: 47 ஆயிரம் பேருக்கு வேலை; அமைச்சரவைக் கூட்டத்தில் 14 புது முதலீடுகளுக்கு ஒப்புதல்
TN Cabinet Meeting: 47 ஆயிரம் பேருக்கு வேலை; அமைச்சரவைக் கூட்டத்தில் 14 புது முதலீடுகளுக்கு ஒப்புதல்
Embed widget