மேலும் அறிய

அதிமுகவினர் 10 ஆண்டு காலத்தை, கொள்ளையடிக்க பயன்படுத்தினர் - அண்ணாமலை குற்றச்சாட்டு

மத்திய அரசினுடைய திட்டங்களை கொள்ளையடிப்பதற்காக மட்டுமே கடந்த 10 ஆண்டு காலத்தை பயன்படுத்திருக்கின்றனர்.

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கோவை மக்களவை தொகுதி பாஜக வேட்பாளரும், பாஜக மாநிலத் தலைவருமான அண்ணாமலை கலந்து கொண்டு உரையாற்றினார். பின்னர் அண்ணாமலை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “மக்கள் தன்னெழுச்சியாக வர துவக்கி விட்டனர். களத்தின் நிலவரத்தை நீங்கள் பார்க்கின்றீர்கள். சாதாரண பொதுமக்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள் களத்திற்கு வந்திருக்கிறார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி கோயம்புத்தூரில் குறைந்தபட்சம் 60 சதவீதம் வாக்குகள் பெறும். தேசிய ஜனநாயக கூட்டணி குறைந்தது 60 சதவீத வாக்குகள் பெறும். நான் சொன்னது என்னுடைய கருத்து. அதில் வேற என்ன செய்ய முடியும்? தமிழகத்தில் ஊழலை பற்றி பேசக்கூடிய முதல் அரசியல் தலைவர் யார் இருக்கின்றார்?” எனத் தெரிவித்தார்.

அதிமுக மீது விமர்சனம்

கோவையின் வளர்ச்சி குறித்து விவாதிக்க தயாரா என அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் அழைப்பு விடுத்துள்ளது குறித்த கேள்விக்கு, ”எஸ்.பி வேலுமணியை கொண்டு வந்து உட்கார வையுங்கள். மத்திய அரசில் நடைபெற்று இருக்கக்கூடிய கூடிய ஊழலை 10 கேள்வியாக கொடுக்கின்றேன். எஸ்.பி.வேலுமணியை  கொண்டு வந்து உட்கார வையுங்கள். 10 வருடமாக எதுவும் நடக்க வில்லை என்றால், ஸ்மார்ட் சிட்டி பணம் என்னென்ன பணம் கோவைக்கு வந்திருக்கிறது. கான்டிராக்டர் யார்? கோவைக்கு 2021 தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது ஸ்டாலின் என்ன சொன்னார்? ஆட்சிக்கு வந்தால் நடவடிக்கை எடுப்பேன் என்று சொன்னாரே?

மணி என்று யாருக்கெல்லாம் பெயர் இருக்கோ அவங்க மீது நடவடிக்கை எடுப்பேன் என்றார். இப்பொழுது இருவரும் அண்ட் கோ போட்டு இருக்கின்றனர். ஊழல் தடுப்புத்துறை இவர்கள் மீது போடப்பட்ட குற்றப்பத்திரிகை எங்கே போனது? திமுகவும் அதிமுகவும் ஒன்றாக இணைந்து விட்டார்கள். லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்திய பின்பு குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய ஏன் தாமதம்? எஸ்.பி வேலுமணியை பிரஸ்மீட்டில் உட்கார வையுங்கள். பத்து கேள்வி எழுதிக் கொடுக்கிறேன். அந்த கேள்விக்கு பதிலை வாங்கி வாருங்கள். காண்ட்ராக்டர் பெயர், எந்த காண்ட்ராக்டர் வேலை எடுத்த காண்ட்ராக்டர் மனைவி கவுன்சிலர் பதவிக்கு நின்றார் என்ற பட்டியல்களை கொடுக்கின்றேன். மத்திய அரசினுடைய திட்டங்களை கொள்ளையடிப்பதற்காக மட்டுமே கடந்த 10 ஆண்டு காலத்தை பயன்படுத்திருக்கின்றனர்” எனத் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget