மேலும் அறிய

Lok Sabha Election 2024: ராமநாதபுரத்தில் திமுக, பாஜக கூட்டணியை விட்டு விளாசிய நடிகை விந்தியா

திமுக பயங்கரமாக பொய் சொல்லும்! பாஜக, சொல்ற பொய்யை பயங்கரமாகச் சொல்லும் - நடிகை விந்தியா அதிரடி

ராமநாதபுரம் மக்களவை தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாளை ஆதரித்து ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நடிகை விந்தியா பிரச்சாரம் மேற்கொண்டு பேசினார்.
 
அப்போது பேசிய கொள்கை பரப்புச் செயலாளர் விந்தியா,  பிரச்சனை என்று ஒன்று வந்து விட்டால் முதலில் களத்தில் இருந்து கிளம்பும் 'ஆம்பள' ராமநாதபுரத்தில் இருந்து தான் வருவார்கள். மேலும் பேசிய அவர், பாஜக கூட்டணியில் டிடிவி தினகரனையும், ஓபிஎஸ் ஐயும் பயங்கரமாக அசிங்கப்படுத்துகிறார்கள் எவ்வளவு மரியாதையோடு வாழ்ந்தவர்கள் அவர்கள். நீங்கள் எல்லாம் யோசித்துப் பாருங்கள். இவர்கள் மக்களுக்காக கூட்டணி சேர்ந்து இருக்கிறார்களா?, அவர்களின் சுயநலத்திற்காக, அவர்களின் வாரிசுகளுக்காக, அவர்களுடைய ஆதாயத்திற்காக கூட்டணி சேர்ந்து இருக்கிறார்கள். தயவு செய்து பாஜக கூட்டணியை நம்பாதீர்கள். திமுகவிற்கும் பாஜகவிற்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. திமுக பயங்கரமாக பொய் சொல்லும். பாஜக, சொல்ற பொய்யை, பயங்கரமாகச் சொல்லும். திமுக, திராவிட மாடல் என ஏமாற்றும். பாஜக, இண்டியா மாடல் என ஏமாற்றும்.திமுக, கடவுளை திட்டிக்கிட்டே சாமி கும்பிடும். பாஜக, கடவுளே திட்ற அளவிற்கு சாமி கும்பிடும்.ஸ்டாலின், மகனைப் பற்றி மட்டுமே யோசிப்பார். மோடி, மதத்தைப் பற்றி மட்டுமே யோசிப்பார்.

Lok Sabha Election 2024: ராமநாதபுரத்தில் திமுக, பாஜக கூட்டணியை விட்டு விளாசிய நடிகை விந்தியா
 
ஸ்டாலின், தினமும் விக் வைப்பார். மோடி, ஒரு நாள் நாட்டையே விக்க வைப்பார். மனைவி, மகன், மருமகளுக்கு, ஸ்டாலின் பினாமி. மோடி, அம்பானி அதானிக்குப் பினாமி.திமுக, மக்கள்கிட்டேயே திருடுவாங்க. பாஜக, மாநிலங்கள் கிட்டயே திருடுவாங்க. திமுக, திருட்டு ஸ்பெஷலிஸ்ட். பாமக உருட்டு ஸ்பெஷலிஸ்ட். பாஜக, பாரத மாதாக்கு ஜே. திமுக, ஸ்டாலின் பேட்டாக்கு ஜே. பாஜகவும், திமுகவும் ஆபத்தானவர்கள். மக்களுக்கு இரண்டு பேருமே தேவை இல்லை.தேர்தல் வந்தால் போதும், மக்களை ஏமாற்றுவதற்காக திமுக நிறைய பேசுவார்கள். இஷ்டத்திற்கு தேர்தல் அறிக்கை. 500 ரூபாய்க்கு கேஸ் தருவதாகச் சொல்வார்கள். ஆனால் சிலிண்டரில் கேஸ் இருக்காது. 75 ரூபாய்க்கு பெட்ரோல் தருவதாகச் சொல்வார்கள். ஆனால் அரை லிட்டர் தான் தருவார்கள். 65 ரூபாய்க்கு டீசல் தருவதாகச் சொல்வார்கள். ஆனால் தகுதியான டிரைவர்ஸ்க்கு மட்டுமே தருவோம் என்பார்கள்.
 
தேர்தல் சமயத்தில் மக்களை ஏமாற்ற, திமுக என்ன வேண்டும் என்றாலும் பேசும். தேர்தலுக்கு முன்னாடி திமுக ஒரு மாதிரி பேசுவாங்க. தேர்தலுக்குப் பின்னாடி திமுக ஒரு மாதிரி பேசுவாங்க. தேர்தல் சமயத்தில் திமுக, வோட்டு மட்டும் பற்றியே கவலைப் படுவார்கள். தேர்தல் முடிஞ்ச பிறகு, அவங்க வீட்டை மட்டும் பற்றியேக் கவலைப்படுவார்கள். எனப் பேசி, நடிகை விந்தியா, இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Thalapathy Vijay:
"எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
Embed widget