Local Body Election: போஸ்டரை கிழிச்சிட்டு வேட்பாளரிடம் பணத்தை வாங்குங்க - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
விதிகளை மீறி ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை அகற்றி அதற்கான செலவை வேட்பாளர்களிடம் வசூலிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 22ஆம் தேதி நடைபெறுகிறது. விறுவிறுவென நடக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரசாரம் நாளை மாலையுடன் முடிய இருக்கிறது. இந்நிலையில், நகர்ப்புற தேர்தல் பரப்புரைக்காக விதிகளை மீறி போஸ்டர்கள் ஒட்ட அனுமதி அளிக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை தேனாம்பேட்டையில் தனது போஸ்டர் மீது திமுக வேட்பாளரின் ஒட்டப்பட்டதாக கூறி அதிமுக வேட்பாளர் ஆறுமகம் வழக்கு தொடர்ந்திருந்தார். அதனை அடுத்து, இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் நகர்ப்புற தேர்தல் பரப்புரைக்காக விதிமுறைகள மீறி போஸ்டர்கள் ஒட்ட அனுமதி தரக்கூடாது எனவும், ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை அகற்றி அதற்கான அதன் செலவை வேட்பாளர்களிடம் வசூலிக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தேர்தல் என்ற பெயரில் நகரை குப்பைமேடாக மாற்றக்கூடாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விதிமுறைகளை மீறி போஸ்டர் ஒட்டியவர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: போஸ்டர்களை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவுhttps://t.co/bYS4qhK8XM | #LocalBodyElection #Posters #madrashighcourt pic.twitter.com/AoLrYByHZf
— ABP Nadu (@abpnadu) February 16, 2022
தேர்தல் அட்டவணை
வேட்பு மனு தாக்கல் துவங்கும் நாள் - ஜனவரி 28 (காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை)
வேட்புமனு தாக்கல் இறுதி நாள் - பிப்ரவரி 4
வேட்பு மனுக்கள் பரிசீலனை - பிப்ரவரி 5
வேட்பு மனு திரும்ப பெருவதற்கான கடைசி தேதி - பிப்ரவரி 7
வாக்கு பதிவு நடைபெறும் தேதி - பிப்ரவரி 19
வாக்கு பதிவு நேரம் - காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் - பிப்ரவரி 22
தேர்தல் நடவடிக்கைகள் முடிவு பெறும் நாள் - பிப்ரவரி 24
தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்கள் பதவி ஏற்பு நாள் - மார்ச் 2
துணை மேயர், மேயர் பதவிகளுக்கு தேர்தல் - மார்ச் 4
தமிழ்நாட்டின் உள்ளாட்சி அமைப்புகளுடைய பதவி காலம் முடிவடைந்தும் நீண்ட காலம் அவற்றுக்கு தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இந்த சூழலில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திருநெல்வேலி, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர் தென்காசி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு கடந்த 2021-ம் வருடம் அக்டோபர் 6 மற்றும் 9-ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இதையடுத்து தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்