மேலும் அறிய

Local Body Election 2022 | எங்கள் கட்சி வேட்பாளர்கள் கடத்தப்படுகிறார்கள்; நாம் தமிழர் கட்சியை பார்த்து திமுக பயப்படுகிறது - சீமான் பேட்டி

தேர்தல் அமைப்பு முறையில் சீர்திருத்தம் செய்வதை விட்டுவிட்டு ஒரே நாடு ஒரே தேர்தல் என சொல்கிறார்கள். "ஒரே நாடு ஒரே தேர்தல்" சாத்தியமற்றது

நாம் தமிழர் கட்சியின் சார்பில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறும் பொழுது, நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்களை நம்பி தேர்தலை சந்திப்பதாகவும் அதிகாரத்தில் இருப்பவர்கள் தான் வெற்றி பெறுவார்கள் என்பது சர்வாதிகார போக்கு என தெரிவித்தார். பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஆட்சி காலத்தில் ஜனநாயக முறைப்படி நடந்தது, ஆளுங்கட்சிக்கு ஆதரவாகதான் தேர்தல் ஆணையம் செயல்படும்.

Local Body Election 2022 | எங்கள் கட்சி வேட்பாளர்கள் கடத்தப்படுகிறார்கள்;  நாம் தமிழர் கட்சியை பார்த்து திமுக பயப்படுகிறது -  சீமான் பேட்டி

"அதிமுக ஆட்சியில் நடந்த தேர்தலில் ஆட்கடத்தல் நடக்கவில்லை. வேட்புமனு தாக்கல் செய்யும் போது அடிக்கவில்லை. தற்போது திமுக ஆட்சியில் தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் கடத்தப்படுகிறார்கள். திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே கருத்துரிமையை முடக்குகிறார்கள். அது பைத்தியக்காரத் தனம், ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே ரேசன், ஒரே மதம், ஒரே சட்டம், ஒரே கல்வி முறை என்பதையெல்லாம் ஏற்க முடியாது. என்னுடைய பண்பாடு, என்னுடைய கலாச்சாரம், என்னுடைய மொழி, என்னுடைய இலக்கியம், என்னுடைய வரலாறு என்பதே வேறு, வரலாற்றை மறந்தால் வழி தெரியாது, தமிழ்நாட்டிற்கு சட்டடபை தேர்தலை ஒரே கட்டமாக நடத்துகிறீர்கள் சரி. ஆனால் இந்தியாவிற்கு நான்கு கட்டமாக நடத்துகிறீர்கள். அதையே மேற்கு வங்கத்தில் 13 கட்டமாக நடத்துகிறீர்கள்.  ஒரு மாநில தேர்தலையே பல கட்டமாக நடத்துகிறார்கள். ஒரு மாநிலத்தில் பிரச்சனை என்றால் அந்த மாநிலத்தில் ஆட்சி கலையும் பட்சத்தில் அத்தனை இடங்களிலும் தேர்தல் நடத்த முடியுமா எனவும் கேள்வி எழுப்பினார். இந்தியாவில் பயன்படுத்தப்படும் வார்த்தை இயந்திரங்களை தயாரிக்கும் ஜப்பானில் வாக்கு சீட்டில் தான் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தேர்தல் அமைப்பு முறையில் சீர் திருத்தம் செய்வதை விட்டுவிட்டு ஒரே நாடு ஒரே தேர்தல் என சொல்கிறார்கள். மேற்கு வங்கத்தை போல தமிழகத்தின் சட்டமன்றமும் முடக்கப்படும் என எடப்பாடி பழனிச்சாமி சொல்வது அவருக்கான ஆசை, பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று நடக்கும் ஆட்சியை கலைக்க எந்த முகாந்திரமும் தமிழகத்தில் இல்லை, திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது ஆறு மாதத்தில் ஆட்சி மாறும் என ஸ்டாலின் சொன்னதை போல் இப்போது எடப்பாடி பழனிச்சாமியும் சொல்கிறார். பாஜகவை எதிர்த்து திமுக குரல் கொடுத்தால் திமுக குடும்பத்தில் பல நபர்கள் திகார் சிறையில் தான் இருக்க வேண்டும். மத அடையாளங்கள் உடன் பள்ளிக்கு வரக்கூடாது என சொல்கிறார்கள். ஆனால் மத அடையாளங்களுடன் சட்டமன்றம் பாராளுமன்றத்திற்கு செல்வது என்ன நியாயம் என்று கேள்வி எழுப்பினார். தேர்தல் ஆணையத்திற்கும், தேர்தலுக்கும் சம்பந்தம் இல்லாததுபோல் செயல்படுகிறார்கள். பறக்கும் படை ஒரு சொரி, சிறங்கு படை, கஷ்டப்பட்ட பாவப்பட்ட நபர்களிடம் மட்டுமே சோதனையை நடத்துகிறார்கள்.

Local Body Election 2022 | எங்கள் கட்சி வேட்பாளர்கள் கடத்தப்படுகிறார்கள்;  நாம் தமிழர் கட்சியை பார்த்து திமுக பயப்படுகிறது -  சீமான் பேட்டி

ஆர்.கே.நகரில் 80 கோடி காசு கொடுத்தார்கள் என்று சொல்லி தேர்தலை நிறுத்திய தேர்தல் ஆணையம் மீண்டும் தேர்தல் நடந்தபோது புகாருக்கு உள்ளானவரே தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். 80 கோடி கொடுத்தார் என்று தேர்தலை நிறுத்தியதால் ஏற்பட்ட நன்மை என்ன? தேர்தலில் பணம் கொடுத்தால் 10 ஆண்டுகள் தேர்தலில் நிற்க தடை என சட்டம் கொண்டு வந்து அவர்களை கைது செய்தால் யாரும் காசு கொடுக்க மாட்டார்கள். ஆனால் நீங்கள் அதை செய்யவில்லையே, நாம் தமிழர் கட்சியை பார்த்து திமுக பயப்படுகிறது. அதனால்தான் எங்கள் கட்சி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்கள் கடத்தப்படுகிறார்கள்” என தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

''ஆசிரியர்களை விற்கத் துடிக்கும் பள்ளிக் கல்வித்துறை; பெரும் அவமானம்''- அன்புமணி கண்டனம்; காரணம் என்ன?
''ஆசிரியர்களை விற்கத் துடிக்கும் பள்ளிக் கல்வித்துறை; பெரும் அவமானம்''- அன்புமணி கண்டனம்; காரணம் என்ன?
”நடிகை கஸ்தூரி முன் ஜாமீன் மனு தள்ளுபடி” விரைவில் கைதாக வாய்ப்பு..!
”நடிகை கஸ்தூரி முன் ஜாமீன் மனு தள்ளுபடி” விரைவில் கைதாக வாய்ப்பு..!
Kanguva movie : காலையிலே சோகம்.! கங்குவா பார்த்து நொந்து போன சூர்யா ரசிகர்கள்.. நீங்களே பாருங்க!
Kanguva movie : காலையிலே சோகம்.! கங்குவா பார்த்து நொந்து போன சூர்யா ரசிகர்கள்.. நீங்களே பாருங்க!
”ஆதவ் அர்ஜூனா வீட்டில் ED ரெய்டு”  சிக்குகிறாரா லாட்டரி மார்டின்..?
”ஆதவ் அர்ஜூனா வீட்டில் ED ரெய்டு” சிக்குகிறாரா லாட்டரி மார்டின்..?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vignesh Mother | ’’ஒழுங்கா TREATMENT பாக்கலடாக்டர் தரக்குறைவா நடத்துனாரு’’விக்னேஷின் தாய் கதறல்Khalistani Terrorist attack Ram Temple | ”ராமர் கோயிலை இடிப்போம்”தேதி குறித்த தீவிரவாதிகள்Guindy Doctor Stabbed Accused Video | டாக்டருக்கு சரமாரி  கத்திக்குத்து!கூலாக நடந்து வந்த இளைஞன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
''ஆசிரியர்களை விற்கத் துடிக்கும் பள்ளிக் கல்வித்துறை; பெரும் அவமானம்''- அன்புமணி கண்டனம்; காரணம் என்ன?
''ஆசிரியர்களை விற்கத் துடிக்கும் பள்ளிக் கல்வித்துறை; பெரும் அவமானம்''- அன்புமணி கண்டனம்; காரணம் என்ன?
”நடிகை கஸ்தூரி முன் ஜாமீன் மனு தள்ளுபடி” விரைவில் கைதாக வாய்ப்பு..!
”நடிகை கஸ்தூரி முன் ஜாமீன் மனு தள்ளுபடி” விரைவில் கைதாக வாய்ப்பு..!
Kanguva movie : காலையிலே சோகம்.! கங்குவா பார்த்து நொந்து போன சூர்யா ரசிகர்கள்.. நீங்களே பாருங்க!
Kanguva movie : காலையிலே சோகம்.! கங்குவா பார்த்து நொந்து போன சூர்யா ரசிகர்கள்.. நீங்களே பாருங்க!
”ஆதவ் அர்ஜூனா வீட்டில் ED ரெய்டு”  சிக்குகிறாரா லாட்டரி மார்டின்..?
”ஆதவ் அர்ஜூனா வீட்டில் ED ரெய்டு” சிக்குகிறாரா லாட்டரி மார்டின்..?
Breaking News LIVE 14th Nov 2024: அப்போலோ மருத்துவமனையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அனுமதி.
Breaking News LIVE 14th Nov 2024: அப்போலோ மருத்துவமனையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அனுமதி.
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வார்டன் வேலைக்கு செல்லலாம்; அரசின் அறிவிப்பால் எழும் எதிர்ப்புகள்!
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வார்டன் வேலைக்கு செல்லலாம்; அரசின் அறிவிப்பால் எழும் எதிர்ப்புகள்!
Doctors Strike: அய்யய்யோ! தமிழ்நாடு முழுவதும் டாக்டர்கள் இன்று வேலைநிறுத்தம் - லட்சக்கணக்கான மக்கள் அவதி
Doctors Strike: அய்யய்யோ! தமிழ்நாடு முழுவதும் டாக்டர்கள் இன்று வேலைநிறுத்தம் - லட்சக்கணக்கான மக்கள் அவதி
Kanguva: உலகெங்கும் ரிலீசானது கங்குவா! தியேட்டரை திருவிழாவாக மாற்றும் சூர்யா ஃபேன்ஸ்!
Kanguva: உலகெங்கும் ரிலீசானது கங்குவா! தியேட்டரை திருவிழாவாக மாற்றும் சூர்யா ஃபேன்ஸ்!
Embed widget