மேலும் அறிய

Karnataka Opinion Poll: பகுதி வாரியான நிலவரம்… 'கை' ஓங்கும் இடங்கள் எங்கே? ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்பு..!

ஹைதராபாத் கர்நாடகாவை பொறுத்தவரை எப்போதுமே காங்கிரஸ் கோட்டையாகவே இருந்து வந்துள்ளது, கடந்த முறை கூட 42 சதவிகித வாக்குகளைப் பெற்று 15 இடங்களை அந்த பகுதியில் கைப்பற்றி இருந்தது காங்கிரஸ்.

கர்நாடக சட்டமன்ற தேர்தலின் ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்பில் ஹைதராபாத் கர்நாடகா பகுதியில் வழக்கம்போல் காங்கிரஸ் கூட்டணி ஆதிக்கம் இருக்கும் என்று தெரியவந்துள்ளது.

கர்நாடக தேர்தல்

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் வரும் மே 10 ஆம் தேதி நடைபெறுகிறது. எனவே தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்து வரும் நிலையில் நாளையுடன் பிரச்சாரங்கள் ஓய்கின்றன. தாமதிக்காமல் 13 ஆம் தேதியே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னோட்டமாக இந்தாண்டு நடைபெறும் பல மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்கள் கருதப்படுகிறது. அதில் மிக முக்கியமானது கர்நாடகா சட்டமன்ற தேர்தல். ஏனெனில் தென்னிந்தியாவை பொறுத்தவரையில் பாஜக ஆளும் ஒரே மாநிலம் கர்நாடகம் என்பதால் இந்த தேர்தல் பா.ஜ.க.வை பொறுத்தவரை மிகவும் முக்கியமான தேர்தலாக கருதப்படுகிறது.

Karnataka Opinion Poll: பகுதி வாரியான நிலவரம்… 'கை' ஓங்கும் இடங்கள் எங்கே? ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்பு..!

களை கட்டிய தேர்தல் களம்

இந்தியா முழுமைக்குமான அரசியல் விவகாரங்கள் தென்னிந்தியாவில் பாதிக்கும் ஒரே மாநிலமாக கர்நாடக இருப்பதால் இரு கட்சிகளும் கவனமாகவே காய்களை நகர்த்தி வந்தன. ஆனால் ராகுலின் நடைபயணம், எம்பி பதவி பறிப்பு போன்ற விஷயங்களும், பாஜக வின் கண்கவர் தேர்தல் அறிக்கைகளும் கள சூழலை மாற்றிக்கொண்டே இருந்தன. இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக கர்நாடக மாநிலத்தில் தேர்தல் களைகட்டியது. முக்கிய பாஜக தலைவர்கள், பிரதமர் மோடி, அமித் ஷா, யோகி என எல்லோரும் குவிய, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் காங்கிரஸ் சார்பில் மறுபுறமும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், யாருக்கு வெற்றி கிடைக்கும் என்ற கேள்வி ஒட்டுமொத்த இந்தியர்கள் மனதிலும் ஓடிக்கொண்டிருந்தது.

தொடர்புடைய செய்திகள்: Karnataka Opinion Poll: கர்நாடகாவில் எந்த மண்டலத்தில் "கை" ஓங்கும்? "தாமரை" மலரும்? ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்பு..!

ஏபிபி - சி வோட்டர் கருத்துக்கணிப்பு

இதனிடையே சமூக பொருளாதாரம் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் சி வோட்டர் நிறுவனமும், நமது ஏபிபி செய்தி நிறுவனமும் இணைந்து தேர்தலுக்கு முந்தைய  கருத்துகணிப்பை நடத்தியுள்ளது. அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த கருத்துக்கணிப்பு ஏப்ரல் 29 ஆம் தேதி முதல் மே 5 ஆம் தேதி வரை ஒரு வாரம் எடுக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 6420 பேரிடம் நடத்தப்பட்ட கருத்துகணிப்பு எடுக்கப்பட்டுள்ளது. அதில் இந்த தேர்தலில் 40.2 சதவிகித வாக்குகளை பெற்று எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் இதில் பகுதிவாரியாக யார் முன்னிலை பெறுகிறார்கள் என்பதுதான் மிகவும் அவசியமாகிறது. 

Karnataka Opinion Poll: பகுதி வாரியான நிலவரம்… 'கை' ஓங்கும் இடங்கள் எங்கே? ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்பு..!

ஹைதராபாத் கர்நாடகா நிலவரம் என்ன?

ஹைதராபாத் கர்நாடகா என்பது தெலுங்கானா மாநிலத்தை ஒட்டியுள்ள பெல்லாரி, ராய்ச்சூர் போன்ற தொகுதிகளை உள்ளடக்கிய பகுதிகள் ஆகும். ஹைதராபாத் கர்நாடகாவை பொறுத்தவரை எப்போதுமே காங்கிரஸ் கோட்டையாகவே இருந்து வந்துள்ளது, கடந்த முறை கூட 42 சதவிகித வாக்குகளைப் பெற்று 15 இடங்களை அந்த பகுதியில் கைப்பற்றி இருந்தது காங்கிரஸ். ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்பில், இந்த பகுதியில் காங்கிரஸ் கூட்டணி இம்முறை 44.6 சதவிகித வாக்குகளை பெறும் என்றும், பாஜக 37.5 சதவிகித வாக்குகளுடன் 2வது இடத்தையும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 10.4 சதவிகித வாக்குகளை பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறையை விட இம்முறை காங்கிரஸ் கூட்டணி 2.6 சதவிகிதம் அதிகமாகவும், பாஜக 0.5 சதவிகிதம் குறைவாகவும் பெரும் எனக் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. அதாவது காங்கிரஸ் கூட்டணி 18 முதல் 22 சீட்டுகளும்,பாஜக 6 முதல் 10 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 2 சீட்டுகள் வரை பெறலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இங்கு மொத்தம் 31 இடங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Sierra Vs Seltos Diesel AT: டாடா சியராவா.? கியா செல்டோஸா.? டீசல் ஆட்டோமேட்டிக் பதிப்பில் Performance கிங் யார்.? இதோ ஒப்பீடு
டாடா சியராவா.? கியா செல்டோஸா.? டீசல் ஆட்டோமேட்டிக் பதிப்பில் Performance கிங் யார்.? இதோ ஒப்பீடு
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Trump Praises India: “அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
“அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
Embed widget