மேலும் அறிய

‛சினிமாவில் வரும் ஒரு நாள் முதல்வரை போல ஒரே நாளில் அனைத்தையும் நிறைவேற்ற முடியாது’ -ப.சிதம்பரம் பிரச்சாரம்!

‛‛தி.மு.க வின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று தான் ஆட்சிக்கு வந்தால் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என கூறியது. கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுகிறது’’ -சிதம்பரம்

திருச்சி நகர்புற உள்ளாட்சி தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் திருச்சி வரகனேரி பகுதியில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியது..

‛சினிமாவில் வரும் ஒரு நாள் முதல்வரை போல ஒரே நாளில் அனைத்தையும் நிறைவேற்ற முடியாது’ -ப.சிதம்பரம் பிரச்சாரம்!

‛‛அரசியல் சாசனத்தை மதிக்காமல் ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இருந்து வந்தார்கள். தி.மு.க அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என அ.தி.மு.க வினர் கூறுகின்றனர். தி.மு.க வின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று தான் ஆட்சிக்கு வந்தால் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என கூறியது. கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுகிறது. அந்த உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சார மேடையிலேயே நின்று கொண்டு தி.மு.க தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என பேசுவது என்ன நியாயம்.

கொரோனா நிவாரண நிதி, மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள்  நிறைவேற்றப்பட்டுள்ளன. சினிமாவில் வரும் ஒரு நாள் முதல்வரை போல ஒரே நாளில் அனைத்தையும் நிறைவேற்ற முடியாது சினிமாவில் தான் ஒரு நாள் முதலமைச்சரெல்லாம் இருப்பார்கள். நிஜத்தில் அப்படி இருக்க முடியாது. ஐந்தாண்டு கால ஆட்சியில் அரசுக்கு நிதி ஆதாரங்கள் திரட்டி தான் ஒவ்வொரு திட்டங்களை செயல்படுத்த முடியும். நிச்சயம் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். அரசுக்கு அதிக அளவிலான நிதி ஆதாரங்கள் கிடைத்தால் தேர்தல் வாக்குறுதிகளில் சொல்லப்படாதவையும் தி.மு.க அரசு நிறைவேற்றும். 27 அமாவாசையில் தேர்தல் வரும் என ஈ.பி.எஸ் கிளி ஜோசியம் கூறுகிறார். அவர் அரசியலமைப்பு சட்டத்தை படித்து பார்க்க வேண்டும். ஒரு அரசுக்கு ஐந்தாண்டுகாலம் ஆயுள் காலம் உள்ளது. அரசை யாரும் முடக்க முடியாது.

‛சினிமாவில் வரும் ஒரு நாள் முதல்வரை போல ஒரே நாளில் அனைத்தையும் நிறைவேற்ற முடியாது’ -ப.சிதம்பரம் பிரச்சாரம்!

முன்னாள் முதலமைச்சர்கள் இது போல் பேசுவது தவறு. தி.மு.க அரசு  ஐந்தாண்டுகள் நிச்சயம் முழுமையாக இருக்கும். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்கிற பா.ஜ.க வின் குரலை தான் அ.தி.மு.க தற்போது பேசுகிறது. இது விஷமான பேச்சு.தமிழ்நாட்டில் பா.ஜ.க வின் பிரித்தாளும் சூழ்ச்சி எப்போதும் எடுபடாது.ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி என்பது சர்வாதிகாரத்தில் தான் போய் முடியும். இது குறித்து மக்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,’’ என கூறினார்.இந்த பிரச்சார கூட்டத்தில் திருச்சி மாநகராட்சி 31 வது வார்டில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் சுஜாதா,  தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வட மாநில நபர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை! நள்ளிரவில் பரபரப்பு
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வட மாநில நபர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை! நள்ளிரவில் பரபரப்பு
ரூ.25  லட்சம் புஸ்....! கட்டும்போதே சரிந்து விழுந்த நிழற்குடை... சிக்கலில் சிக்கிய திமுக எம்எல்ஏ
ரூ.25 லட்சம் புஸ்....! கட்டும்போதே சரிந்து விழுந்த நிழற்குடை... சிக்கலில் சிக்கிய திமுக எம்எல்ஏ
இலையில் மலரும் தாமரை.. இபிஎஸ்.. அமித் ஷாவுடன் சந்திப்பு.. என்ன பேசி இருப்பாங்க?
கூட்டணிக்கு ரெடியான இபிஎஸ்.. அமித் ஷாவுடன் சந்திப்பு.. என்ன பேசி இருப்பாங்க?
திரையுலகில் அதிர்ச்சி... இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மரணம்! காரணம் என்ன?
Manoj Passed Away: திரையுலகில் அதிர்ச்சி... இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மரணம்! காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?EPS Amit Shah:  இபிஎஸ் - அமித்ஷா சந்திப்பு.. மீண்டும் அதிமுக, பாஜக கூட்டணி? தலைவலியில் திமுக கூட்டணிசெல்வப்பெருந்தகையை மாற்ற முடிவு? அண்ணாமலை IPS, -க்கு போட்டியாக IAS! சசிகாந்த்தை டிக் அடித்த ராகுல்Shihan Hussaini Vijay | குரு துரோகியா விஜய்? ”டிராகனுக்கு டைம் இருக்கு ஹுசைனியை பாக்க மனமில்லை”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வட மாநில நபர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை! நள்ளிரவில் பரபரப்பு
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வட மாநில நபர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை! நள்ளிரவில் பரபரப்பு
ரூ.25  லட்சம் புஸ்....! கட்டும்போதே சரிந்து விழுந்த நிழற்குடை... சிக்கலில் சிக்கிய திமுக எம்எல்ஏ
ரூ.25 லட்சம் புஸ்....! கட்டும்போதே சரிந்து விழுந்த நிழற்குடை... சிக்கலில் சிக்கிய திமுக எம்எல்ஏ
இலையில் மலரும் தாமரை.. இபிஎஸ்.. அமித் ஷாவுடன் சந்திப்பு.. என்ன பேசி இருப்பாங்க?
கூட்டணிக்கு ரெடியான இபிஎஸ்.. அமித் ஷாவுடன் சந்திப்பு.. என்ன பேசி இருப்பாங்க?
திரையுலகில் அதிர்ச்சி... இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மரணம்! காரணம் என்ன?
Manoj Passed Away: திரையுலகில் அதிர்ச்சி... இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மரணம்! காரணம் என்ன?
Manoj Bharathiraja Video: சூப்பர் ஹிட் படத்தில் ரஜினிகாந்துக்கு டூப் போட்ட மனோஜ் பாரதிராஜா! வைரலாகும் வீடியோ!
Manoj Bharathiraja Video: சூப்பர் ஹிட் படத்தில் ரஜினிகாந்துக்கு டூப் போட்ட மனோஜ் பாரதிராஜா! வைரலாகும் வீடியோ!
GT vs PBKS: போராடி தோற்ற குஜராத்!  ரூதர்போர்டு போராட்டம் வீண்.. பஞ்சாப் அணி முதல் வெற்றி
GT vs PBKS: போராடி தோற்ற குஜராத்! ரூதர்போர்டு போராட்டம் வீண்.. பஞ்சாப் அணி முதல் வெற்றி
திமுக அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி
திமுக அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி
பள்ளி மாணவிக்கு நிற்காத பேருந்து; தலைதெறிக்க பின்னாலேயே ஓடிய மாணவி- இறுதியில் ட்விஸ்ட்!
பள்ளி மாணவிக்கு நிற்காத பேருந்து; தலைதெறிக்க பின்னாலேயே ஓடிய மாணவி- இறுதியில் ட்விஸ்ட்!
Embed widget