மேலும் அறிய

Erode East By Election : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்...வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி தொடக்கம்..!

தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் 1,430 வாக்கு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நடந்து வருகிறது.

ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது. தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் 1,430 வாக்கு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நடந்து வருகிறது.

தேர்தலில் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதால் ஒரு வாக்குச்சாவடிக்கு 5 இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. ஈரோடு கிழக்கில் பிப்ரவரி 7ஆம் தேதி நிலவரப்படி மொத்த வாக்களர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 பேர் உள்ளனர். 

ஆண்கள் - 1 லட்சத்து 11 ஆயிரத்து 25 பேர். 

பெண்கள் - 1 லட்சத்து 16 ஆயிரத்து 497 பேர்

இந்த வாக்களர்கள் வரும் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். 

தேர்தல் அறிவிப்பு

ஈரோடு கிழக்குத் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் திருமகன் ஈ.வெ.ரா. கடந்த ஜனவரி 4ஆம் தேதி காலமானார். அவரது மறைவால், அவர் எம்.எல்.ஏ.வாக பதவி வகித்த ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் இம்மாதம் (பிப்ரவரி,07) நிறைவடைந்தது. இறுதிநாளில் 20 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இன்று மாலையுடன் வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான நேரம் நிறைவடைந்தது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் களைக்கட்டியுள்ளது. 

விதவிதமாக மக்களை கவரும் நடவடிக்கையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எதிர்க்கட்சியினர், தொண்டர்கள் என பலரும் ஈடுபட்டு வருகின்றனர். மார்ச் 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். 

வேட்புமனு தாக்கல்

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைதேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தவர்கள், மனுவை திரும்பப் பெறுவதற்கான  நேரம் நிறைவடைந்தது. வரும் 27ம் தேதி நடைபெற உள்ள  இடைதேர்தலில் போட்டியிட 77 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

83 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், 6 பேர் வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுள்ளனர். இதையடுத்து,   இன்று மாலை 5 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 7ம் தேதி நிறைவடைந்தது. இறுதிநாளான அன்று மட்டும் 20 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். கடைசி நிமிடத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய  வந்த சிலருக்கு டோக்கன் வழங்கப்பட்டு, வேட்புமனுக்கள் பெறப்பட்டன.

இடைதேர்தலில் போட்டியிட மொத்தமாக 96 பேர் வேட்புமனுதாக்கல் செய்தனர். பரிசீலனைக்குப் பிறகு, 83 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அவர்களில் 6 பேர் தங்களது வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக்கொண்ட நிலையில், 77 பேர் இடைதேர்தலில் போட்டியிட இறுதி வேட்பாளர்களாக தேர்வாகியுள்ளனர். 

காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தி.மு.க. தரப்பில் கூட்டணி கட்சி சார்பாக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். வேட்பாளர் அறிவித்தது முதல் திமுகவினர் வாக்கு சேகரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

MK Stalin: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலினின் 6 கேள்விகள்! என்னென்ன?
MK Stalin: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலினின் 6 கேள்விகள்! என்னென்ன?
MK Stalin: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்.. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!
MK Stalin: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்.. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!
அதிமுகவில் அடுத்த டிக்கெட் காலி.. கட்சியில நடக்குறது பிடிக்கல.. சிங்கை ராமச்சந்திரன் விலகல்!
அதிமுகவில் அடுத்த டிக்கெட் காலி.. கட்சியில நடக்குறது பிடிக்கல.. சிங்கை ராமச்சந்திரன் விலகல்!
ராஜகம்பீரமா போகனுமா..? Royal Enfield Meteor 350 பைக்கில் போங்க - விலை எவ்ளோ?
ராஜகம்பீரமா போகனுமா..? Royal Enfield Meteor 350 பைக்கில் போங்க - விலை எவ்ளோ?

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலினின் 6 கேள்விகள்! என்னென்ன?
MK Stalin: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலினின் 6 கேள்விகள்! என்னென்ன?
MK Stalin: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்.. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!
MK Stalin: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்.. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!
அதிமுகவில் அடுத்த டிக்கெட் காலி.. கட்சியில நடக்குறது பிடிக்கல.. சிங்கை ராமச்சந்திரன் விலகல்!
அதிமுகவில் அடுத்த டிக்கெட் காலி.. கட்சியில நடக்குறது பிடிக்கல.. சிங்கை ராமச்சந்திரன் விலகல்!
ராஜகம்பீரமா போகனுமா..? Royal Enfield Meteor 350 பைக்கில் போங்க - விலை எவ்ளோ?
ராஜகம்பீரமா போகனுமா..? Royal Enfield Meteor 350 பைக்கில் போங்க - விலை எவ்ளோ?
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
Brezza Facelift: 6 கியர்கள்.. அசத்தலாக அறிமுகமாகும் மாருதி சுசுகி பிரெஸ்ஸா.. இத்தனை சிறப்புகளா?
Brezza Facelift: 6 கியர்கள்.. அசத்தலாக அறிமுகமாகும் மாருதி சுசுகி பிரெஸ்ஸா.. இத்தனை சிறப்புகளா?
IND vs ZIM: ஜிம்பாப்வேயிடம் சீறிய இந்தியா! பேட்டிங்கில் மாஸ்.. பவுலிங்கில் கிளாஸ்! வெற்றிப் பாதையில் கம்பேக்!
IND vs ZIM: ஜிம்பாப்வேயிடம் சீறிய இந்தியா! பேட்டிங்கில் மாஸ்.. பவுலிங்கில் கிளாஸ்! வெற்றிப் பாதையில் கம்பேக்!
திறக்கப்பட்டாத அம்பேத்கர் சிலை..7 தலித் அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள்..பா ரஞ்சித் காட்டம்
திறக்கப்பட்டாத அம்பேத்கர் சிலை..7 தலித் அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள்..பா ரஞ்சித் காட்டம்
Embed widget