மேலும் அறிய

Edappadi Palaniswamy: 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் ஜெயிப்பாரா? - இபிஎஸ் சொன்ன கணிப்பு!

2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாத காலமே உள்ளது. இப்படியான நிலையில் புதிதாக களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சி நிலவரம் குறித்து எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.

விஜய் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார். ஆனால் அரசியலில் ஏதேனும் ஒரு தேர்தலில் போட்டியிட்டால் தான் தெரியும் என எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

ஊடக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமியிடம், “தமிழகத்தின் தேர்தல் சூழ்நிலை இப்போது எப்படி இருக்கிறது?” என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “இன்னும் சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படவில்லை. அதன்பிறகு தான் நிலைமை என்னவென்று தெரியும். எனினும் ஒவ்வொரு கட்சியும் கூட்டணி அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் அதிமுகவும் தேசிய ஜனநாயக கூட்டணி அமைத்து ஒரு வலுவான கூட்டணி அமைத்துள்ளோம். தேர்தலுக்கு நாங்கள் தயாராகி விட்டோம். ஏற்கனவே  நான் ஒரு 181 தொகுதிகளில் எழுச்சி பயணத்தை மேற்கொண்டு மக்களை சந்தித்துள்ளேன்” என தெரிவித்தார். 

மேலும் அதிமுகவின் தேர்தல் பயணம் மிகச்சிறப்பாக எழுச்சியாக இருந்தது. மக்களிடத்தில் மிகப்பெரும் வரவேற்பு இருந்தது. வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றிப்பெறப் போகிறது என்பதை மக்களின் முகத்தில் பார்க்க முடிகிறது” என இபிஎஸ் தெரிவித்தார். 

தொடர்ந்து கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக இருப்பது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதில் சொன்ன எடப்பாடி பழனிசாமி, “ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் மாறுபட்ட தீர்ப்பை தான் வழங்கியிருக்கிறார்கள். 2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு அதிகமான இடங்கள் கிடைத்தது. ஆனால் 2021 சட்டமன்ற தேர்தலில் எங்களுடைய கூட்டணி 75 இடங்களுக்கு மேல் வென்றது. எனவே நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் வேறு என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும். சட்டமன்ற தேர்தலில் யார் ஆட்சிக்கு வர வேண்டும், வரக்கூடாது என மக்கள் முடிவு செய்வார்கள்.

2026 தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற வேண்டும் என மக்கள் முடிவு செய்து விட்டார்கள். கருத்து கணிப்பு எப்படி இருந்தாலும் மக்கள் கணக்கு திமுக ஆட்சியில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள். அது நிச்சயம் நடக்கும். சட்டமன்ற தேர்தலில் எங்கள் கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறுவோம்” என தெரிவித்தார்.
  
ஆட்சியில் பங்கு குறித்து திமுக காங்கிரஸ் கட்சியினர் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இது அவர்கள் கூட்டணியில் குழப்பமான சூழல் உள்ளதைக் காட்டுகிறது. தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகம் தேர்தலில் போட்டியிடுவது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு, “அந்த கட்சி ஒரு தேர்தலில் கூட போட்டியிடவில்லை. அப்படி போட்டியிட்டால் மட்டுமே அவர்களுக்கு எவ்வளவு வாக்கு வங்கி இருக்கிறது என்பது தெரிய வரும். மற்ற கட்சிகள் எல்லாம் உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தலை சந்தித்து குறிப்பிடத்தக்க வாக்குகளைப் பெற்றுள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றோர் எடுத்தவுடன் முதலமைச்சர் ஆகவில்லை. பல ஆண்டுகளாக கட்சி பணியாற்றி தான் மக்களின் நன்மதிப்பை பெற்றதன் அடிப்படையில் தான் முதலமைச்சராகும் வாய்ப்பை மக்கள் வழங்கினார்கள். 

விஜய் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார். ஆனால் அரசியலில் கிடையாது. அவர் ஒரு தேர்தலை சந்தித்தால் தான் அதைப்பற்றி விளக்கம் சொல்ல முடியும். இளம் தலைமுறையினர் ஒரு ஆட்சியில் என்ன நடந்தது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்” என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

தலைப்பு செய்திகள்

Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
மஹிந்திரா எஸ்யுவிகளுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் சலுகை- எந்தெந்த காருக்கு எவ்வளவு?
மஹிந்திரா எஸ்யுவிகளுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் சலுகை- எந்தெந்த காருக்கு எவ்வளவு?
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
Embed widget