மேலும் அறிய

தவெக வேட்பாளர் சத்தியபாமாவை 'பெட்டி பாமா' என விமர்சித்து திமுக சூட்கேஸுடன் பிரச்சாரம்

தாராபுரம் தொகுதியில் சூட்கேஸ் பெட்டியை கையில் எடுத்துக் கொண்டு காட்டியபடி திமுகவினர் நூதன முறையில் பிரச்சாரம்.

இடைத்தேர்தலை ஒட்டி தாராபுரம் அருகே நடந்த பிரச்சாரத்தில் திமுகவினர் சூட்கேஸ் பெட்டியை காட்டி ‘பெட்டி பாமா’ என சத்தியபாமாவை விமர்சித்தனர்.

மதுராந்தகம், தாராராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் அக்டோபர் 6ஆம் தேதி இடைதேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் முடிந்த நிலையில் திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சர் விஜய் உள்ளிட்டோர் இந்த தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதால், இரு தொகுதிகளும் பரபரப்பாக பேசப்படுகிறது.

இந்த நிலையில், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் சுகன்யா சின்னக்கம்பாளையம் பேரூராட்சி பகுதிகளில் கிராமம் கிராமமாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

சின்னக்கம்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட பஞ்சப்பட்டி, சின்னக்கம்பாளையம், கொட்டமுத்தாம்பாளையம், தேவநல்லூர், சங்கராபுரம், குமராபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திமுக வேட்பாளர் சுகன்யா பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தார்.

கொட்டமுத்தாம்பாளையம் பகுதியில் நடைபெற்ற பிரச்சாரத்தின்போது பேசிய திருப்பூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் இல. பத்மநாபன், அதிமுகவில் உழைத்த கட்சியினருக்கு சத்தியபாமா துரோகம் இழைத்துவிட்டதாக விமர்சித்தார். மேலும், சத்தியபாமாவை ‘பல்டி பாமா’, ‘பெட்டி பாமா’ என விமர்சித்த அவர், பதவி ஆசையுடனேயே அவர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்ததாகவும் குற்றம்சாட்டினார்.

இதனைத் தொடர்ந்து, சூட்கேஸ் பெட்டியை கையில் எடுத்துக் கொண்டு காட்டியபடி, திமுகவினர் நூதன முறையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் பேசிய திமுக வேட்பாளர் சுகன்யா, “சத்தியபாமா போல் நான் பெட்டியை வாங்கிக்கொண்டு செல்ல மாட்டேன். உங்களுக்காக கடைசி வரை உழைப்பேன்” எனக் கூறி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
மேலும், உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து தன்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

இதனிடையே, பிரச்சாரத்திற்கு வந்த திமுக வேட்பாளர் சுகன்யாவுக்கு அப்பகுதி பொதுமக்கள் மேளதாளங்கள் முழங்க, பட்டாசுகள் வெடித்து, ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், சின்னக்கம்பாளையம் பகுதியில் நடைபெற்ற இந்த நூதனமான ‘பெட்டி’ பிரச்சாரம் அப்பகுதியில் கவனம் பெற்றது.

Advertisement

தலைப்பு செய்திகள்

Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
"பெண்கள் நின்றால் பஸ் நிக்காதா?" - மகளிர் இலவச பேருந்தின் கொடூர முகம்! கொந்தளிக்கும் மக்கள்
Embed widget