Cpi Candidates: சிபிஐ சார்பாக போட்டியிடும் திருப்பூர், நாகை தொகுதி வேட்பாளர்கள் அறிவிப்பு
சிபிஐ கட்சி சார்பாக போட்டியிடும் திருப்பூர், நாகை தொகுதி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள அறிவிக்கப்பட்டுள்ளனர். நாகை தொகுதியின் வேட்பாளராக வை.செல்வராஜ்-ம், திருப்பூர் தொகுதியின் வேட்பாளராக கே. சுப்பராயன்-ம் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணி:
ஏழு கட்டங்களாக இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் முதல் கட்டத்திலேயே ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
Also Read: DMK Alliance: திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை தொகுதி?; அதிகாரப்பூர்வ பட்டியல் இதோ!
இந்நிலையில், திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இறுதியும் செய்யப்பட்டன. மக்களவைக்கான தேர்தலில், திமுக கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு, மாநிலங்களவை ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
திமுக 21 மக்களவை தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரசுக்கு தமிழ்நாட்டில் 9 தொகுதிகளும், புதுச்சேரி மக்களவை தொகுதியும் என மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
விசிக, சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகளுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன். மதிமுக, இ.யூ.மு.லீக், கொ.ம.தே.க ஆகிய கட்சிகள் ஒரு தொகுதியிலும் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ஒவ்வொரு கட்சியும் வேட்பாளர்களை இறுதி செய்யும் பணியில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.
இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். நாகை தொகுதியின் வேட்பாளராக வை.செல்வராஜ்-ம், திருப்பூர் தொகுதியின் வேட்பாளராக கே. சுப்பராயன்-ம் போட்டியிடுவதாக சிபிஐ கட்சி அறிவித்துள்ளது.
Also Read: Durai Vaiko: திருச்சியில் மதிமுக சார்பாக துரை வைகோ போட்டி - வைகோ அறிவிப்பு