IJK Campaign : ஆயிரத்து 500 ஏழை எளிய குடும்பங்களுக்கு இலவச உயர் மருத்துவ காப்பீடு வழங்கப்படும் - பாரிவேந்தர் பரப்புரை
டாக்டர் பாரிவேந்தருக்கு ஆதரவாக, IJK தலைவர் ரவிபச்சமுத்து வீதி வீதியாகச் சென்று பொதுமக்களிடம் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் டாக்டர் பாரிவேந்தருக்கு ஆதரவாக, IJK தலைவர் ரவிபச்சமுத்து வீதி வீதியாகச் சென்று பொதுமக்களிடம் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் IJK சார்பில் டாக்டர் பாரிவேந்தர் போட்டியிடுகிறார். இந்த நிலையில், டாக்டர் பாரிவேந்தருக்கு ஆதரவாக, IJK தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து, வீதி வீதியாக நடந்து சென்று தாமரை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். லால்குடி சட்டமன்ற தொகுதியின் கல்லக்குடி பகுதியில் உள்ள ஏரிக்கரை சிவன் கோயிலில் வழிபாடு செய்த பின், வாண வேடிக்கை மற்றும் மேளதாளம் முழங்க. இளைஞர் பட்டாளம் புடைசூழ, பொதுமக்களிடம் அவர் வாக்கு சேகரித்தார். இதனைத்தொடர்ந்து, கல்லக்குடி புனித அந்தோணியார் ஆலயத்தில் வழிபாடு செய்த டாக்டர் ரவிபச்சமுத்து, அங்கு இருந்த மக்களிடம் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது உரையாற்றிய அவர், டாக்டர் பாரிவேந்தர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியை, பொதுமக்களின் தேவைக்காக முழுமையாக செலவு செய்து நலத் திட்டங்களை நிறைவேற்றினார் எனத் தெரிவித்தார். கடந்த தேர்தலின்போது அளித்த வாக்குறுதியினபடி, ஆயிரத்து 200 ஏழை மாணவர்களை டாக்டர் பாரிவேந்தர் படிக்க வைத்தார் எனவும், தற்போது மீண்டும் அந்த திட்டம் தொடரும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும் ஆயிரத்து 500 ஏழை எளிய குடும்பங்களுக்கு இலவச உயர் மருத்துவ காப்பீடு வழங்கப்படும் எனவும் அவர் உறுதி அளித்தார். நேர்மையான, எளிதில் பழகக்கூடிய டாக்டர் பாரிவேந்தருக்கு, தாமரை சின்னத்தில் வாக்களித்து மீண்டும் வெற்றி பெற செய்ய வேண்டுமென பொதுமக்களிடம் டாக்டர் ரவிபச்சமுத்து கேட்டுக்கொண்டார்.